Tuesday, 12 September 2017

பிறவியே ஒரு சிறை தண்டனை - அய்யா அருளுரை

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு, சிறைச்சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச்சாலையே இல்லாத நிலை என்றாவது வந்துவிடுமா? அப்படியென்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள், என்று பொருளாகிவிடும். அதைப் போல, ஆன்மாக்கள் செய்கின்ற தவறுகளுக்கு இந்த உலகிலே பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒருவிதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான், பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ, மனிதப் பிறவியோ, தேவப் பிறவியே, எந்தப் பிறவியாக இருந்தாலும், ஏற்கனவே சேர்த்த  புண்ணியத்தையும் நுகர வேண்டும், பாவத்தையும் நுகரவேண்டும்.  அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ  கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே, இப்போதைக்கு குற்றங்களே செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால், இந்த பூமி என்னும் சிறைச்சாலையை ஒட்டு மொத்தமாக அழிக்க இறைவன் இன்னும் எண்ணவில்லை. அப்படியொரு சூழலும் நிகழாது. பகுதி, பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.

No comments:

Post a Comment