Wednesday, 27 September 2017

அகஸ்தியரும் அம்பிகையும்

அகஸ்தியரும் அம்பிகையும்

திங்களில் நான் கன்னி’ என்றாள் அம்பிகை. அதாவது மாதங்களில் நான் புரட்டாசி என்ற பெயரு டன் விளங்குகின்றேன் என்றாளாம். அம்பிகை துர்க்கை அகஸ்திய முனிவரிடம்,

‘‘குடமுனியே திங்களிலும் யாமே
கன்னி யென உலகு உணர
ஓதுவீர்’’ என்றனளாம். ‘கூடியதொரு குருவும் வைரியுமலியுந்
தன்மை வலியூட்ட உடல் மெலியும்
தாரந் தனக்கு தோஷங் காணும்
பணியுஞ் சோருமாயினும் பிற்காலச்
சுகங் காணுமே.’

குருபகவானும் சுக்கிரனும் புதனுமாக மூவரும் சேர்ந்து சற்றுக் கடுமைகள் காட்டுவதால்,

ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘மேனி வலு கூடுமே - வாட்டிய
பீடை யெல்லாம் விலகிட தனமது
தானே யண்டுமே. இல்லறமது இனிதா
கவே தடையான மங்களமுமீ டேறுமே.’
எல்லா கொடிய பீடைகளும் விலகி

ஓடிவிடும். நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வாராது தடைபட்டிருந்த தனம் வந்து இன்பம் கூட்டும். தாமதமான திருமணம் போன்ற சுப காரி யங்கள் இனிதாகக் கைகூடும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘சஞ்சலமது மிகுத்திடுங் கன்னி
யதனில் யவராலுஞ் சோதனை யுண்
டாம் தனவரத்து கூடி
சுகந் தான் சேரவே நாராயண
மந்த்ர பாராயண மாகுமே.’

நாராயண பூஜையும் மந்திர ஜபமும் பெருமளவில் நன்மை தரும். கன்னியரால் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதனாலும் வேறு சோதனைகளாலும் பலவிதங்களில் மனம் சஞ்சலத்திற்கு  உட்பட்டிருந்தாலும் இந்த பூஜை விமோசனம் அளிப்பதாகும்.

திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘வாக்கால் வரும் தீங்கறுப்பீரே
உறவுப் பகையாகிப் போம் காலமிது
வழிநடத்தும் விபத்து வர சுக்ர வாரத்து
அம்மனை ஆராதித்து மீள்வீரே.’

வாக்குவாதங்களில் ஈடுபடுவதோ, கோபமான வார்த்தைகளை பேசுவதோ கூடாது. சாலை வழியில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மாலை வேளை யில் அம்மனை தரிசித்து ஆசி பெற்று அதனால் சுகம் பெறலாம்.

புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘அலைச்சலும் மிகுத்திடும் அகத்தில்
ஆனந்தங் குன்றும். தனவிரயமாகும்.
வியாஜ்ஜிய விவகாரமும் சோதனை
யீயுமே. கணநாதனை தொழ சிக்கல்
விடுபடுமே.’

சற்று அலைச்சலும் மனச்சங்கடங்களும் வந்தாலும் விநாயகரை கும்பிட்டு விமோசனம் பெறலாம். பொருள் விரயமும், பஞ்சாயத்து விவகாரமும் ஏற்ப ட்டு மறையும். கணபதி பூஜை, விநாயகர் சதுர்த்தி பூஜை நன்று.

பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘தனவரத்து இன்பந் தருமே - ஆயினும்
வந்த வழி தனமது புகுமே - வாக்கு
வழி பிசகுமே - மூதாதையர் தம்மை
பூஜிக்க சிறக்குமித் திங்களுமே.’

தனம் வரும். ஆனால் வந்த பணம் செலவாகும். வாக்கை காப்பாற்றிட போராட வேண்டியிருக்கும். முன்னோர்களை உளமாற துதித்து பிதுர்பூஜை  புரிய சிறப்படையலாம்.

ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘எண்ணிய எண்ணம் தடையாகும்
உடனிருந்தே கெடுப்பர் கோடி-
சுபவிரயம் கூடி கடனாகுமே: கொங்கண
சேத்திரமாடி தொழ மேன்மையுண்டே.’

எண்ணிய காரியத்திலும் எடுத்த வேலையிலும் தாமதம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் தொல்லை ஏற்பட்டு, பிறகு விலகும். கொங்கண மகரிஷி  தொழும் திருப்பதி வெங்கடாஜலபதியை பூஜிக்க விமோசனம் உண்டு.

அஸ்வினி, மகம் மற்றும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘கீர்த்தி பெருகும் - உற்சாகமும்
பெருமையும் மிகுத்து வரும்
வாட்டும் மேனி பீடை சறுக்கும்
அப்பன் கணபதிக்கு அருகம்புல் பூசை
புரிய குறையின்றி குதூகலப்பீரே.’

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து, உடல் வலி போன்ற உபாதைகளை நீக்கலாம். பணவரத்து பலமாவதால் மனது மகிழ்வடை யும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். கீர்த்திக்கு பஞ்சம் இல்லை.

பரணி, பூரம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘உறவால் தொல்லை காணுமே உற்ற
இல்லறமும் பூசலால் கசக்குமே.
சிறிதொரு மானபங்கமது வந்து தொலைய
அகத்தை திடமாக்கி அறுமுகனை ஆராதித்
தானந்தமடையலாகுமே.’

உறவினர் தம்மால் சிறிது சங்கடம் வரலாம். கணவன்&மனைவி பொறுமை கடைபிடிக்க நன்மை கிட்டும். வள்ளி&தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவா மியை தினமும் ஆராதித்தால் வெற்றிகரமாக வாழ்வு அமையும்.

‘கன்னி நிற்குங் கணநாத
சதுர்த்தி கொழுக்கட்டை அவல்
அப்பமது கரும்பொடு இட்டு
நந்தனவாண்டு நன்றாதிக்க
நாடிய பொருள் கூடும்
எண்ணமு மீடேறுந் திண்ணமே.’ -
வரும் விநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமானது. எல்லா நட்சத்திரக்காரர்களும் தவறாது கணபதி பதுமையை  வீட்டில் வைத்து கொழுக்கட்டை, அப்பம், அவல் பொரி, கரும்பு போன்றன படைத்து விரதம் மேற்கொண்டு தொழ வேணும். விரதம் என்றால், கோபப் படக் கூடாது. பிறர் மனம் புண்படும்படி பேசப்படாது. விநாயகரை தொழுதபின் ஏழைகளுக்கு பிரசாதம் விநியோகம் செய்து நின்றால், எந்தத் தடையும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழ ஏதுவாகும்’’ என்கிறார் அகஸ்தியமுனி, தன் நாடி வழி.

அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment