Friday, 22 September 2017

திருமணம் நடக்க அகத்தியர் சொல்லும் வழி

திருமணம் நடக்க மந்திரம்,
அகஸ்தியர் சொல்லும் வழி
.

திருமண தாமதம், தடைகள் போன்றவற்றிக்கு காரணம் என்ன?

பாவம் தான் காரணம் என்று கூறவேண்டும். பாவம் என்பது ஒருவருக்கு செய்யும் அநீதி இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது. இதில் மிக பெரிய வேடிக்கை என்ன வென்றால் இவர் எந்த பாவமும் செய்திருக்க மாட்டார் ஆனால் மற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவர் தண்டனை அனுபவிக்கும் நிலை. அதாவது இவருடைய முன்னோர்கள். அதனால் இவருக்கு திருமண தடை, திருமணம் ஆகாத நிலை.
அது போன்று யாரோ செய்த பாவங்கள் தோஷங்கள் என்ற பெயரில் ஒருவருக்கு திருமண தடையை உண்டாக்கும்போது, ஜாதகம் வாயிலாக இறைவன் அந்த திருமண தடையை நீக்குவதர்க்கும் வழி சொல்கிறார். கிரகங்கள் இறைவனின் பணியாட்கள். அந்த பணியாட்கள் அவர்களுடைய இயல்பான குணாதிசயங்களின் பேரில் மனிதர்களுக்கு நன்மையையும் தீமையும் செய்கின்றன.

ஜாதக ரீதியாக  ஒருவருக்கு திருமண தடை, கால தாமத திருமணம் போன்றவற்றுக்கு, கிரகங்கள் அமர்ந்த நிலை, சேர்ந்த நிலை, பார்வையின் நிலை, தோஷங்கள், போன்ற பல காரணங்கள் உண்டு
இறைவன் மிக பெரியவன். பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவனை தப்பு செய்ய வைத்து, பிறகு அந்த தப்பிற்காக அவனை தண்டனை அனுபவிக்க செய்வதும் அதே இறைவனை.
குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும் வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கி உடனே திருமணம் நிறைவேறும்.
சரி இந்த பாவத்தை போக்கி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க என்னதான் வழி

அம்பாளை வணங்கி
குத்து விளக்கு ஏற்றி குங்குமம், பூ வைத்து, கோலம் போட்ட பலகையில் வைத்து,
'ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி! நந்தகோப
ஸீதம் தேவி பதிம்தே குருவே நமஹ'

என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டும்கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment