Friday 1 September 2017

அய்யாவின் அருளுரை

சித்தர்கள் மறுபடியும் மறுபடியும் மன்னித்து அருளுவதையும், எப்படி இருக்கவேண்டும் என்பதையும், தானத்தின் மகத்துவத்தையும், அகத்தியப் பெருமான் விரிவாக விளக்குவதை படித்த பின்னர் ஏனும், மனம் திருந்தி இந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அதை விட ஒரு நல்ல விஷயத்தை நாம் இந்த உலகில் செய்வதற்கில்லை என்று கூறிக் கொண்டு, அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை, அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எல்லோரும் உணர்ந்து நலம் பெறுக.    

"இறையருளால் இயம்பிடுவேன் இத்தருணம் இயம்பும்கால் பல்முனிவரோடு பிறர் நலன் தேடும் புண்ணிய ஆத்மாக்களையும் பணிந்து இயம்புவேன். காகபுஜண்டர், கும்பர், வசிட்டர் திருவடிகள் பணிந்து இத்தருணம் கருவுரார் யான் சில்வாக்கு, வாக்கும் பொதுவில் தடமாந்தருக்கும் வலுத்துவேன். என் நாமத்தில் பற்று கொண்ட சேயேனுக்கும் வலுத்துங்கால் தெய்வீகத்தை தெய்வீக நிலையிலிருந்து புரிதல் வேண்டுமப்பா.  வறிவிப்பேன் சேயே உன் ஒத்து தட மாந்தர்களும் எண்ணுகிறார்கள். வாக்கும் சித்தர்கள் யாது உரைக்கிறார்கள்? ஆகமத்தைதானே உரைகிறார்கள்.  வலுத்துவேன் முன்னர் அமரும் மாந்தனின் வதனதிரையை (முகத்திரை) கிழிக்குமாறு பகரவில்லை, பகர்ந்தாலும் அதை கூற அனுமதிப்பதில்லை.  பாலனே இது குறித்து இதழ் ஓதுபவனுக்கும் (நாடி வாசிப்பவருக்கும்), ஏனையோருக்கும் விசனம் உண்டு. பகரும்கால் எமக்கு எளிதப்பா.  எதிர் அமரும் மாந்தனின் வதனதிரையை கிழிப்பது, பகர்ந்தால் சிக்கலும், வேதனையும் எமக்கல்ல இதழ் ஓதுபவனுக்கே வந்து சேரும் என்பதால், என்பதாலும் பல உண்மைகளை கேட்கும் மாந்தராலும் ஏற்க இயலாது என்பதால்,  என்றென்றும் பட்டவர்த்தமான வாக்குகளை யாங்கள் பகருவதில்லை.  பகருவேன் உரைக்க வந்ததை பகரும்கால் பாலனே மெய்யை மெய் என ஏற்பதற்கு மெய்தன்மை கொண்டோர் வேண்டும் பாலகனே.  இஃது தடம் யாது என்று அறியாமலே பலர் வந்து போகிறார்கள்.  பகரும்கால் இதழ் ஓதுபவன் தோற்றமும் விருத்தமாக இல்லாது ஆன்மீகத்திற்கு பொருத்தமாக இல்லாது, இல்லாதும் இருப்பதாலே புஜண்டர், வசிட்டர், கும்பர் வாக்கினை அலட்சியம் செய்கிறார்கள். பகரும்கால் இஃது ஒப்ப இருப்பதால் மெய் தொண்டர்கள் வரக்கூடும் என்பதால் இவனை இஃது ஒப்ப தோற்றத்தில் இருக்க வைத்தோம், வைத்தோமப்பா ஜீவ அருள் நாடியை இவனிடம் சதம் சதம் மூடன் என்பதால். வருகிறாயே சேயே இதன் நுணுக்கத்தை ஆய்ந்துபார்.  வறியும்கால் முன்னரே அறிமுகமான ஆன்ம மாந்தனையோ, அனைவரும் அறிந்த துறவி கரத்திலேயோ வைக்காது இஃது நாடியை இவனிடம் வைத்த காரணம் பல இருந்தாலும்,  வறிவிப்பேன் ஏனையோர் உரைக்கும்கால் எம் கருத்தா, அவர்தம் கருத்தா என சிந்தனை சிதறல் வரக்கூடும்,  கூடுமப்பா இஃது ஒப்ப பல்வேறு ஆன்ம கருத்துகளை அறிந்த மாந்தன் கூறும் சமயம்,  கூறுகிறான் இவன் கருத்தினை சித்தர்கள் கருத்தா? என நினைக்க கூடும்.  கூறுகின்ற வாய்ப்பு உள்ளதால் ஆன்ம ஞானம் இல்லாத மூடனை தேர்ந்து எடுத்து,  திடம் கொண்டு நம்புகின்ற மாந்தர்களுக்கு வாக்கினை பகர்கிறோம். தெளிவுதான் இஃது இதழில் நல்கிறோம் அனைவருக்கும்.  திருப்தியும் இதில் காணாத மாந்தர்கள் அதிசயங்களை எதிர் நோக்குகிறார்கள், திருப்தியில்லை. வாழ்வுநிலை, தசநிலை, தனநிலை என எண்ணி, எண்ணி, எண்ணி தனத்தை தாராத சித்தர்கள் வாக்கை ஏன் ஏற்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  இஃது ஒப்ப புஜண்டர், வசிட்டர், கும்பர் வந்து உரைப்பது எத்தனையோ பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ஒன்று சேர்ந்தாலும் நடவாதப்பா, என்றாலும் மாந்தர்கள் மீது கழிவு,  இரக்கம் கொண்டு இறைக்கு சமமான மாந்தர்கள் வாக்கு உரைத்தால் ஏற்காது,  எள்ளி நகையாடினால் எமக்கல்ல நட்டம். அம்மாந்தனுக்கே கட்டம்.  கட்டம் வந்த காரணம் கர்மவினை.  கர்மவினை அகற்ற கூறுகிறோம் பல்வழி.  கூறுகின்ற வழி ஏற்க இயலாது. கட்டம் தீர வேண்டும் என நினைத்தால் எங்ஙனம் சாத்தியம்.  குறிப்பேனே இத்தட மாந்தர்கள் ஆகட்டும்,  வேறு எவர் ஆகட்டும்,  கூறியபடி வாக்கு நடவவில்லை என வருந்தினால் அஃது எமது குற்றமல்ல.  கூறியது கூறியபடி ஏற்று மெய்தன்மையோடு,  திடம் கொண்டு சென்ற ஊழிலில் பாபம் செய்தோம். இனியாவது புண்ணியம் செய்வோம் என எண்ணி எண்ணி சதம் சதம் நீதியோடு வாழும் மாந்தருக்கு ஒரு போதும் பலியாமல் போகது. எத்தனை நெருக்கத்தில் வந்து வாக்கறிந்தாலும், வாக்கறியும் மாந்தர்கள் செய்யும் தவறை யாங்கள் அறிவோம் என்றாலும்,  அவன் மனநலம் கருதி சுட்டி காட்டாமல் விடுகிறோம்.  எஃது ஒப்ப இறையோ அனைவரையும் பொருத்தருளும் போது யாங்களும் பொருத்தருளுவோம், அருள்வோம் என்றாலும் அஃது தவறு என சுட்டி காட்டிய பின்னரும் தொடர்வது சரியல்ல. அறிவிப்பேன் சேயே மெய்யான வாக்கு வேண்டும் என உன் போல் பலர் வேண்டுகிறார்கள். அனைத்தையும் அறிந்த யாங்கள் மௌனமாக நகைத்து கொண்டே அனைத்தையும், அனைவரையும் கவனிக்கிறோம்.  அறிவாயே இத்தடத்தில் எவர் நாடி வந்தாலும் அமைதி காத்து வாக்கறிய வேண்டும். அகத்தில் துரிதம், துரிதம் என எண்ணுபவர்கள் அவர்கள் விரும்பியபடி வாக்கினை அறிய இயலாது.  அஃது ஒப்ப இதழ் ஓதுபவனும்,  நீயும் ஏக கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.  வேண்டுமப்பா பொறுமை,  பொறுமை வேண்டுவோருக்கு விளக்கங்கள் தந்தே ஆக வேண்டும். உளைச்சல் இன்றி. வலுத்துவேன் சூல முனிவரின் விருப்பமும் இறை விருப்பமே வாக்கினை பகர்வதும் பகராமல் போவதும்.  பகரவேண்டும் இன்னாருக்கு,  பகர வேண்டாம் இன்னாருக்கு என எம்மை நிர்பந்திக்க இயலாது.  பலன் அறிய வரும் மாந்தன் பக்குவமின்றிதான் இருப்பான்,  பக்குவமாக பாலகர்கள் எடுத்தியம்பத்தான் வேண்டும். பகருவேன் எதிரே அமரும் மாந்தன் சிறப்பில்லா எம் கொள்கைக்கு எதிரான மாந்தன் என்றாலும்,  இதழ் ஓதுபவனோ,  தட மாந்தர்களோ சினம் கொள்ள கூடாது.  எஃது ஒப்ப சூலமுனிவர்கள் அவர்களை கவனித்து கொள்வார்கள் என்றெண்டும்.  யாங்கள் இயம்புகின்ற கருத்தினை அறகருத்தினை தவிர ஏனைய கருத்தினை தெய்வீக சூட்சமத்தை ரகசியம் காத்திடல் வேண்டும்.  நன்றாக ஏககருத்தை கவனத்தில் கொள், கொள்ளப்பா தனத்தை எவன் விடாது பிடித்துள்ளானோ, குறிப்பேனே பிறரை எவன் அலட்சியமாக எண்ணுகிறானோ, குறிப்பேனே தானமோ, தர்மமோ அணுவளவும் செய்யாது எவன் உள்ளானோ, உள்ளானோடு அவனிடம் தெய்வீகமோ, சித்தர்களோ ஒருபோதும் இருப்பதில்லை. உரைப்பேனே உள்ளதை எல்லாம் எவன் ஈகிறானோ சித்தர்கள் உரைத்ததை சிந்தித்து பாராது சதம் சதம் ஏற்கிறானோ உணர்வாயே அவனே எங்கள் அருள் பெற்றவன், எங்கள் சேயவன்.சேயவனே சேயவனே சேயவனே என விளித்தால் மகிழ்வதும், சிறப்பாக எமது உயர் குணங்களை மட்டும் ஏற்காது இருப்பதும் அழகல்லா. செப்புவேன் எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் சிந்தையில் தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள கரை சேர்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனதோடு நற்குணம் மனமாகி வாழ்வது, மனதால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது மறிவிப்பேன் வாரி வாரி வழங்குவது, இத்தகைய குணங்களே எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய இத்தடம் வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம், அறிவோமப்பா அவர்களை பற்றி இத்தட மாந்தர்கள் விசனம் கொள்ள வேண்டாம், அவர்கள் குறித்து விமர்சனமும் ஏளன உரையும் இங்கு வேண்டாம். அறிவாய் அடுத்த மெய்யை இறை இறை ஞானம் ஞானம் எல்லாம் பகர்ந்து கொண்டு அஃது ஒப்ப ஒருவர் மீது ஒருவர் காழ்புணர்ச்சி கொண்டு, குறையும் கூறிகொண்டு அஃதோடு மமதையும் கொண்டு பவ்யம் போல் வெளிகாட்டி பகட்டை உள்ளே வைத்து வரும் மாந்தர்களும் உண்டு,உண்டப்பா என்றாலும் பக்குவம் ஆகட்டும் என்றே பொருத்துள்ளோம். உதட்டளவில் எமது நாமத்தை உச்சரித்து உள்ளே சித்தனாவது வாக்காவது உரைப்பது மெய் என்றால் அனைவர் நயனத்திலும் அச்சரத்தை காட்ட வேண்டியதுதானே. அஃது ஒப்ப ஒருவன் வருகிறான் எத்தனை சாதுரியம், வஞ்சகம் எம்மிடமே சாமர்த்தியமாக வாக்குரைப்பதாக எண்ணி பாதாளத்தில் வீழ்கிறானப்பா. அப்பனே சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். இயம்புவது யாது எனில் சூழ்ச்சியாக வஞ்சமாக சாமர்த்தியமாக எம்மிடம் வாக்கறிய முயன்றால் எம்மிடம் பலன் கிட்டாது, என்றாலும் அனைவரும் எமது பிள்ளைகள் என்றே அரவணைத்து செல்வோம். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இறையை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் வெறும் வழிபாட்டை மட்டுமல்ல.சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உரு போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்கவேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டிவரும். எத்தனைதான் இயம்பினாலும் கர்மா செவியில் ஏற விடுவதில்லை. யாது செய்ய. எஃது ஒப்ப இவற்றை உரைக்கின்ற காரணம் கேட்கின்ற நீவீர் இஃது குறை இல்லாது வாழ பழகுவீர்.  மாந்தருக்கு தோன்றுவது எமக்கு புனிதமாக தோன்றாது, எமக்கு புனிதமாக தோன்றுவது மாந்தருக்கு புனிதமாக தோன்றாது.

ஆசிகள்...    சுபம் .

No comments:

Post a Comment