Tuesday, 12 September 2017

கரு உற்பத்தி ரகசியங்கள்

பிராணாயாமத்தின் சிறப்பு
***************************

(கரு உற்பத்தியில் அடங்கியுள்ள சூக்சும ரகசியங்களை 9000 வருடங்களுக்கு முன்னரே என் ஐயன் திருமூலன் சொல்லுகிறான் .... கேட்பவர்கள் கேளுங்கள் ......... கரு உற்பத்தியில் ஆக்சிஜனின் தேவையும், பங்கும்) விரிவாக விளக்கம் .)

சூரியனின் ஒளிக்கதிர்கள் பகலில் வீசுவதால் காற்று மண்டலம் வெப்பமடைகிறது. இதனால் மனித உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இரவில் அதிகமாகிறது. கோடை காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. குளிர்காலத்தில் அதிகமாகிறது. பகலில் வளர்சிதை மாற்றம் குறைவாக நடப்பதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் வேலை செய்கிறோம். அதனால் உணவுப் பொருள்கள் சிதைக்கப்படுகின்றன. சில நேரங்களில் சிதை மாற்றமும் நடைபெறுகிறது. எனவே நம் உடலில் கழிவுகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தக் கழிவுகள் மாலை முதல் நடுஇரவு வரை உடலில் இருந்து வெளியேற்றப்பட சிறுநீரகங்களும், நுரையீரலும் செயல்படுகின்றன. நடுஇரவு வரை நம் உடலில் கழிவுகள் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் உருவாகும் குழந்தை இறந்துவிடவோ அல்லது நோய்வாய் பட்டதாக இருக்கவோ வாய்ப்புகள் அதிகம். மேலும் நடுஇரவு வரை இரு பாலினரின் உடலிலும் கழிவுகள் அதிகம் இருப்பதால், நேர்மின்சுமை அமிலத் தனமை அதிகரித்து பெண் குழந்தைகள் பிறக்கும் சதவிகிதம் அதிகரிக்கும். நடு இரவுக்குப் பிறகு கழிவுகள் வெளியேறிவிடுவதால், வளர் சிதை மாற்றமும் அதிகரிக்கும். எனவே உடலில் காரத்தன்மை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் உருவாகும் குழந்தை ஆணாகவே இருக்கும்.

விடியற் காலையில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், நரம்பு மண்டலங்கள் அதிக செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். இந்த செயல்பாடுகள் அமைதியின்மையைக் கருவுக்குக் கடத்திவிடுவதால், குழந்தை மனமைதியற்ற, தீய, மாறுபட்ட குண இயல்புகளைக் கொண்டதாகப் பிறக்கக்கூடும்.

பெண்களின் கருமுட்டை உருவான 11 மணி நேரத்தில் உறவு கொண்டு 12வது மணி அளவில் கரு உருவானால் புரோஜெஸ்ட்ரோன் குறைந்த அளவே சுரந்து, அமிலத்தன்மை அதிகமாகக் காணப்படுவதால் பெண்குழந்தை பிறக்கும்.

கருமுட்டை உருவான 40 மணி நேரத்திற்குப் பிறகு சேர்ந்தால், புரோஜெஸ்ட்ரோன் அதிகமாகச் சுரந்து கருப்பைக் குழாயின் பிளாஸ்மா அதிகக் காரத்தன்மை பெற்றுவிடுவதால் ஆண்குழந்தை பிறக்கும்.

அதே போன்று வருடத்தின் நான்கு பருவங்களில் எல்லா பருவங்களும் கரு உற்பத்திக்கு ஏற்புடையதல்ல. குளிர் காலத்தில் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும்.

அதிலும் ஒல்லியாக இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உருவாகும் கழிவை வெளியற்ற முடியாமல் நச்சாக இருக்கும். எனவே உடல் அதிக அமிலத் தன்மையோடு விளங்கும். எனவே கரு நீடிக்காது. அப்படி கரு நிலைத்தால் நிச்சயமாகப் பெண்குழந்தை பிறக்கும். இதற்கு எதிர்மறையாகக் கோடைகாலத்தில் ஆண்குழந்தைகள் அதிகம் உருவாகும். பெண்களின் உடலில் வயது ஏறேற அமிலத் தன்மை அதிகரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இளமையில் ஆண் குழந்தையும், வயதான பிறகு பெண் குழந்தையும் பிறக்கும்.

இளம் வயதில் உறவில் ஆர்வம் அதிகமிருப்பதால் மாலைக்கு மேல் நடு இரவுக்குள் உறவு கொள்வதால் பெண் குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும். ஆண்கள் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் அவர்கள் உடலில் காரத் தன்மை அதிகரிக்கும். இதனால் ஆண்களின் விந்து பிளாஸ்மா இயல்பானக் காரத்தன்மையைவிட அதிகமாக இருக்கும். எனவே நிச்சயமாக அப்போது உருவாகும் கரு ஆண் குழந்தையாகத் தான் இருக்கும். இந்த கார, அமிலத் தன்மை மாறுபாட்டைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் திருமணத்தின் போது ஆணைவிட பெண்ணிற்கு வயது குறைவாக இருக்கும்படி அமைத்தார்கள். எனென்றால் பெண்களுக்கு வயது கூடக்கூட அமிலத் தன்மை அதிகரிக்கும்.

வளர்பிறை, மற்றும் பௌர்ணமி அதாவது சந்திரனின் காந்த ஆற்றல் அதிகமாக உள்ள நாட்கள் கரு முட்டை உற்பத்தியாகும் நாட்களாக இருந்து உறவு கொண்டால் கரு உருவாகும் வாய்ப்பு அதிகம்.

நிலநடுக் கோட்டில் சூரியன் அதிகமான நாட்கள் தன் ஒளிக்கதிர்கள் செங்குத்தாக வீசுவதால் அந்தப் பகுதிகள் வெப்பமாகவே காணப்படுகின்றன.

எனவே அந்தப் பகுதிகளில் காற்றழுத்தம் குறைவாகவே இருக்கின்றன.எனவே வளர்சிதை மாற்றமும் குறைவாகவே நடைபெறுகிறது. ஆகையினால் இப்பகுதி மக்களின் உடலில் காரத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன. இதற்கு எதிர்மறையாக குளிர் பிரதேசங்களில் பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆண்களை விடப் பெண்களே அதிகம். எனென்றால் அங்கே உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாக நடைபெற்று அமிலத்தன்மை உடலில் மிகுந்து விடுவதே காரணம்.

இத்தனைக்கும் தமிழகமும், கேரளாவும் ஒரே அட்சரேகையில்தான் அமைந்துள்ளன. சமவெளிப் பிரதேசங்கள் குறந்தும், மலைப்பகுதிகள் அதிகம் உள்ள யூ. எஸ். எஸ். ஆர் கூட்டு அமைப்பு நாடுகளில் 100 பெண்களுக்கு 75 ஆண்களே பிறக்கின்றனர் என்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இந்நாட்டில் ஆக்சிஜன் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. குளிர் பிரதேசமாக இருப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகமாக நடைபெற்று இரத்த பிளாஸ்மாவில் அமிலத்தன்மை அதிகரித்து விடுகிறது. எனவே இரண்டு பாலினருக்கும் அமிலத்தன்மை அதிகரித்துவிடுகிறது. ஆனால் நிலப்பகுதியின் உள்ளே வெகு தொலைவில் உள்ள மலைப்பிரதேசமான பூட்டான், திபெத் போன்ற பகுதிகளில் காற்றழுத்தம் மிகுதியாகக் காணப்படுவதால், இங்கு ஆண்கள் விகிதம் அதிகமாக இருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் உயர்ந்த மலைப் பகுதிகளில் காற்றழுத்தம் குறைவாக இருப்பதால், 100 பெண்களுக்கு 85 ஆண்களே இருப்பதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

பொதுவாக நாம் இடது பக்கமாகச் சாய்ந்து படுத்தால் அதிகப்படியான காற்று வலது நுரையீரல் பகுதியில் போய் தங்குகிறது. இதனால் அதிகப்படியான ஆக்சிஜனை இரத்தம் உடலின் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இதனால் அதிகப்படியான ஆக்சிஜன் கலந்த இரத்தம் பாலுறுப்புகளுக்குக் கிடைக்கிறது. இருப்பினும் பெண்கள் உறவின் போது இடது பக்கமாக சாய்ந்து படுத்தால் விந்தணுக்கள் கருப்பை குழாயைச் சென்றடைய முடியாமல் போய்விடும். எனவே மலர்ந்த நிலையே சிறப்பாகும். கருவணு வலப்பக்க கருப்பைக் குழாயில் இருந்தாலும், இடப்பக்க கருப்பைக் குழாயில் இருந்தாலும் அதனுடன் சேர்ந்து விந்தணு கருவுற எளிதாக இருக்கும்.ஆணும் பெண்ணும் படுக்கும் போதும், அமரும் போதும் ஆண் வலது புறமாகவும், பெண் இடதுபுறமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. எல்லா வகையிலும் சிறப்பாகும்.

ஆண்கள் அதிகமான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெறும் போது, உடலில் ஏற்படும் அமிலத்தன்மையான கழிவுகள் வெளியேற்றப்பட்டு காரத்தன்மை மிகும். காரத்தன்மை அதிகமாகும் போது காரத்தன்மையான ஆண்பாலின நீர்மங்கள் அதிகம் சுரந்து விந்து நீர்மங்கள் அதிகக் காரத்தன்மையுடையவையாக இருப்பதால் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும். ஆணுக்கு வலது நாசியில் சுவாசம் ஓடிக் கொண்டிருக்கும் போது, பெண்ணுக்கு இடது நாசியில் சுவாசம் ஓடினால் நிச்சயமாகப் பிறக்கும் குழந்தை ஆணாகவே இருக்கும். ஏனென்றால் இடது கலையில் சுவாசம் ஓடும் போது குறைந்த ஆக்சிஜனே கிடைப்பதால் இரத்த பிளாஸ்மாவில் அமிலத்தன்மை மிகுந்து செயல்பாடுகள் குறையும்.

அதனால் காரத்தன்மையுடைய ஆணின் குரோமோசோம்கள் எதில் மின் சுமை உடையதாக கருமுட்டையோடு சேரும் போது ஆண்குழந்தை பிறக்கிறது.
இதையே எதிர்மறையாகச் செய்யும் போது பெண் குழந்தை பிறக்கும். நம் நுணுக்கமான செயல்பாடுகளால் விரும்பும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்தத் தகவல் தரப்பட்டுள்ளது.

ஆண் பெண் இருவருக்கும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது கருவுற்றால், அமில, காரத்தன்மை இருவருக்கும் சராசரியாக இருப்பதால்(XY) விந்துவிலுள்ள குரோமோசோம்கள்கருவணுவைச் சேர்வதில் குழப்பம் ஏற்பட்டு, பலகீனமான செயல்பாட்டினால் கருவுற்று அலியான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

கருவுருதலில் மனமும் முக்கிய காரணியாகத் திகழ்கிறது என்று பண்டைய காலம் தொட்டே அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. உறவின் போது தம்பதியரின் மனநிலை டி. என். ஏ வில் பதிவாகிவிடுவதால் குழந்தையின் குணம் அதை ஒட்டியே அமையும் என்பது உண்மையாகும். பண்டைய காலங்களில் இதற்காகவே பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கான விஞ்ஞான ஆதரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. என்றாலும், அவற்றைச் சொல்கிறேன். மாதவிடாய் காலத்தில் பெண் கண்ணுக்கு மையிட்டால் பிறக்கும் குழந்தை குருடாக இருக்கும் என்றும், பகலில் தூங்கினால் தூங்குமூஞ்சிக் குழந்தை பிறக்கும் என்றும், அதிகம் அழுதிருந்தால் பார்வைக் குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் என்றும், கால் விரல்களால் பூமியைக் கிண்டியிருப்பின் வழுக்கை(பிற்காலத்தில்) விழும் குழந்தை பிறக்கும் என்றும், நீரில் மூழ்கி குளித்தால் சிடுசிடுத்த முகம் உடைய குழந்தை பிறக்கும் என்றும், குளிர் காற்றில் அதிகம் நின்றிருந்தால் மனநிலை பாதித்த குழந்தை பிறக்கும் என்றும், கடுமையாக உழைத்தால் பருமனான குழந்தை பிறக்கும் என்றும், சத்தமாக அடிக்கடி சிரித்தால் பிறக்கும் குழந்தையின் உதடு, நாக்கு, பல் முதலியவைகள் பழுப்பாகவோ, கருப்பாகவோ இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சொல்லப்பட்டவை. ஆண்களைப் பொருத்த வரை குரங்கை வளர்க்கும் ஆணின் குழந்தையின் முகம் குரங்கு சாயலைப் பெற்றிருக்கும் என்றும், கிளியை வளர்க்கும் ஆணின் குழந்தையின் குரல் கீச்சுக் குரலாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும் எல்லாவற்றையும் நிருபிக்க ஆதாரம் இல்லை.

அதாவது மனதில், ஹைப்போதாலமஸில் உள்ள டி. என். ஏ வில் உள்ள குரோமோசோம்களில் பெற்றோரின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் பதிவாகி, அது பாலின செல்கள் மூலம் குழந்தைக்கு கடத்தப்படுகிறது என்பதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்கிறது.

பிராணாயாமம் பற்றித் தேடத் தேட, அதற்குள் பொதிந்து கிடக்கும் அதி அற்புதமான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

 அஷ்டாங்க யோகத்தைக் குறித்து ஒவ்வொன்றாகத் தேடிக் கொண்டே போனால், இந்த ஆயுள் போதாது என்றே தோன்றுகிறது. நம் சித்தர்கள் ஏன் ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள் என்பது எனக்கு இப்போது நன்றாகப் புரிய வருகிறது. இவ்வளவு மகத்தான விஷயங்களையெல்லாம் நமக்குத் தந்தருளிய அவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்? முடியும். அது அவர்கள் காட்டிய வழிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவது மட்டுமே.

அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். அதை உத்தேசித்தே இத்தகைய அறிய விஷயங்களை அனுபவித்து, ஆராய்ந்து தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இந்தப் பிராணாயாமம் மூலம் நமக்குக் கிடைக்கும் அதிக அளவு ஆக்சிஜனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்த்தால், நமது உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கிறது.

குளுக்கோஸ், கொழுப்பு, புரதங்களை எரித்து சக்தி, கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவியை உருவாக்குகிறது. சக்தியானது அடினோசன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப் பொருளாக மாறுகிறது. அந்த அடினோசன் ட்ரைபாஸ்பேட் புரதங்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. ஆக்சிஜன் எதிர் மின் சுமை உடைய அயனிகளாகப் பிரிந்து உடலின் காரத்தன்மையை அதிகரிக்கிறது. அதனால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் உள்ள பிளாஸ்மா செல் சுவர் வழியாகச் செல்லும் பொருள்களின் அளவு மாறுபடுகிறது. சைட்டோ பிளாசத்தின் புரத உற்பத்தி மாறுகிறது. உட்கருவிலும் புரத உற்பத்தி மாறுகிறது.(ஒவ்வொரு செல்களுக்கும் எல்லையாக அமைந்துள்ள செல் சுவருக்கு பிளாஸ்மா சவ்வு என்று பெயர்.

பிளாஸ்மா என்றால் மின்சுமையுடைய பொருள். இது திட, திரவ, வாயு நிலையில் அல்லாது நாலாவது நிலையில் அமைந்த ஒரு பொருளாகும். இந்த பிளாஸ்மா நிலையிலேயே வானில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன. இது செல்லுக்குள் செல்ல வேண்டியவற்றை அனுமதித்தும் மற்றவைகளை விலக்கியும் வைக்கிறது. செல் சுவருக்குள் பெரும் பகுதி சைட்டோ பிளாஸ்மாவும், மையப்பகுதியில் உட்கருவும் அமைந்துள்ளது. இந்த சைட்டோ பிளாசத்தில் புரோட்டின் கொழுப்பு, மாவுப் பொருள்கள், வைட்டமின்கள் முதலிய சத்துப் பொருள்களும், உயிருள்ள மைக்ரோசோம்கள், லைசோசோம்கள்,கோல்கை உறுப்புகள், நுண்குமிழ்கள், வெற்றிட உணர்வு இழைகள், மைட்டோகாண்டிரியா முதலிய பொருள்கள் உள்ளன. இந்த மைட்டோகாண்டிரியாவில்தான் உடலுக்குத் தேவையான சக்தியில் பெரும் பகுதி உற்பத்தி ஆகிறது. எனவே இதை சக்தி வீடு என்பர்.

செல் உள்கருவில் உள்கருச்சவ்வு, உள்கருத் திரவம், உள்கருமணி போன்றவைகள் உள்ளன. செல்களின் அனைத்து செயல்களையும் கட்டுப் படுத்துதல், மற்றும் பாரம்பரிய குணங்களைக் கடத்துதல் இந்தப் பகுதியில்தான் நடை பெறுகிறது. இங்குதான் 46 வகையான குரோமோ சோம்கள் உள்ளன. ஆர்.என் ஏ மற்றும் டி. என். ஏ உருவாகுவதும் இங்குதான்.

நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்பட்ட சத்துப் பொருள்கள் சிதைக்கப்படுவது சிதைமாற்றம். செல்களை உருவாக்குவது, உணவுச் சத்துக்கள் உயிர் பொருளாக மாற்றப்படுவது, சேமித்து வைக்கப்படுவது இந்நிகழ்ச்சிகளுக்கு வளர் மாற்றம் என்று பெயர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சேர்த்தே வளர் சிதை மாற்றம் என்று கூறுவார்கள்.
இவ்வளவு நீள விளக்கம் எதற்கு என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆக்சிஜனே இயக்குனர். ஆக்சிஜன் நமது உடலில் தொடர்ந்து நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. அதன் பங்கு மிகவும் முக்கியமானதும், பாரம்பரியமானதும் ஆகும். இரத்தத்தில் கார, அமிலத்தனமைகளுக்கு காரணமாக அமையும் ஆக்சிஜன் புரத உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக்சிஜன் புரத உற்பத்தியில் ஈடுபடும் வேக அளவிற்கு ஏற்ப 20 அமினோ அமிலங்கள் மற்றும் சில அமினோ பொருள்களில் இருந்தும் பல்வேறு விதமான புரதங்கள் உற்பத்தி ஆகின்றன. கோடை காலத்தில் இந்த புரதங்களின் பெரும் பகுதி வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுகின்றன.

குளிர் காலத்தில் வெப்ப சக்தி பெறவும், சிதை மாற்றத்திற்கும் போக எஞ்சி உள்ள புரதங்களே வளர் மாற்றத்திற்கு பயன்படுகின்றன.

மேலும் கோலேன் என்னும் அங்ககச் சேர்மத்துடன் ஆக்சிஜன் வினை புரிவதால் 7 பெண்பால் நொதிகளும், 10 ஆண்பால் நொதிகளும் உருவாகின்றன. இதில் ஆண்பால் நொதிகள் அதிகக் காரதந்தன்மை உடையவை, பெண்பால் நொதிகள் அதிக அமிலத் தன்மை உடையவை. இவையே கரு உற்பத்தியையும், அது ஆணா, பெண்ணா என்பதையும் தீர்மானிக்கின்றன. மனித ஜீன் மின்னாற் பகுப்பில் பெண்பாலின் X குரோமோசோம்கள் அமிலத்தன்மை உடையதென்றும், ஆண்பாலின் Y குரோமோசோம்கள் காரத்தன்மை உடையதென்றும் நிருபிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பாலினத் தேர்விலும் ஆக்சிஜன் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்.

இப்படியாக பாரம்பரிய குணத்தைக் கடத்தும் டி. என். ஏ மற்றும் புரதங்களின் உற்பத்தி, ஆர். என்.ஏ உற்பத்தியையும் தூண்டிஅவற்றின் அளவை நிர்ணயம் செய்வது போன்ற நிலைகளிலும் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறோம். இனி ஒரு நுட்பமான விஷயம் என்னவென்றால், மார்பினுள் பெரும் மூச்சுக் குழலானது வலது கிளை, இடது கிளை என்று இரண்டாகப் பிரிகிறது.வலக்கிளை மூன்று கிளைகளையும், இடக்கிளை இரண்டு கிளைகளையும் உடையது.

மார்பின் இடப்புறம் சாய்ந்தவாறு இதயம் உள்ளது. அதற்கு ஏற்ப நுரையீரலின் இடப்பறம் வலப்புறத்தை விட சிறிதாக உள்ளது. இடது புற நுரையீரல் மேல் கீழ் என்ற இரண்டு பகுதிகளையே கொண்டுள்ளது. வலது புற நுரையீரல் மேல், நடு, கீழ் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இடது பக்க நுரையீரலின் மூச்சுவழிக் குழாய்கள் சிறியதாகவும் குறுகியதாகவும் காணப்படும்.

வலது பக்க நுரையீரலின் மூச்சுக் குழாய்கள் பெரியதாகவும் கட்டையாகவும் காணப்படும். இத்தகைய அமைப்பினால் வலது பக்கமே அதிகக் காற்று சென்று வர முடியும்.

இயற்கையாகவே பெண்களுக்கு இரத்தமும், புரதமும் வெளியேறுவதால் ஹீமோகுளோபின் குறைந்து ஆக்சிஜன் குறைவதால் அமிலத்தன்மை அதிகமாகிறது.மண்ணீரலில் சேமிக்கப்படும் இரத்தத்தின் அளவும் குறைகிறது. இதயம் இடப்பக்கம் சாய்ந்திருத்தல், மண்ணீரல் இடப்புறம் இருத்தல், இரப்பை இடது பக்கத்தில் இருப்பது, நுரையீரலின் இடது பக்கம் சிறியதாக இருத்தல் போன்ற காரணங்களால் குறைவாக இருக்கும் இரத்தம் இடது பக்கமே அதிக அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதனால் இடது பக்க கருவகத்தில் அண்டனு கருவுற்றால் பெண்குழந்தை பிறக்கிறது. கருவகத்தின் இடது புறம் லருவுற்றிருக்கும் பெண்கள் இடது பக்கமாகவே அதிக நேரம் சாய்ந்து படுக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

இதை வைத்தே நம் முன்னோர்கள் பிறக்கப் போவது பெண் குழந்தை என்று சொல்லிவிடுவார்கள். இதையே வலது பக்கம் என்றால் ஆண்குழந்தை என்பார்கள். சிவ சக்தி கோட்பாட்டில் ஆண்படிவமான சிவனை வலதாகவும் பெண் படிவமான சக்தியை இடதாகவும் குறிப்பிடுவது இந்த அமிலத்தன்மை, காரத்தன்மை இரகசியத்தினால்தான். வலப்பக்கம் அதிகக் காற்றைப் பெற்று காரத்தன்மையை உணர்த்துவதாலும், இடப்புறம் குறைவானக் காற்றைப் பெற்று அமிலத்தன்மையை உணர்த்துவதாலும் ஆகும்.

இல்வாழ்வில் ஈடுபடுபவர்கள் பிராணாயாமம் செய்யக் கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. ஆனால், பிராணாயாமம் செய்வதால் குழந்தை பாக்கியத் தடை நீங்குவதோடு, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதே உண்மையாகும்.
பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு. அதில் இல்லறத்தாருக்கு ஏற்ற பிராணாயாமத்தை குருமுகமாகக் கற்றுக் கொண்டு பலன் பெற வேண்டும். ஏற்கனவே இது குறித்த பல பகிர்வுகள் போடப்பட்டுள்ளன. எனினும் சிலருக்கு பழைய பகிர்வுகளை பார்க்க முடியவில்லை என்கிற கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் இந்தப் பகிர்வுகள் தொடர்கின்றன. யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம். காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள்.

மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் நாடி சுத்தி செய்து கொண்டு, மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள்.

இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண்.

இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம்.

மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள்.

ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும். மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன.

பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால், 1.பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை. 2.பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை.
3.பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலி
ருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது.
4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது.
5. ஆக்சிஜன் பற்றாக் குறை.
6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது. இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும்.

இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது. இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம், பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி.

2 comments:

  1. Detailed explanation thanks most of the terms science

    ReplyDelete
  2. இந்த தகவல் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் சென்று அடைந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete