Wednesday, 20 September 2017

திருத்திய மலை - அய்யா வாக்கு

திருத்திய மலை பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு

திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலம்
சிவபெருமான்‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’.என்னும் திருப்பெயரோடு ஈசன் அமர்ந்து அருளும் தலம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள திருத்தியமலை ஆகும்

திருத்தியமலைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம் அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.

திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும்
பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள்,  தாயினும் நல்லாள்.

ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும்.

படியேறிச் சென்றால் தெய்வானையுடன் அழகன் சுப்பிரமணியர் அரிட் காட்சி தருகிறார். இவர் சத்ருகளை அழித்துக் காப்பாற்றுபவர்.

நீதிமன்ற வழக்குகளில்  வெற்றிபெற இவரை சரணாகதி அடையலாம். செவ்வாய், சஷ்டிகளில் இவரை தரிசித்தால் சத்ருகளால் வரும் தொந்தரவுகள் நீங்கும்.

அதிகார நந்தி, அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் இறைவனை தரிசிக்கிறது.

திருத்திய மலை திருக்கோயில்   ராஜராஜ சோழனின் மகன்
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர்  இறைவனுக்கு
வந்தற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு..!

இறைவனால் படைக்கப்பட்ட  எத்தனையோ மலர்கள்  இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. தேவ அர்க்கய வள்ளிப்பூ என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே   காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு..!

வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே முறை பூக்கும்  சிறப்பு மிக்க சுனை அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை. !

தேவ அர்க்கய வள்ளிப்ப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது..!

‘தேவ அர்க்கய வள்ளிப்பூ மலர்ந்து இறைவனிடம் சேர்வதைப் பார்க்க விரும்பி, பிருங்கி முனிவர். அந்த அருமையான நேரத்தை நோக்கி தவமிருந்தார்.

திருந்திய   மலையில் பல கிளிகள் இருந்தன. அவற்றுக்கு இப்பூ பூக்கும் நேரமும் காலமும் தெரியும். அந்த விவரத்தை அவை தமக்கிடையே பேசிக்கொள்வதை பிருங்கி முனிவர் கவனித்தார். விவரமும் புரிந்துகொண்டார்.

அப்போதிலிருந்து அந்தக் கிளிகளையும் கவனித்து வந்தார்.
அந்தப் புனிதமான நேரமும்  வந்தது.

சுனையில் தோன்றிய சங்கு போன்ற தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார்.

பிருங்கி முனிவரையும் கிளிகளையும் தன்னடி
சேர்த்தருள் செய்தார் இறைவன்.

கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. ..!

கிளிகளோடு பிருங்கி முனிவர், அகத்தியர்-லோபாமுத்ரா போற்றி வணங்கிய ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயின் நல்லாளையும் தரிசித்து நற்பலன் பெறலாம்.

பிரம்ம ஹத்தி தோஷம் , திருமணத்தடைகள் ஆகியவற்றை நீக்கும் பரிகாரத்தலமாகத்திகழ்கிறது திருத்தியமலை..!
இதன் பழைய பெயர் திருத்தேசமலை.

உமா மகேஸ்வர வடிவம் , பைரவர் , மகாலஷ்மி சண்டிகேஸ்வரர் ,
சூரியன் , நவக்ரஹங்கள் தரிசனமும் பெறலாம் ..!

கோயில் 84 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் தாயினும் நல்லவள்.
கோயில் 5050 வருட முற்பட்ட பழைய கோயிலாகும்.

திருத்தியமலை. திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருத்திய மலை பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
ஒவ்வொ௫ மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொ௫  ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தூர தூர பகுதியிலி௫ந்து வ௫ம் மாந்தர்களுக்காக ஏற்பட்டது.அவற்றிலே ஒன்றுதான் இந்த "பிழை தி௫த்தும் கிரியாகும்".மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் வுள் அன்போடு மனம் வ௫ந்தி  ,மன்னிப்பை கேட்டு கொண்டால், இந்த இடத்திலே, அவனுடைய விதி தி௫த்த படும்.எனவே மனிதன் பிழையை மட்டும் அல்ல.அவன் தலை எழுத்தையே தி௫த்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும்,பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு வுண்டு

அகத்தியர் ஞானம்

1 comment:

  1. Correct details required :
    1. Who built the temple and
    2. When it was built .

    ReplyDelete