Friday, 22 September 2017

மிக முக்கிய நிகழ்வுகள் - அகத்திய உலோபா திருமணம் - அருட்செல்வர் இத்மாலகர்

பழையூர் திருச்சி கரூர் இடையே

நங்கவரம் அருகில்

பழையூர் சிவன் திருத்தல மகிமை

திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம். பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.
முன்பு ஒரு காலத்தில் தர்மம் செழித்தோங்கிய விதர்ப்ப நாட்டின் இளவரசி லோபாமுத்திரை. லோபாமுத்திரை என்றால் அன்பினாலும் பண்பினாலும் பேரழகாலும் மற்றவர்களைக் கவர்பவள் என்பது பொருள். இந்த இளவரசியின் கரம் பற்ற எத்தனையோ இளவரசர்கள் தயாராக இருந்தனர். ஆனால், இளவரசியின் பிரார்த்தனையோ வேறு விதமாக இருந்த்து.
தூய்மையிலும் தூய்மையான பக்தன் ஒருவனையே தான் மணக்க வேண்டும் என்பதே லோபாமுத்திரையின் விருப்பம். தன்னுடைய இந்த எண்ணத்தை தன் தாயிடமும் சொல்லாம்ல் மனதிற்குள் போற்றிய லோபாமுத்திரை தனது இஷ்ட தெய்வமான உஜ்ஜயினி காளி தேவியிடம் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுமாறு பிரார்த்தனை செய்து வந்தாள்.
இது ஒரு புறம் இருக்க, தவ சீலராய் பக்தியின் உச்சத்தில் பேரொளிப் பிழம்பாய் பிரகாசித்த அகத்திய பெருமான் தன்னுடைய நித்ய சேவையாக பிதுர் லோகத்தை அடைந்தபோது அங்கு தன்னுடைய மூதாதையர்கள் ஒரு படுகுழியில் தலை கீழாக தொங்கும் அவலை நிலையைக் கண்டு திடுக்கிட்டார். தன்னுடைய மூதாதையர்களுக்கா இந்த நிலை என்று நினைத்து அவர் உள்ளம் பதறியது.
அவர்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று வினவியபோது அவர்கள் அக்த்தியர் திருமணம் ஆகாமல் இருப்பதால்தான் தாங்கள் அடுத்த நிலையை முடியவில்லை. எனவே அகத்தியர் திருமணம் செய்து கொண்டால்தான் தங்களுடைய இந்த நிலையிலிருந்து நிவாரணம், விமோசனம் பெற முடியும் என்று தெரிவிக்கவே, மணமகனும் மணமகளைத் தேடிப் புறப்பட்டார்.
மனதிற்குகந்த மணமகள் எங்கே ?
அனைத்தும் அறிந்தவர் அல்லவா அகத்திய மாமுனி ? தன்னுடைய இதய ராணி இருக்கும் இடமான விதர்ப்ப நாட்டை அடைந்தார். அகத்தியர் வருகிறார் என்று செய்தி கிடைத்தவுடன் அக்த்திய பெருமானை நாட்டின் எல்லையிலேயே எதிர் கொண்டழைத்து அவர் பாதங்களைத் தூய நீரால் அலம்பி அபிஷேக ஆராதனைகள் செய்து உரிய மரியாதைகளுடன் அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தான் விதர்ப்ப நாட்டு மன்ன்ன் தர்மபாலன்.
அதிதி வரவேற்பு அனைத்தையும் முறையாக நிறைவேற்றிய பின் அரசன், ”முனிசிரேஷ்டரே, தங்களுடைய வருகையால் என்னுடைய நாடும், மக்களும், அனைவரும் புனிதம் அடைந்தோம். இந்தச் சிறிவயனால் நிறைவேற்றிய பணி ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்,” என்று பணிவுடன் கூறினான்.

ஸ்ரீஅகத்தீஸ்வரன்
பழையூர், பெருகமணி
அகத்தியர், ”தர்ம வேந்தே, உன்னுடைய அன்பு மகளை என்னுடைய தர்ம பத்தினியாக ஏற்றுக் கொள்ளவே வந்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.
அரசன் பெருமகிழ்ச்சி அடைந்தான். விரைந்து லோபாமுத்திரையை அழைத்து வரச் செய்தான. லோபாமுத்திரை அகத்திய முனியின் பாதத்தில் தொழுதெழுநதாள்.
மன்னன் மகரிஷியின் விருப்பத்தை மகளிடம் தெரிவித்தான். லோபாமுத்திரை அப்போது தன்னுடய மன ஏக்கத்தை தெரிவிக்கவே, அவன் அதிர்ந்து போனான். இப்போது அகத்தியரிடம் இது பற்றி தெரிவித்து அவர் கோபம் கொண்டு விட்டால் தன்னுடைய நாடே அழிந்து விடும், மக்களும் மாய்ந்து போய் விடுவார்கள், என்று அஞ்சி என்ன செய்வதென்று தெரியாது திகைத்தான்.
சூழ்நிலையை உணர்ந்து கொண்ட தவசீலர், ”மன்னா வருந்தாதே. அனைத்தும் எமபெருமான் விருப்பமே,” என்று கூறி லோபாமுத்திரையை அழைத்து, ”உத்தமியே, தூய்மையிலும் தூய்மையான மணமகனையே அடைய வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் புனிதமானதே.”
”இதற்காக நீ ஆற்ற வேண்டிய காரியங்கள் உண்டு. காசித் திருத்தலத்தில் உள்ள 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி விஸ்வநாதரையும் விசாலாட்சி தேவியையும் தரிசித்த பின்னர் உன்னுடைய இஷ்ட தெய்வமான உஜ்ஜயினி காளியிடம் உன்னுடைய பிரார்த்தனையை தெரிவித்தால் அன்னை அதை நிறைவேற்றுவாள்.”
”தூய்மையிலும் தூய்மையான மணாளனை நீ பெற வேண்டுமானால் புனிதத்திலும் புனிதமான திருத்தலத்தில் உறையும் இறைவனை நீ பூஜிக்க வேண்டும். அத்தகைய திருத்தலத்திற்கு வழிகாட்டுபவளே உஜ்ஜயினி காளி,” என்று கூறிய அக்த்திய பிரான் மன்ன்னிடம், ”தர்மபாலனே, எதற்கும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் மங்களமாகவே நிறைவேறும். உன்னுடைய நாட்டு மக்களும் நலமடைவர்,” என்று ஆசி அளித்து அவர்களிடமிருந்து விடை பெற்றார் அகத்திய மாமுனி.
தம்பதியர் திருமணத்திற்கு முன்போ திருமணம் நிறைவேறிய பின்னரோ காசியில் உள்ள 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி விஸ்வநாதரையும், விசாலாட்சி தேவியையும், அன்னபூரணி அம்மைனையும், சோளி அம்மனையும், கால பைரவரையும் அவசியம் வழிபட்டாக வேண்டும். இதுவே திருமண வைபவத்தின்போது நடைபெறும் காசி யாத்திரை என்ற சடங்கின் உட்கருத்து, உண்மைப் பொருள்.
ஒரு நல்ல சுப முகூர்த்த நாளில் தாய், தந்தையரிடம் விடைபெற்றுக் கொண்டு தோழியர் குழாம் சூழ படை பரிவாரங்களுடன் தன்னுடைய புனித யாத்திரையைத் தொடர்ந்தாள் லோபாமுத்திரை.
அகத்தியர் அருளியவாறே 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி சுதர்மன் என்ற பிரம்ம்ம மூர்த்தி 1000 அஸ்வமேத யாகங்கள் நிறைவேற்றிய கங்கை கட்டத்திலும் சிறப்பாக பூஜைகளையும் தான தர்மங்களையும் நிறைவேற்றி இறை மூர்த்திகளைத் தொழுதாள்.
பின்னர் உஜ்ஜயினி சென்றடைந்து விக்ரமாதித்தன் வழிபட்ட மாகாளியை வணங்கிப் பிரார்த்தித்தாள். அப்போது அசரீரி எழுந்த்து.
அகத்தியன் வழிகாட்டுவான்
அகத்தீசன் அருள் பெறவே
அகத்தில் அகமகிழ்ந்த
அகத்தீசன் கரம் பற்றுவான்
லோபாமுத்திரை திகைத்தாள். தென் திசை நோக்கினாள். அப்போது வானில் அகத்திய நட்சத்திரம் பிரகாசித்தது. அது தென் திசை நோக்கி தன்னை வரவேற்பது போல் தோன்றியது.
மனம் மிக மகிழ்ந்து அன்னை பரிவாரங்களுடன் அகத்திய நட்சத்திரத்தை தரிசித்து அது காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.
வழியில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டும், தீர்த்தங்களில் நீராடி பூஜைகளை இயற்றியும் அகத்திய நட்சத்திரம் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்தாள் லோபாமுத்திரை.
இவ்வாறு வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த அகத்திய நட்சத்திரம் திடீரென பூமியில் ஓரிடத்தில் இறங்கி மறைந்து விட்டது. அவ்வாறு அகத்திய நட்சத்திரம் பூமியில் இறங்கிய இடமே தற்போதுள்ள பழையூர் திருத்தலம் ஆகும். அந்த திருக்கோயிலிலேயே தன்னுடைய பிரார்த்தனை நிறைவேறும், தான் தொடர்ந்து தீர்த்த யாத்திரை செய்ய வேண்டியதில்லை என்று உள்மனதில் உணர்ந்த லோபாமுத்திரை அத்திருத்தலத்திலேயே தங்கி அத்தல ஸ்ரீஅகத்தீஸ்வரனை வழிபட ஆரம்பித்தாள்.
செங்கழுநீர் சந்தனம்
செங்கழுநீர் சந்தனம் என்று சந்தனத்தில் ஒரு வகையான சந்தனம் உண்டு. பொதுவாக சந்தன மரங்கள் 60 ஆண்டுகள் வளர்ந்த பின்னரே அதன் கட்டைகளை இறைவன் பூஜைக்காக சந்தனம் அரைத்து சார்த்தவும், ஹோமம் போன்ற் இறைப் பணிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பது நியதி.
செங்கழுநீர் சந்தனம் வகையைச் சார்ந்த சந்தன மரங்களை 300 ஆண்டுகளுக்குப் பின்னரே இறை காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வகை சந்தன மரங்களை இறை மூர்த்திகளுக்கு மட்டுமே, தெய்வீக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய நலத்திற்காக பயன்படுத்தினால் பலத்த சாபங்கள் ஏற்படும்.
இந்த செங்கழுநீர் சந்தனக் கட்டைகளை அரைத்து அந்த சந்தனக் குழம்பைத் தொட்டு அரசங் குச்சியால் காசி வில்வ இலைகளின் மேல்
ஓம் ஸ்ரீஅகத்தீசா
என்று எழுதி அந்த வில்வ இலைகளால் ஸ்ரீஅகத்தீச பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தாள் லோபாமுத்திரை.
பொதுவாக வில்வ இலைகள் மூன்று இலைகளாக சேர்ந்து இருக்கும். இவற்றை திரிதள வில்வம் என்பார்கள். இந்த மூன்று இலைகளைப் பிரிக்காமல் மூன்று மூன்றாக இறைவனை அர்ச்சிப்பதே முறை.
மூன்று இலைகளுக்கு மேல் கொத்தாக ஐந்து, ஏழு என்று எண்ணிக்கைகளுடனும் அதற்கு மேலும் எண்ணிக்கையில் உள்ள வில்வ இலைகளும் உண்டு. இவற்றை மகா வில்வம் என்பார்கள். இவ்வாறு சென்னை கோவூர் சிவாலயத்தில் 16 இலைகளுடன் கூடிய மகா வில்வம் உண்டு. இதன் நோய் நிவாரண சக்திகள் அபாரம். இந்த வில்வ இலைகளின் தரிசனமே எத்தனையோ கொடிய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றால் அதைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதால் ஏற்படும் பலன்களை என்னென்பது ?
அது போல ஏழு வில்வ தளங்களுடன் துலங்கும வில்வத்திற்கு காசி வில்வம் என்று பெயர். இதை சௌபாக்கிய வில்வம் என்றும் சொல்வதுண்டு. சகல சௌபாக்கிய செல்வங்களையும் கொடுக்க்க் கூடியதே காசி வில்வம்.
பொதுவாக காசி என்றால் காசு என்பது மருவி வந்ததாக பொருள் கொண்டாலும், காசி என்பது சௌபாக்கிய செல்வங்களையே குறிக்கும். அதனால்தான் காசி விஸ்வநாதர் சகல சௌபாக்கியங்களையும் நல்கும் பெருமானாக வணங்கப்படுகிறார்.
”வாசி தீரவே காசி நல்குவீர் … ” என்று திருஞானசம்பந்தப் பெருமான் இறைவனிடம் மக்களின் துயர் தீர வேண்டியபோது வெறும் பணம், காசு வேண்டும் என்றா வேண்டியிருப்பார் ? சற்றே சிந்தியுங்கள்.
லோபாமுத்திரை பழையூர் சிவத்தலத்திற்கு வந்தபோது 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக விளங்கியதாம் அத்திருத்தலம். இப்போது ஒரே ஒரு சன்னதியுடன் மட்டுமே அந்த அற்புத தலம் பிரகாசிப்பதும் எம்பெருமான் லீலையே.
அகத்திய ஜோதி அற்புதம்
செங்கழுநீர் சந்தனத்தின் விசேஷத்தன்மை என்னவென்றால் அதை நீர் விட்டு அரைத்தால் அது ரோஸ் வண்ணத்தில் பிரகாசிக்கும். இந்த வண்ணத்தை அகத்திய ஜோதி என்று சித்தர்கள் அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் வானில் சூரியன் உதயமாகும்போது சூரிய உதயத்திற்கு முன் வானில் பலவித வண்ணங்கள் மாறி மாறிப் பிரகாசிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவ்வாறு சூரிய உதயத்திற்கு முன் ஏழு நிமிடங்களுக்கு முன்னால் வானில் எழும் பிரகாசத்தையே அகத்திய ஜோதி என்று அழைக்கிறோம்.
மனதையும் உள்ளத்தையும் புனிதப்படுத்தக் கூடியதே இந்த அகத்திய ஜோதியாகும். முழுக்க முழுக்க இறை சிந்தனையிலேயே லயித்திருப்பவர்களுக்கே இந்த அகத்திய ஜோதியைத் தரிசனம் செய்வது சாத்தியம் என்றாலும் சாதாரண அடியார்களும் சூரியன் உதயத்திற்கு முன்னால் ஏழு நிமிட நேரத்தில் ஆதித்ய ஹ்ருதயம், சூரிய காயத்ரீ மந்திரங்களை ஓதுவதும் அகத்திய ஜோதி தரிசனப் பலன்களை நல்கும்.
அகத்திய ஜோதி திகழ்ந்த செங்கழுநீர் சந்தனக் குழம்பால் வில்வ தலங்களில் அக்த்திய தோத்திரத்தை எழுதி பூஜித்து வந்தாள் லோபாமுத்திரை. உணவை மறுத்து, உறக்கத்தையும் மறந்து அன்னை இயற்றிய பூஜையால் மகிழ்ந்த ஸ்ரீஅகத்தீசப் பெருமான் லோபாமுத்திரைக்கு தன் திருக்காட்சியை நல்கினான்.
எப்படி ?
பழையூர் ஸ்ரீஅகத்தீசப் பெருமானின் திருமார்பில் அகத்திய பிரபு வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டாள் அன்னை லோபாமுத்திரை. என்னே பாக்கியம் ? இறைவனின் திருமார்பில் வீற்றிருக்கும் பெருமானே நம்பெருமானாக அமைவார் என்றால் இதை விடச் சிறந்த பெருமை, பேறு ஒரு பெண்ணிற்கு வேறு எதுவாக இருக்க முடியும் ?
இவ்வாறு தானும் அகத்தியனும் வேறு வேறு கிடையாது. இருவரும் ஒருவரே என்று இறைவன் உலகத்திற்கு உணர்த்திய அற்புத தலமே பழையூர் சிவத் தலமாகும்.
அகத்தீசனை அகத்தில் பதித்தாள் அன்னை லோபாமுத்திரை. வானோர்கள் ஏத்த, வையகம் புகழ் பாட, சிவ கணங்கள் துதிபாட மும்மூர்த்திகள் முன்னிலையில் பிரம்ம மூர்த்தி யாகம் வளர்த்த வேள்வித் தீயின் சாட்சியாய் லோபாமுத்திரையின் கரம் பிடித்தார் அகத்திய மாமுனி பழையூர் சிவத்தலத்தில்.
லோபாமுத்திரை அகத்தியர் திருமணம் நிறைவேறிய இத்திருத்தலம் எத்தகைய திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியது என்பது உங்களுக்கு இப்போது சொல்லாமலே விளங்கும் அல்லவா ?திருமண தோஷங்கள் பெரும்பாலான திருமணங்களில் அமைவதால் தம்பதியர்கள் அனைவரும் ஒரு முறையாவது லோபாமுத்திரை அகத்திய பெருமானின் திருமண வைபவம் நிகழ்ந்த பழையூர் சிவத் தலத்தில் இறை மூர்த்திகளை தரிசனம் செய்து இத்தலத்தில் மாங்கல்ய தாரண வைபவத்தை மீண்டும் ஒரு முறை நிறைவேற்றுவதால் எத்தகைய திருமண தோஷங்களும் நிவர்த்தி அடைந்து தம்பதிகள் சகல சௌபாக்கியங்களையும் பெறுகின்றனர்.
அவரவர் சம்பிராதயப்படி இங்கு மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்றலாம் என்றாலும் வடமொழி மந்திரங்களையோ, வேதங்களையோ அறியாதவர்களும் இங்கு அவர்களாகவே இந்த வைபவத்தை நடத்திக் கொள்ளும் முறையில் திருமண வைபவ மந்திரங்களை அளிக்கிறோம். சித்தர்கள் அளித்துள்ள இந்த எளிய வழிபாடு பல கால சந்தி தோஷங்களையும், திருமண தோஷங்களையும் விலக்கும் என்பது உண்மை.
பழையூர் சிவத் தலம் புனிதத்திலும் புனிதமான தலமாக விளங்குவதன் ஆன்மீக இரகசியம் என்ன ?
நாம் பொதுவாக சூரியன் கிழக்கு திசையில் உதிக்கிறான் என்று சொல்கிறோம். சூரியன் உதிப்பதால் அது கிழக்கு திசை என்று பொருள் கொள்வது தவறு. திசையை நிர்ணயிப்பது சூரியன் அல்ல. வாஸ்து பகவானே திசையை நிர்ணயிக்கிறார். வாஸ்து மூர்த்தி எழுந்தருளி உள்ள நிலையை வைத்தே கிழக்கு முதலான 64 திசைகளும் ஏற்படுகின்றன.
தம்பதியர் இந்த 64 திசைகளிலிருந்து வரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டு நல்வாழ்வை அடையவே திருமணத்திற்கு முன்போ பின்போ காசியில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களிலும் நீராடி இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்ற நியதியை நம் பெரியோர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு நமது பூமியில் கிழக்கு திசையிலிருந்து 90 டிகிரி பிரதட்சிணமாக அளந்து அதை தெற்கு திசையாகவும் அதிலிருந்து 90 டிகிரி பிரதட்சிணமாக அளந்து மேற்கு திசையாகவும் இவ்வாறு பிரதான நான்கு திசைகளைக் கொள்கிறோம். இந்த ஆதார திசைகளையே அடிப்படை திசைகள் (cardinal directions)  என்று சொல்கிறோம்.
நமது பண்டைய பாரதத்தில் எழுந்த திருக்கோயில்கள் பெரும்பாலும் இந்த அடிப்படை திசைகளை ஆதாரமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பொது விதிக்கு விலக்காக அமைந்த பல திருக்கோயில்களும். அவற்றிற்கான தெய்வீக விளக்கங்களும் காரணங்களும் அநேகம் உண்டு.
அது போல பழையூர் சிவத் தலம் பிரதான கிழக்கு திசையிலிருந்து சற்றே இடம் பெயர்ந்து உள்ளது. ஆகம இரகசியங்களில் இத்தகைய இடப் பெயர்ச்சியை புனிதத்தில் புனிதம் என்று உரைக்கிறார்கள்.
அகத்திய கிரந்தங்கள் கிழக்கு திசையில் ஏற்படும் இந்த இடப் பெயர்ச்சியை அகத்திய பூர்வம் என்று அழைக்கின்றன. எம்பெருமானின் அகத்திலிருந்து, இதயத்திலிருந்து தோன்றியதால் அந்தப் புனிதர் அகத்தியர் என்று அழைக்கப்படுவதால் அகத்திய பூர்வமும் புனிதமான திருத்தல சக்திகளுடன் தோன்றுவதில் வியப்பில்லையே ?பழையூர் தலத்தில் இந்த அகத்திய பூர்வம் ஐந்து டிகிரிகளுக்கு நிரவி உள்ளது. ஐந்து டிகிரிகள் முழுமையான வட்டத்தில் 72ல் ஒரு பகுதி (360/5 = 72). இந்த 72 டிகிரி என்பது முழுமையைத் தரும் ஒன்பதுடன் அகத்திய எண்ணான எட்டால் பெருக்கக் கிடைப்பது. அகத்திய நட்சத்திரம் ஒளிர்வது 80 டிகிரி அட்சரேகை என்பதை தற்போது நினைவு கூறுங்கள்.லோபாமுத்திரை பழையூர் சிவாலயத்திற்கு வந்தபோது அது 60 ஏக்கர் நிலப் பரப்பில் பிரம்மாண்டமாக வீற்றிருந்தது என்று கூறினோம் அல்லவா ? எனவே 6 (6+0=6) என்பது இத்தலத்திற்கான வாஸ்து இலக்கண எண் ஆகும். இந்த வாஸ்து இலக்கண விதியை ஒட்டி சித்தர் பிரான் ஆறாம் எழுத்துக்களின் கோவையில் தன்னுடைய தவ புண்ணிய சக்திகளை இறைவனிடம் அர்ப்பணித்துள்ளார்.
இது பற்றியே சித்தன் போக்கு சிவன் போக்கு என்று பெரியோர்கள் செர்ல்வார்கள். சிவன் அடுத்து என்ன செய்வான என்பதை வேறு எவருமே அறிய முடியாத்து போல சித்தர்கள் எந்த புண்ணிய சக்தியை, தபோ பலனை எங்கே எப்படி நிரவுவார்கள் என்பது எவருக்குமே தெரியாது, புரியாது.
சிவ பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களின் பெயர்களை மட்டுமே கூறுவது கூட ஒரு ஒப்பற்ற வழிபாடாக அமையும் என்பதால் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், அப்பர் போன்ற மகான்கள் சிவத்தலங்கள் என்னும் மணமுள்ள மலர்களைக் கோர்த்து திருக்ஷேத்திரக் கோவை போன்ற சிவனருட் மாலைகளாகப் படைத்துள்ளார்கள். இப்பதிகங்களை ஓதுவதும சக்தியுள்ள இறை வழிபாடு என்பதில் சந்தேகமில்லை.
இவ்வகையில் பழையூர் என்ற சிவத்தலத்திற்கும் அற்புத ஆன்மீகப் பொருள் ஒன்று இருக்கும் அல்லவா ?
பழையூர் என்றால் பழைய, தொன்மையான ஊர் என்றுதானே பொருள் ?
நீங்கள் பல பிறவிகளில் திருச்சியில் 50 ஆண்டுகள், மதுரையில் 30 ஆண்டுகள், சென்னையில் 40 ஆண்டுகள் வசித்ததாகக் கொண்டால் நீங்கள் எந்த ஊரில் வெகுகாலம் வசித்தீர்களோ அதுதானே உங்களுக்கு பழமையான ஊர் ?
அந்த ஊர் எது, சார் ?
இத்தனை பிறவிகளிலும் உங்களுடன் கூடவே இருந்த உங்களுடைய உள்ளம் என்ற மனமே உங்களுடைய பழைய ஊர். அந்த உள்ளத்தில், அகத்தில் குடி கொள்ளும் ஈசனே ஸ்ரீஅகத்தீசன்.
இதைத்தான் நமது வெங்கடராம சுவாமிகள், ”நாங்கள் போடுவது சாதாரண விதை கிடையாது. அது ஆன்மீக விதை. அதை உங்கள் உள்ளத்தில் போடுகிறோம். அது எப்போது முளைக்கும் என்று தெரியாது. ஆனால், என்றாவது ஒரு நாள் நிச்சயமாக முளைக்கும்,” என்பார்கள்.
எனவே நீங்கள் ஒரே ஒரு முறை பழையூர் ஸ்ரீஅகத்தீசனை தரிசித்தால் கூட போதும், அவர் உங்கள் அகத்தில் நிரந்தரமாகத் தங்கி விடுவார் என்பதில் ஐயமில்லை.
அகத்தியர் லோபாமுத்திரையை மணந்ததே தன்னை ஒக்கும தனயனைப் பெறுவதற்காகவே அல்லவா ? அப்போதுதான் அகத்தியரின் மூதாதையர்கள் நன்னிலை அடைவர். திருமணத்திற்குப் பின் லோபாமுத்திரை லோபாமாதா ஆனாள். அகத்திய முனியுடன் பொதிய மலை ஆஸ்ரமத்தை அடைந்தாள் அன்னை.
லோபாமாதா ஜகன்மாதாவாக உலகிற்கே அன்னையாக விளங்கினாள். தினமும் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து தன்னுடைய கணவன் நிறைவேற்ற வேண்டிய இறை வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றி வந்தாள் அன்னை.
அகத்தியரின் அகமே குளிரும் அளவிற்கு இருந்தது அன்னையின் சேவை. உத்தம தம்பதியரின் இலக்கணமே எவரும் வாய் விட்டுச் சொல்லாமலேயே ஒருவர் மற்றொருவரின் தேவையைப் புரிந்து அவர் எண்ணத்தை மனதார நிறைவேற்றுவதுதானே. கணவனின் தேவைகளை மட்டும் அல்லாது அனைத்து ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தையும் ஏற்று திறம்பட நிர்வகித்து வந்தாள் லோபாமாதா என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியம்.
அகத்தியர் தம்பதியர் குறித்த பெரும்பாலான கர்ம பரிபாலன இரகசியங்கள் இருடிகள் பாரதத்தில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் லோபாமாதா அகத்திய முனியின் பூஜைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து அளித்த பின் தங்களுடைய குடிசையிலிருநது வெளியே வருவாள் அன்னை. அப்போது அன்னையின் தரிசனத்திற்காக அனைத்து ஜீவராசிகளும் அகத்திய குடிலின் வெளியே காத்திருக்கும்.
ஐந்து தலை நாகம், பொன் பட்டாம் பூச்சி, வெள்ளைக் காக்கை, செந்தேள, ஆயிரங்க கால் பூரான், பஞ்ச வர்ணக் கிளி, நடமிடும் அன்னம் என்று மனிதர்கள் கண்டிராத, கேள்விப்பட்டிராத எத்தனேயா உயிரினங்களும் அன்னையை தரிசித்து தங்கள் குறைகளைக் கூறும். தேவியும் அந்த ஜீவராசிகளின் குறைகளைக் கேட்டு தகுந்து நிவாரண முறைகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த ”விருந்தினர்” அனைவருக்கும் தேவையான பிரசாதங்களையும் அளித்து வழி அனுப்பி வைப்பாள் அன்னை.
இத்தகைய சேவைகளால் பெரிதும் மகிழ்ந்த அகத்திய முனி தன்னுடைய விருப்பம் நிறைவேறும் பொன்னாள் நெருங்கி விட்டதை உணர்ந்து தேவியைப் பார்த்தபோது அகத்தியரின் விருப்பதை அறிந்த அன்னை, ”தவசீலரே, நீங்களோ தவ வேடத்தில் இருக்கிறீர்கள், நானும் உங்களோடு சேர்நது மரஉரி தரித்து தவக் கோத்தில் உள்ளேன்.”
”இத்தகைய மனோ நிலையில் தாம்பத்ய உறவு எப்படி முழுமை பெறும் ? எனவே தாங்கள் ஒரு அரசனுக்கு உரிய ஆடை ஆபரணங்களுடன் எழுந்தருளுங்கள். அதே போல் நாம் இருவரும பள்ளி கொள்ள விலை உயர்ந்த அழகிய படுக்கை ஒன்று வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம்,” என்று தன்னுடைய கருத்தை பணிவுடன் தெரிவித்தாள் லோபாமாதா.
அகத்திய முனிவரும் லோபாமாதாவின் கருத்தை ஆமோதித்து மீண்டும் பழையூர் சிவத்தலத்தை அடைந்தார்.
அகத்தியர் தவ சீலர். அவரிடம் பொன்னும் பொருளும் ஏது ? அடுத்த வேளை உணவிற்குக் கூட அவர் எம்பெருமானையே நம்பி இருந்தார். உத்தம சன்னியாசியின் இலக்கணமும் அதுதானே ?
எனவே பழையூர் சிவனை வணங்கி அவர் உத்தரவு பெற்று ஏதாவது அரசர்களிடம் சென்று லோபாமாதா விரும்பியவாறு பொன் ஆபரணங்களையும் விலையுயர்ந்த கட்டிலையையும் யாசகமாக, தானமாக கேட்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார் அகத்தியர் முனி.
அகத்திய பெருமான் காலத்தில் பழையூர் சிவத்தலத்தில் கன்னி மூலையில் ஸ்ரீஅயன கணபதி மூர்த்தி எழுந்தருளி இருந்தார்.
அயன கணபதி மூர்த்தியின் வரலாறும் சுவையானதே.
பழையூர் திருத்தல மூர்த்திகளுக்கு சிறப்பாக ஸ்ரீஅயன கணபதி மூர்த்திக்கு உகந்ததே உடுக்கை தாமரை மலர் அலங்காரம் ஆகும். ஒரு செந்தாமரை மலருடன் மற்றோர் மலரை அதன் கீழ் கவிழ்த்து வைத்து கட்டி இவ்வாறு 18 ஜோடி செந்தாமரை மலர்களை மாலையாகக் கட்டி 18, 36, 54 என்ற செந்தாமரை ஜோடி மலர்களால் இறை மூர்த்திகளை அலங்கரிப்பதே உடுக்கை தாமரை மலர் அலங்காரம் ஆகும். அற்புதமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியது.
இரு தாமரைகள் ஒன்றிற்கொன்று கவிழ்ந்த நிலையில் இருக்கும்போது அது உடுக்கையின் வடிவத்தில் இருக்கும் அல்லவா ? மேலும் மலர்களின் நடுவில் இருக்கும் மஞ்சள் நிற மகரந்த பகுதியும் (receptacle) உடுக்கையின் வ்டிவத்தில்தானே இருக்கும். இந்த உடுக்கைக்குள் உடுக்கையான மலர் அலங்காரம் இங்குள்ள புனிதத்தில் புனிதமான தல மூர்த்திகளுக்கு ஆனந்தம் அளிப்பதில் வியப்பென்ன ?
பழையூர் ஸ்ரீஅயன கணபதி அருளும் அனுகிரகம் யாதோ ? அதை உணர்த்துவதே அகத்திய முனியின் வரலாறு.
பழையூர் தலத்தை அடைந்த அகத்திய பெருமான் ஸ்ரீஅயன மூர்த்தியை வலம் வந்து தொழுதார். தும்பிக்கை நாதன் அகத்தியரை வாழ்த்தி ஒரு வாழை இலையால் மூடப்பட்ட தங்கத்தட்டை அவருக்கு அளித்தார்.
கணபதி மூர்த்தி, ”சிவ குழந்தையே, தன்னுடைய அடியார் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு சிவன் வைப்பானா ? சற்றும் தாமதியாது நேரே ஆகாய மார்கமாக பொதிய மலை செல்வாய். சிவ சிவ மங்களம்,” என்று வாழ்த்தி அகத்தியருக்கு விடை கொடுத்தார்.
கணபதி மூர்த்திக்கு தன் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்து விட்டு ஆகாய மார்கமாக பொதிய மலையை அடைந்தார் அகத்திய முனி.
வழி மேல் விழி வைத்து காத்திருந்த லோபாமாதா அகத்திய முனியைப் பார்த்து திகைத்தாள். கண் இமைக்கும் நேரத்தில் தனது கணவர் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஏன் அகத்தியரே எதிர்பாராத கூத்துதானே எம்பெருமான் நிகழ்த்திய அயன கணபதி கூத்து ?
லோபாமாதா பின் தொடர குடிசைக்குள் சென்ற அகத்தியர் கணபதி பிரசாதமான தங்கத் தட்டை தான் வழிபடும் ஸ்டிக சிவலிங்கத்தின் முன் வைத்து தரையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி எழுந்து அந்த தங்கத் தட்டை மூடியுள்ள வாழை இலையை எடுத்தார்.
அவ்வளவுதான். அடுத்த கணம் அகத்தியர் லோபாமாதா தம்பதியர் கண் முன் இருந்த அனைத்தும் மறைந்தன. ஓர் அற்புத அரண்மனை. அங்கே தோன்றியது. ஆயிரமாயிரம் பணிப் பெண்கள். எங்கும் தங்கமும் வைரமும் வைடூரியமும் கண்ணைப் பறித்தன. ஆங்காங்கே அழகிய நீர்ச் சுனைகள். அதன் நடுவே வைரங்களால் பதிக்கப்பட்ட தங்கப் படுக்கை அன்றலர்ந்த தாமைரையைப் போல பளிச்சிட்டது.
ஸ்ரீஅயன கணபதி அளித்த அரச போகத்தின் விளைவால் அகத்திய லோபாமாதா தம்பதிகள் பெற்ற ஈடு இணையற்ற அருள் முத்தே ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர். தன்னை ஒத்த தனயனை அகத்திய முனி பெற்ற வரலாறு இதுவே.
சித்தர்கள் அகத்திய முனியின் தவப் புதல்வனை ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் என்ற அடை மொழியுடனே அழைக்கிறார்கள். காரணம் என்ன ?
முதல் ஸ்ரீ இம்மைக்கும் மறுமைக்கும் நலந் தரக் கூடிய செல்வன் என்பதையும்,
இரண்டாவது ஸ்ரீ திருமாலைப் போல அழகு பொருந்தியவன் என்பதையும்
மூன்றாவது ஸ்ரீ நம்முடைய அகம் என்னும் உள்ளத்தில் நிரநதரமாய் எழுந்தருளி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியவன் என்பதையும் குறிக்கும்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் மகராஜ் கீ ஜெய்.
யாகம், வேள்வி, யக்ஞம் என்னும் அனைத்துமே இடம், உடல்,  மனம், உள்ளம் என அனைத்தையுமே தூய்மைப்படுத்துவதற்காகத்தானே இயற்றப்படுகின்றன. எனவே தூய்மையிலும் தூய்மையான லோபாமாதா அகத்தியர் தம்பதிகள் புனிதத்திலும புனிதமான பழையூர் சிவத் தலத்தில் கருணையிலும் கருணை உள்ள அயன கணபதி மூர்த்தியின் அருள் பிரசாதமாகப் பெற்ற ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் அனைத்து வேள்விகளிலும் பிரதான மூர்த்தியாக, எஜமான்னாக வழிபடப் படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.



1 comment:

  1. Yov endha website la irundha copy paste panniyo avangaluku thanks solluya🤦🤦🤦🤦

    ReplyDelete