Wednesday, 27 September 2017

சித்தநாதேஸ்வரர் கோவில் மற்றும் கோரக்கர் சந்நிதி

*கோரக்க சித்தருக்கு அருள்புரிந்த ஈசன் எழுந்தருளியுள்ள தலம் ; தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் சிவதலம் ; மகாலட்சுமியின் அவதார தலம்..*

*அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர் – தஞ்சாவூர்*

தொலைபேசி : *0435-2467343 ;  0435-2467219*

 மூலவர் : *சித்தநாதேஸ்வரர்*

உற்சவர் : *சோமாஸ்கந்தர்*

அம்மன்/தாயார் :  *சௌந்தர நாயகி, அழகாம்பிகை*

தல விருட்சம் :  *பவளமல்லி*

தீர்த்தம் :  *சித்தநாத தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்*

ஆகமம்/பூஜை :  *சிவாகமம்*

பழமை :  *1000-2000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர் : *சித்தீஸ்வரம், நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம்.*

ஊர் : *திருநறையூர்*

பாடியவர்கள்:  *திருஞானசம்பந்தர், சுந்தரர்*

🅱 *தேவாரப்பதிகம்:* 🅱

*நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.*   - சுந்தரர்

🎸 *தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 65வது தலம்.* 🎸

🅱 *திருவிழாக்கள் :*🅱

🌻 மார்கழி திருவாதிரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்

🌻 ஐப்பசி அன்னாபிஷேகம்

🌻 மகா சிவராத்திரி

🅱 *தல சிறப்பு:*🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

🎭 மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.

🎭 *"மழலை மகாலட்சுமி'*  என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

🎭 சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது.

🎭 திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இத்தலத்தில் பிட்சாடனராக தரிசனம் தந்ததால் இவ்விறைவன் கங்காள தேவர் என அழைக்கப்படுகின்றார்.

🎭 இங்குள்ள நடராஜர் திருவாதிரை உத்ஸவத்தின் போது ஜடாமுடி விரித்து ஆடும் ஆனந்த நடனம் பிரசித்தி பெற்றது.

🎭 பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம்.

🎭 கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.

🎭 துர்வாசமுனிவரால் பறவை உருவச்சாபம் பெற்ற மனிதன் (நரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு *'நரவுரம்'* என்றும் பெயர்.

🎭  பிரம்மன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும் சொல்லப்படுகிறது. சுகந்தவனம் என்பது வேறொரு பேர்.

🅱 *நடைதிறப்பு:* 🅱

🗝 *காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.* 🗝

🅱 *பொது தகவல்:*🅱

🦋 மேற்கு நோக்கிய தலம் இது.

🦋 இத்தலவிநாயகர் ஆண்டவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🦋 சவுந்தர்யநாயகி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.

🦋  மகாலட்சுமி சன்னதி அருகில் ஒரு தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.

🦋 கிரக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.

 🦋  பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு.

🦋 கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, "பிரசன்ன துர்க்கை' என்று அழைக்கப்படுகிறாள். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள்.துர்க்கையின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

🦋 அருகில் உமையொருபாகன், பிச்சாண்டவர், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர்.

🦋 பிரகாரத்தில் சப்தகன்னியர், பஞ்சலிங்கம், ஆண்டவிநாயகர், கால பைரவர், வீர பைரவர் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

🅱 *பிரார்த்தனை:*🅱

🌹 சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

🌹 தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🌹 புதன் கிழமை புத ஹோரையில் சித்தநாதேஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்வித்து, பித்ரு தோஷ பரிகாரம் தேடிக் கொள்கின்றனர்.

🌹 ஷண்முகருக்கு பிரதி செவ்வாய் கிழகைகளில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து விரோதிகளால் வரும் ஆபத்துகளிலிருந்து விடுபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:
 சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தும் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:*

🔥 நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர்.

🔥 தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.
*மழலை மகாலட்சுமி:

🔥 இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

 பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதி முன்பு கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது இவளுக்கு 108 தாமரை மலர்களை படைத்து பூஜிக்கிறார்கள். இவளுக்கு அருகில் முருகன் தனிசன்னதியில் இருக்கிறார்.

கோரக்க சித்தர்

🔥 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், "சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.

 *கோவில் அமைப்பு:*

 சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், காசி விசுவநாதர், துவார கணபதி, ஆண்ட விநாயகர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து கால பைரவர், வீர பைரவர், சூரியன், விநாயகர், நாகம்மாள் ஆகியோர் உள்ளனர். அடுத்து சித்தலிங்கம், ரினலிங்கம், வாயுலிங்கம், தேஜஸ்லிங்கம், ஜோதிலிங்கம் ஆகியவை உள்ளன. ரினலிங்கத்திற்கும், தேஜஸ்லிங்கத்திற்கும் அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார்.

அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர், பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி வராகி, சாமுண்டா, வலம்புரி விநாயகர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, மேதா மகரிஷி, நடராஜர், வரசித்தி விநாயகர் ஆகியோர் உள்ளனர்.
ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது.
ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை.
கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது.

பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும்.
மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.  இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள்.
குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது.
மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.

*தல வரலாறு:*

⛱ மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.

⛱ மேதாவியின் பக்தியில் மகிழ்ந்த சிவன் திருமாலிடம், மகாலட்சுமியை மேதாவியின் மகளாக பிறக்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டார். திருமாலும் சம்மதித்தார். ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, திருமாலுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். மேதாவி மகரிஷிக்கு காட்சி தந்த சிவன், இத்தலத்தில் எழுந்தருளினார்.

*சிறப்பம்சம்:*

Ⓜ  *அதிசயத்தின் அடிப்படையில்:*

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

♻ முதலாம் இராஜஇராஜன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் வரையிலான மன்னர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக் கல்வெட்டுக்களில் இத்தலம் 'க்ஷத்திரிய சிகாமணி வளாநட்டு, திருநறையூர் நாட்டுத் திருநறையூர்' என்றும் குறிக்கபட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர்" என்றும், "பஞ்சவன் மாதேவியான சதுர்வாதி மங்கலத்துத் திருநறையூர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுக்களிலிருந்து
 (1) பிட்சாடனருக்கு நிவேதனம் செய்யப் பொன் தந்தது
(2) நாளன்றுக்குச் சிவயோகியார் ஒருவருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக் கருப்பூர் உடையான் என்பவர் நிலம்விட்டது
(3) கோயிலில் விளக்கெரிக்க நிலங்கள் வழங்கியது போன்ற செய்திகள் தெரியவருகின்றன.

*இருப்பிடம்:*

✈ கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இருக்கிறது.

....

No comments:

Post a Comment