மைத்ரா வருணரின்
ஒளியினால் கலசத்திலிருந்து பிறந்ததால் கும்பசம்பவர் என்றும் கலசயோனி என்றும்
அழைக்கப்படுகின்றார். இவரால் செய்யப்பெற்ற சம்ஹிதை ஒன்று வேதங்களில்
விளங்குகின்றது. அஃது அகத்திய சம்ஹிதை என்று பெயர் பெற்றுள்ளது.
வெகுகாலத்திற்கு முன்
தாரகன் என்னும் அரக்கனும் அவனைச் சார்ந்தவர்களும் உலகினைத் துன்புறுத்தினர்.
அவர்களை அழிக்க எண்ணிய இந்திரன் அக்நி, வாயு இவர்கள் துணைகொண்டு
பூமிக்கு வந்தான். தேவர்களைக் கண்ட அசுரர் கடலில் அஞ்சி மறைந்தனர். பின் அவர்கள்
தேவர்களை வெல்ல உபாயந்தேடினர். இதனை அறிந்தும் அக்நி அவர்களை அழிக்க எந்த
முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கரின் வன்மை அதிகம் ஆயிற்று. கோபம் கொண்ட இந்திரன்
அக்னி தேவனே! நீ வாயுவுடன் கூடி கும்பத்திலிருந்து பிறந்து கடல் நீரைக் குடிக்கக்
கடவாய் எனச் சாபம் இட்டான். இஃது அகத்தியரின் பிறப்பிற்குக் காரணம் ஆயிற்று.
தமிழ்நாட்டைக்
கந்தப்பெருமான் அகத்தியருக்குத் தந்தான். அவர் அதனை பாண்டியனுக்கு வழங்கினார்.
பொன்னி நதியைச் சிவபிரான்
அகத்தியருக்கு வழங்கினார். தன் தவத்திற்குத் தொல்லை தந்த மதியநந்தை என்னும்
தெய்வப் பெண்ணை மனிதப் பெண்ணாக மாற்றினார். நீரில் படுத்திருந்து பன்னிரெண்டு
ஆண்டுகள் தவம் இயற்றினார்.
மகரிஷிகள் ஒருமுறை
மூன்றாண்டுக்காலம் தொடர்ந்து யாகம் செய்தனர். கோபம் கொண்ட தேவர்கள் யாகத்தில்
அவிர்ப்பாகம் வாங்கச் செல்லவில்லை. கடும் பஞ்சத்தை உண்டாக்கினர். வளம் குறைந்ததால்
யாகத்திற்குப் பொருட்கள் கிடைக்கவில்லை. முனிவர்கள் அகத்தியரை வேண்ட அவர்
உத்திரகுருவிலிருந்து பொருள்களை வரவழைத்தார். முனிவர்கள் யாகத்தை நிறைவுடன் நடத்தி
திரிமூர்த்திகளுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் தருணத்தில் அஞ்சி நடுங்கிய தேவர்கள்
மன்னிப்பு வேண்டி யாக தரிசனம் செய்து அவிர்ப்பாகம் பெற்று மழை பொழிந்து வளம்
தந்தனர்.
ஆதித்ய ஹ்ருதயம் என்னும்
மந்திரத்தை ஸ்ரீ ராமனுக்கு உபதேசம் செய்தார் அகத்தியர்.
No comments:
Post a Comment