Sunday, 22 October 2017

அகத்தியர் வாக்கு - தமிழின் பெருமை

அகத்தியப் பெருமானின்  அருள் வாக்கு




தமிழ் மொழியிலே, கூடுதலாக, இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு, தமிழைப் பேசினாலே அது சுவாசப்பயிற்சிக்கு சமம். இலக்கணத்தைப் பற்றி கூறினால், எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பானது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம், என்றெல்லாம் அளந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல, தமிழ் மொழியிலே, காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. உலகத்திலே எந்த மொழியிலும் "ழ"கரம் என்ற உச்சரிப்பு கிடையாது. மூன்று இனமாக பிரிக்கப்பட்டு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே போதும், அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்படவேண்டும்? எந்த தளை, சீர், எத்தனை அடியிலே அமைக்கப்படவேண்டும், என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு. அகத்தியர் ஞானம் [இது உண்மை. அனுபவ பூர்வமாக இதை அடியேன் உணர்ந்துள்ளேன். சிறப்பான முறையில் தமிழை பேசும் பொழுது, உள்ளுக்குள்ளே ஒரு வித சக்தி பரவுவதையும், சுவாசம் சரி செய்யப்படுவதையும், உள் கழிவுகள் தானாக விலகி, உடல் சுத்தமடைவதையும், பல மறை பார்த்திருக்கிறேன். இதை நடை முறைப் படுத்துவது மிக நல்லது. மேலும், தமிழ் மொழியின் தெய்வம், உள்ளிருந்து 

No comments:

Post a Comment