Saturday, 2 September 2017

சாபத்தை போக்கிய அகத்தியர்



வேதன் என்பவன் பிணம் தின்னும் சாபம் பெற்று இருந்தான். அகத்தியர் இச்சாபத்தைப் போக்கினார். உதய காலத்தில் அகத்திய நட்சத்திரம் ஆகாயத்தில் இருந்து கொண்டு கடல்நீரை வற்றச் செய்கிறது.
துட்பண்ணியன் என்பான் பேயாய் இருந்த சாபத்தையும்இந்திர சாபத்தால் பூமியில் பிறந்து வாடிய அரம்பையின் சாபத்தையும் அகத்தியர் போக்கினார்.

தீர்த்த யாத்திரை செய்த அர்ச்சுனன் அகத்திய தீர்த்தத்தில் புனிதநீர் ஆடினான். அகத்தியரால் ஸ்தாபிக்கப் பெற்ற லிங்கம் அகத்தியலிங்கம் எனப்படும். தமிழ்நாட்டிற்கு காவிரி கிடைத்தது அகத்தியரால்தான்.இவற்றில் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

No comments:

Post a Comment