Thursday, 5 October 2017

Marma yoogi: ஞாயிறு (08-10-17 ) சென்னையில் ஆன்மீக வகுப்பு

Marma yoogi:
ஞாயிறு (08-10-17 ) சென்னையில் ஆன்மீக வகுப்பு
*******************************************
இயக்கத்தோடு அகநான் இணையும் போது அந்த இயக்கம் எப்படி மேன்மை அடைகிறது என்பதை வைத்தே அந்த இறை நிலையோடு நம் நெருக்கம் அகநானால் எப்படி மேன்மை அடைகிறது என்பதை பயின்ற அன்பர்கள் நன்கு புரிந்து இருப்பார்கள்.. புறநானை பிடித்து சொகுசு வாழ்வில் இயக்கத்தை நிறுத்தி இறைநிலையோடு கூடிய நெருக்கத்தை துண்டித்து வீணாய் போனவர்களின் பொய்யான உபதேசங்களுக்கு எதிராய் துடித்து எழுந்து, இயக்கத்தை அகநாண் உணர்வோடு மேன்மை படுத்தி வாழ்வை தழைக்கச் செய்யும், தமிழ் ஓகமாம் மர்ம யோகத்தை பயிலும் அன்பர்களே இறை நிலை நெருக்கத்தை இன்னும் மேன்மை படுத்த, அகண்ட கார ஒலியோடு நீக்க மற இணைந்த தமிழின் ழ் கர மெய்யின் துணையோடு உள்ள நல்ல சூழலில் ழகர மெய்யின் துருவ நல் மையத்தின்(துருவ நட்சத்திரம் ) கீழ் எப்படி இருந்து இயங்கி மேன்மை பெறுவது என்ற நுணுக்கமான பயிற்சி நடை பெற உள்ளது.. இந்த பயிற்சியில் அகண்ட கார ஒலியோடு இணைந்த ழகர மெய் அனுபவம் மிக முக்கியம்.. அந்த அனுபவம் பெறாதவர்கள் வகுப்பில் கலந்து கொண்டாலும் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணாக்க சூழ்நிலை மறுக்கிறது.. பயிற்சியை தீவிரப் படுத்துக.. இல்லையேல் வகுப்பில் உணர்ந்து செயல் படுக.. இழ் கர மெய் அனுபவம் இந்த வகுப்பிற்கு மிகவும் முக்கியம் என்பதை மீண்டும் நினைவில் கொள்க..

இடம்:-- சதானந்த சுவாமிகள் ஆசிரமம், சதானந்த புரம், பெருங்களத்தூர், சென்னை..
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை
உச்சி கால உணவு நேரம்:-- 1.00 மணி முதல் 1.30 மணி வரை..

..............Marma Yoo
gi

No comments:

Post a Comment