இந்திரன் சிவபூசனைக்காக
நந்தவனம் வைத்தான். சூரபன்மனின் ஆணையால் மழை பெய்யாது நந்தவனம் வாட, இந்திரன் மனம் வாடினான். விநாயகனை வேண்டினான். அவர் காக்கை
வடிவம் எடுத்துச் சென்று அகத்தியரின் கமண்டல தீர்த்தத்தைக் கவிழ்த்தார். கமண்டல
கங்கை பெருக்கெடுத்தது. இந்திரனின் நந்தவனம் செழித்தது. கா, விரியும்படி இந்நதி பெருகியதால் காவிரி எனப்பட்டது.
No comments:
Post a Comment