சூரபன்மாவின் தங்கை
அஜமுகி அவள் பிள்ளைகள் அகத்தியரைக் கொல்ல வர,
அவர்களைப் பாசுபத
அஸ்திரத்தினால் அழித்தார். போகும் வழியில் கர்வத்துடனிருந்த இந்திரத்துய்ம்மனன்
என்னும் பாண்டி மன்னனை யானையாகச் சபித்தார். இவனே கஜேந்திரன் எனப்பட்டான்.
திருக்குற்றாலத்துப்
பெருமானை ஹரிஹரரூபமாய் தரிசித்தார். அதன்பின் ஒரு திருத்தலத்திற்குச் சென்றார்.
இறைவனை தரிசனம் செய்ய, ஆனால் திருக்கோயில்
சாத்தப்பட்டு இருந்தது. வண்டின் வடிவம் (ஈ) கொண்டார். மலர்களில் இருந்த தேனை
எடுத்து அபிஷேகம் செய்தார். இங்ஙனம் வண்டின் (ஈ) வடிவம் கொண்டு அகத்தியர் வழிபட்ட
தலமே திருஈங்கோய்மலை.
No comments:
Post a Comment