ஸ்ரீ தர்மதேவர்
போகர் :-
“சற்குருவே! ஸ்ரீ தர்ம ராஜாவாகிய
கால மகா பிரபு ஸ்ரீ
ஆயுர்தேவியை வணங்கும் தாத்பர்யம் என்ன?”
அகத்தியர் :-
“அணுவினும் சிறிய கிருமிகள் முதல்
பெரிய பிராணிகள், தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின், தேவாதிதேவரின்
கால முடிவை இறை நியதிப்படி
பரிபாலிப்பவரே ஸ்ரீ எமதர்மராஜாவாகிய ஸ்ரீ
கால மகாபிரபு”
பூலோகத்தில்
மக்கள் “எமபயம் நீங்க” மந்திரங்களைச் சொல்லி வழிபாடுகளையும் நிகழ்த்துகின்றனர்.
இந்த மனோநிலையைச் சற்று விருத்தி செய்து,
எமபயம் நீங்குவதைவிட தங்களுடைய பூஜைகளும், ம்ருத்யுஞ்ஜய ஹோமங்களும், தான தருமங்களும், இறையருளால்
ஆயுளை விருத்தி செய்கின்றன என உணருவது சத்தியமானதாகும்.
ஸ்ரீ
கால மகாபிரபு தம்முடைய இறைப்பணியை அவரவர் கர்ம வினைகளுக்கேற்பச்
செவ்வனே செய்து வருகிறார். இல்லாவிடில்
பிராணிகளும், தாவரங்களும் மக்களோடு மக்களாய்ப் பெருகி உலகமே இட
நெருக்கடியில் ஸ்தம்பித்து விடும்.
மரண பயம்
வேண்டாம்
மனிதர்கள்
இன்னமும் மரணம் என்பதைத் தாங்க
முடியாத துன்பமாகத்தான் கருதுகின்றார்கள். மரணத்திற்குப்பின் வாழ்வு என்பதை உணர்ந்தாலும்
மனித மனம் அதன் நிலைகளை
உணர்வதில்லை. ஸ்ரீ எமதர்மராஜா ஓர்
உயிரை ஒரு தேகத்தில் இருந்து
பிரித்து மற்றொரு தேகத்திற்கு எடுத்து
செல்லும் அதி அற்புதமான இறைப்பணி
புரிகிறார்.
எனவே
எமனைக் கண்டு அஞ்ச வேண்டாம்!
அவரவர்
விதி நிர்ணயத்திற்கேற்ப மரணத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு எமபயம்
இராது. தியானத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு
மனிதனும் ஸ்ரீ ரமண மகரிஷிபோல
தினந்தோறும் தன்னுடய மரணத்தை ஒத்திகை
பார்த்துக் கொண்டால் அது அற்புதமான தியானமாக
மலர்ந்து “ஆத்மா அழிவற்றது. ஆத்மா
குடியிருக்கும் கோயில்களே தேக சரீரங்கள்” என்பதை அறிவர். உண்மையில்
தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகையே.
ஸ்ரீ
ஆயுர்தேவி திருஉருவ படத்தில் பிரசன்னமாகியிருப்பவர்கள் ஸ்ரீ சுதர்மனன் என்ற
ஸ்ரீ காலமகாப்பிரபுவும் அவர் பத்தினி தெய்வமாகிய
ஸ்ரீ சுதர்மிணியும் ஆவர்.
சுமங்கலி பாக்கியம்
கலியுகத்தில்
ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க்க சுமங்கலியாக வாழ
விரும்புகிறாள். அவளுடைய பூஜை முறைகளும்,
கற்புத் தன்மையும், பெரியோர்க்கு பணிவிடை செய்தலும், அவள்
கணவனின் ஆயுளை விருத்தியடையச் செய்யும்.
இத்தகைய குணங்களை உடைய பெண்மணிகளுக்கு மாங்கல்யப்
பிராப்தத்தையும், சுமங்கலித் தன்மையையும் இறையருளால் மேற்கண்ட ஸ்ரீ சுதர்மிணி சமேத
ஸ்ரீ காலமகா பிரபுவே மனமுவந்து
அருளி அருள்பாலிக்கின்றனர்.
போகர்
:- “அகால மிருத்யுதோஷ நிவர்த்தி பற்றி விளக்க வேண்டுகிறேன்
குருதேவா!”
விபத்துக்கள்,
தோஷங்கள் நீங்க
அகத்தியர்
:- “சில குடும்பங்களில் பித்ரு சாபங்களாலும் பித்ரு
காரியங்களைச் சரிவர செய்யாததாலும் ஏற்படுகின்ற
அகால ம்ருத்யு தோஷத்தால் நேரிடும் இள வயது மரணங்கள்,
திடீர் மரணங்கள், விபத்துக்கள், இளம் விதவைக் கோலங்கள்,
சிசு மரணங்கள் போன்ற பெருந் துன்பங்களை
ஸ்ரீ கால மகா பிரபு
நீக்கி, ஸ்ரீ ஆயுர்தேவி அனுக்கிரகத்தால்
நல்வழி காட்டுகின்றார்.
No comments:
Post a Comment