Sunday, 10 September 2017

குருநாதர் போகருக்காக மஹாபாரணி யாகம்

இன்று ஆங்கில மாதம் செப்டம்பர் 10 ஆம் தேதி சுமார் மூன்று மணி அளவில் மகா குரு காலாங்கி நாதர், கஞ்சமலை சித்தர், மகா குருநாதர் போகர், மற்றும் முருகர், அனைத்து சித்தர்களின் ஆசியுடன் போக மகரிஷி அவதரித்த மஹாபாரணி நட்சத்திரமான இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி கஞ்ச மலையின் மேல் சிறப்பு யாகம் போக சித்தருக்காக நடத்தப்பட்டது. யாகத்திற்கு முழு காரண கர்த்தாவாக வசீகரன் அய்யா இருந்தார். யாகம் நடத்தும் இடத்தை தேடி சென்ற போது அங்கே மிக கச்சிதமாக வேல மரத்தின் அடியில் காளி மற்றும் பரிவார தேவதைகள் பிரதிட்டை செய்த இடத்தில் அமைந்தது. மழையும் இல்லை வெய்யிலும் இல்லை, நல்ல மர நிழல் அமைந்தது.

அடுத்த மாதம் பரணி நட்சத்திரத்த்திற்கு அக்டோபர் 8 ஆம் தேதி திரு ஈங்கோய் மலையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும்.


































































No comments:

Post a Comment