Wednesday, 27 September 2017

அகத்தியர் 12000 - மகா மந்திரங்கள்

அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

பிரம காயத்ரி

அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு முன்னர் தற்போது புழக்கத்தில் இருக்கும் “பிரம காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.

இனி அகத்தியர் அருளிய “பிரம காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா அசபையிலேபிரம காயத்திரி
பரிவாக சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பேரப்பா ஓம் அங்உங் மகாலம்வம்நசிமசி
பிர்மதே வாயசுவாகா வென்றுஓது
சாரப்பா சுத்தவெள்ளை பிரகாசிக்கும்
சரசுவதி வார்த்தைசொல்வாள் கலைகெல்லாமே

பிரம காயத்ரி மந்திரம் "ஓம் அங்உங் மகா லம்வம் நசிமசி
பிர்மதேவாய சுவாகா"

இந்த பிரம காயத்ரியை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சியும் அட்டாங்க சித்தியும் கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

எல்லாம் சரிதான்! இந்தக் காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது?

அதனையும் அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே

இந்த இரகசிய காயத்ரி மந்திரங்களை தினமும் அந்தி சந்தி வேளைகளில் நூற்றியெட்டு தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு செபிக்க வேண்டும் என்கிறார்.  முக்கியமாக இந்த மந்திரங்களை உதடுகள் அசையாமல் உள்ளுக்குள் செபிக்க வேண்டும் என்கிறார். அவர் மேலும் ஒரு காயத்ரி மந்திரத்தினை ஒரு மண்டலகாலம் செபித்து முடித்தபின்னரே மற்றைய காயத்ரி மந்திரத்தினை செபிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
அகத்தியர்.

விஷ்ணு காயத்ரி

தற்போது புழக்கத்தில் இருக்கும் “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.



இனி அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா விஷ்ணுவின் காயத்திரி
பிலமான மந்திரத்தைச் சொல்லக்கேளு
விண்டான ஓம் ஓங்ஸ்ரீங் மகாசம்வம்நசிமசி
விஷ்ணுதே வாயசுவாகா வென்றேயோது
மேலான சந்தானமொடு சவுபாக்கியங்கள்
மனம்போலே லெச்சுமியின் கடாட்சமாமே

விஷ்ணு காயத்ரி மந்திரம் "ஓம் ஓங்ஸ்ரீங் மகா சம்வம் நசிமசி விஷ்ணுதேவாய சுவாகா"

இந்த விஷ்ணு காயத்ரியை செபிப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் முதல் அனைத்துவகை செல்வங்களும் கிட்டும் என்கிறார் அகத்தியர்
இனி அகத்தியர் அருளிய ருத்ர காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம்.

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் இதுதான்.

 "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா"

ருத்திர காயத்ரியை செபிப்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்க் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.

15 comments:

  1. மற்ற பதிவுகள் எப்படி பார்ப்பது

    ReplyDelete
    Replies
    1. மற்ற பதிவுகள் என்றால் .... அகத்தியர் 12000 என்று நூலை தான் படிக்க வேண்டும்

      Delete
    2. Bro இந்த பாட்டு எந்த காண்டம் and எத்தணாவது பாட்டு

      Delete
  2. அய்யா,இந்த அகத்தியர் 12000 புத்தகம் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  3. கூகிளில் தேடிய போது,ஆன்லைன் மூலம் கிடைக்கின்றது - https://www.udumalai.com/agasthiar-12000part-1.htm

    ReplyDelete
  4. தாமரை நூலகம் வடபழனி அங்கே கிடைக்கும்

    ReplyDelete
  5. Bro இந்த பாட்டு எந்த காண்டம் and எத்தணாவது பாட்டு

    ReplyDelete
  6. ஐயா எனக்கு புத்தகம் வேண்டும்

    ReplyDelete
  7. என்னிடம் இல்லாததை கேட்க வேண்டாம்.

    ReplyDelete
  8. Ayya boger 12000 book engu kidaikkum

    ReplyDelete
  9. km.ravi1978@gmail.com

    ReplyDelete
  10. அகத்தியர் எப்போது சமஸ்கிருதத்தை போதித்தார் அவர் தமிழ்ப் புலவர் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரியாது. இறைவனுக்கு மொழி பேதம் கிடையாது. தச நாதங்கள் இயக்கத்தின் மூலம்.

      Delete
    2. அகத்தியர். நாரதர்.பரசுராமர். போன்றோர் உடன் தொடர்பில் உள்ளவர்

      Delete