Friday, 19 January 2018

ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் வரலாறு

போகர் : “குருதேவா! ஸ்ரீ ஆயுர் தேவியின் இரண்டாவது வலகரத்தில் அமரும் பேறு பெற்ற ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் எவ்வாறு இந்த அனுக்ரகம் பெற்றார்?”

அகஸ்தியர் : “ஸ்ரீ ஆணிமாண்டவ்யரின் சரிதத்தை பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம். அவர்ஸ்ரீ விதாத்ரி தேவிஎன்னும் அம்பிகையைத் துவிதியை திதிதோறும் வழிபட்டு வந்தார். இத்திதியில் ஸ்ரீ விதாத்ரி தேவி நூறு மகாலக்ஷ்மி தேவியரின் அனுக்ரகத்தை ஒன்றாகத் திரட்டியருளும் சக்தியுடையவள்.

ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் வரலாறு


ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அற்புத தவங்கள் புரிந்து அதன் பயனை மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்த உத்தம மகரிஷியாவார். ஒரு முறை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது அந்த வனத்தில் அரசக் காவலர்களால் துரத்தப் பெற்ற கொள்ளையர்கள் இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்து ஒளிந்து கொண்டனர். மகரிஷியின் அருகில் ஆயுதங்கள் கிடப்பதைக் கண்ட சேவகர்கள்இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்எனத் தவறாக கருதி அவரைச் சிறையிலிட்டனர்.

தீர விசாரிக்காத அரசரும் அவரைக் கழுவிலேற்ற மூன்று தினங்கள் ஆகியும் யோகத்தில் திளைத்துத் தேஜோ மயமான காந்தியுடன் பிரகாசித்த அவரைக் கண்டு அஞ்சி, “இவர் மகா தபஸ்வியேஎன்று எண்ணித் தம் மக்களுடன் அவரைச் சரணடைந்து மன்னிப்புக் கோரினார்.
இத்தவறுக்கு நீ காரணமில்லைஎன்று அரசனை மன்னித்தார் மகரிஷி. பின்பு, “நான் அறக்கடவுளைக் காண்பேன். ஒன்றுமறியா எனக்கு ஏன் இந்தத் தண்டனை?” என்ற ஆத்ம விசாரத்துடன் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார். அவர் தபோபலத்தைத் தாங்க இயலாத அறக்கடவுள் அவர் முன் பிரசன்னமாகிமுனிபுங்கவரே! தாங்கள் சிறு வயதில் ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் வதைத்ததற்கான தண்டனையே இதுஎன்று விளக்கிட்டார்.

அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? குருவருளால் தவ முறைகளை யான் அறிந்ததால் அறக்கடவுளாகிய தங்களிடம் விளக்கம் கேட்டுப் பெற்றேன். ஆனால் வரப் போகும் யுகங்களில் பக்தி குன்றிவிடும். தவ முறைகள் மறைந்து விடும். குறிப்பாகக் கலியுக மக்கள் கோடி கோடியாய் மாபெரும் தவறுகளைச் செய்வர். அவர்களுக்கு எத்தகைய பெரிய தண்டனைகள் அமையுமோ என எனக்கு அச்சமாக உள்ளதுஎன்றார்.
அறக்கடவுள்முனி சிரேஷ்டரே! செய்யும் தவறுகளுக்குத் தண்டனைகள் உண்டு. ஆனால் பிராயச்சித்த் முறைகளைத் தங்களைப் போன்ற மகரிஷிகளால்தானே இறைவனிடம் பெற்றுத் தர முடியும்.” என்றார்.

ஸ்ரீ ஆணி மாண்டவ்யரின் தவம்

உடனே ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் மீண்டும் வனம் புகுந்து பல கோடி யுகங்கள் தவம் புரிந்தார். மக்கள் தம் அறியாப் பருவத்தில் செய்கின்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தங்களை அவர் வேண்டிடஸ்ரீ விதாத்ரிஎன்னும் தேவி பிரசன்னமானாள். அது முதல் அவர் ஸ்ரீ விதாத்ரி உபாசனையைத் தீவிரமாக மேற்கொண்டார். அதன் காரணமாக அவர்,குழந்தைகளுக்கான பரிகாரங்கள்

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், சகல உடல் வியாதிகள், கண்ணேறு வியாதிகள் இவற்றிற்கான காரணமும் பரிஹாரங்களும். சிறுபிள்ளைகளுக்கான வியாதிகள், திருஷ்டிகள், சாபங்கள் குழந்தைகளைப் பேணும் முறைகள், கல்வி, வீரம், இசை, ஞானம் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெறுதல் போன்ற விஷயங்களை ஆராய்ந்து குழந்தைகளுக்கும், பாலர்களுக்கும் உரித்தான தெய்வீகமான வாழ்வைப் பெற்றுத் தருவதற்கு ஆற்ற வேண்டிய பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் அருளியுள்ளார்.

           இவற்றால் பாலாரிஷ்ட தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள் எளிதில் நிவர்த்தியாகின்றன. சிறுவர்கள் மந்த புத்தியுடன் இருத்தல், பசியின்மை, மப்பு, மாந்தம், ஜலதோஷம், வயிற்றுப் போக்கு போன்ற வியாதிகளுக்கான நிவாரணங்களையும், பரிகார முறைகளையும் விவரித்துள்ளார் ஸ்ரீ ஆணிமாண்டவ்ய ரிஷி.

மொத்தத்தில் குழந்தைகள் பரிபாலனத்திற்கு ஸ்ரீ மாண்டவ்யரின் விளக்கங்கள் முதன்மையானதாகும்.

கைக்குழந்தை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திற்குரிய தேவதைகள் காக்கின்றனர்.அவர்கள் யாவர்? குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீர்க்கும் வழிகள் எனப் பல விஷயங்களை ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அருளியுள்ளார்.

போகர் : “ஸ்ரீ மாண்டவ்யரின் குழந்தை பராமரிப்புப் பற்றிய விதிகளை உரைக்க வேண்டும் ஞானகுருவே!”

அகஸ்தியர் : பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தான தருமம் செய்ய பழக்க வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டிய அறங்களை முறையாக வகுத்தவர் ஸ்ரீ மாண்டவ்யர் ரிஷியாவார்.

ஸ்ரீஆணி மாண்டவ்யர் அருளிய குழந்தைகளின் தோஷப் பரிகாரங்கள், காக்கும் தேவதைகள்
குழந்தையின் வயது
காக்கும் 
பிறர் எண்ணம்
குழந்தைபடும் வேதனை
பெற்றோர்களுக்கு ஏற்படும்
தோஷ நிவர்த்தி முறைகள்
தேவதை
துன்பம்
முதல் மாதம்
திலமாதா
பொறாமை
தூக்கம் வராது அழுதல், கபம்
தம்பதிகளுக்குள்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வேற்றுமை
நீரைப் பருக வேண்டும்
இரண்டாவது மாதம்
புங்கவி
ஏக்க எண்ணங்கள்
வயிற்றுப் போக்கு
மாமியாருடன் விரோதம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
குவளை நீர் பருக வேண்டும்
மூன்றாவது மாதம்
வைகரி
கோப எண்ணங்கள்
தலைவலி
தந்தைக்கும் மாமனாருக்கும்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
இடையே வெறுப்பு
அருகம்புல் நீர் பருக வேண்டும்
நான்காவது மாதம்
புவனா
கீழ்த்தர எண்ணங்கள்
உடல் முறுக்கி அழுதல்
தம்பதிகளுக்குள் பொய்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அருகம்புல் நீர் பருக வேண்டும்
ஐந்தாவது மாதம்
தரணி
பழிவாங்கும்
விக்கல் நோய்
நாத்தனாருடன்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
எண்ணங்கள்
மனபேதம்
துளசி நீர் பருக வேண்டும்
ஆறாவது மாதம்
பாவினி
குரோத எண்ணங்கள்
பயந்து அழுதல்
வேலை செய்யுமிடத்தில்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வீண் பழி
வில்வ நீர் பருக வேண்டும்
ஏழாவது மாதம்
ஜகதாயி
காம எண்ணங்கள்
மூத்திர கோளாறு
மேலதிகாரியிடம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மன வேற்றுமை
வன்னி இலை நீர் பருக வேண்டும்
எட்டாவது மாதம்
ஜலஜாக்ஷி
கையால் செய்த பாவம்
மூச்சுச் திணறும்
கடன் அதிகமாகும்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அரச இலை் நீர் பருக வேண்டும்
ஒன்பதாவது மாதம்
சுவர்ணாக்ஷி
காலால் செய்த பாவம்
மார்புச் சளி
கீழே விழுந்து அடி
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அதனால் துன்பம்
சுக்கு நீர் பருக வேண்டும்
பத்தாவது மாதம்
த்ரிமபாலா
உச்சி மோர்தல்
இருமல்
வாக்குத் தவறுதல்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மல்லிகைப் பூ நீர் பருக வேண்டும்
11வது மாதம்
ஜலபுத்ரீ
கட்டி அணைத்தல்
அதிசுரம்
பொருளை இழப்பர்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
பாரிஜாத நீர் பருக வேண்டும்
12வது மாதம்
விஸ்வதாயி
முத்தம் இடுதல்
அதிமூத்திரம்
நண்பர்களுக்குள்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மனபேதம்
சாமந்திப் பூ நீர் பருக வேண்டும்
இரண்டு வயது
மாலமாதா
முதுகில் தூக்குதல்
பின்னால் விழுதல்
ஒற்றைத் தலைவலி
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
மூன்று வயது
பிரபுதாரிணி


தங்கம் இழப்பு
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
கண்டங்கள் ஏற்படும்
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும

பெற்றோர்களும் ஓத வேண்டும்
நான்கு வயது
சதுராணி


சிறு கஷ்டங்கள்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
துன்பங்கள்
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும

பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஐநது வயது
பாலினிமாதா


உறவினர் இழப்பு
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஆறு வயது
பினாகினி


பிரிந்து வாழ்வர்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஏழு வயது
சப்தா


எதிரிகள் தாக்குதல்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
8 வயது முதல்
தேவதாரிணி


கணவன், மனைவி, பெற்றோர்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
15 வயது வரை
தனித் தனி வாழ்க்கை
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும


பெற்றோர்களும் ஓத வேண்டும்

No comments:

Post a Comment