இந்திரன் பிரம்மஹத்யா
தோஷத்தினால் ஒரு முறை இந்திரலோகத்தை விட்டு ஓடியொளிந்தான். பாண்டவர்களின்
முன்னோனும் சந்திரகுல மன்னனுமாகிய நகுஷன் அசுவமேதயாக பலத்தால் இந்திரன் ஆயினன்.
செருக்கினால் சீரழிந்தான்
அவன். இந்திராணியைக் காமுற்றான். தன் பெருமையை அவள் அறிந்து மதிக்க வேண்டுமென
எண்ணினான். இதுவரை எந்த இந்திரனும் பயன்படுத்தாத ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும்.
அதுவே தன் பெருமைக்கு தகுந்தது என முடிவு செய்து சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில்
இந்திராணி இருப்பிடம் சென்றான்.
பல்லக்கின் முன்புறத்தில்
குள்ளமான திருமேனியுடைய அகத்தியர் சுமந்து சென்றார். அதனால் பல்லக்கு மெதுவாகச்
சென்றது. காமவேகம் கொண்டிருந்த நகுஷன் பல்லக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற
எண்ணத்தில் “ஸர்ப்ப! ஸர்ப்ப!
(வேகமாகச் செல்) என்று கூறி அகத்தியரைக் காலால் தீண்டினான்.
அகத்தியர் உடனே “ஸர்ப்போ பவ“ (பாம்பாக மாறுவாய்) என்று
சபித்தார். இங்ஙனம் அவர் ஓர் அபலையின் கற்பினைக் காத்தார். இந்த நகுஷன் பின்னாளில்
பாண்டவர் வனவாச காலத்தில் பீமனைப் பிடிக்க, அவனைக் காப்பாற்ற வந்த
தருமனிடம் தருமத்தின் சூட்சுமங்களைக் கேட்டுணர்ந்து சாபவிமோசனம் பெற்றான்.
இவ்வரலாற்றை மகாபாரத்தினுள் காணலாம்
No comments:
Post a Comment