Sunday, 22 October 2017

ஸ்ரீபோகர் சித்தர் ••• பொதிய மலையில் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் என்ற தபோவனப் பகுதியானது ஜோதி விருட்சங்கள் நிறைந்த அருள் வனமாகும் !



••• ஸ்ரீபோகர் இங்கு ஜோதி விருட்சத்தின் அடியில் நவநாத யோகத்தில் உறைந்து ஜீவன்களுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் அருள் கனியாய்க் கருனண வெள்ளத்தைச் சுரக்கின்றார்...,
••• தமக்கு இறைவன் அளித்த மானுட வடிவில் 50000தேவ ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நவயோகப் பஞ்சாட்சர சக்தியில் திளைப்பவரே ஸ்ரீபோகர் சித்தர்!
••• இந்த ஜோதி விருட்த்தின் அடியில் மிகழம் பலகையில் நவயோகப் பஞ்சாட்சர தாரனணயில் பொழியும் ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் சிவந்த நாசியை (மூக்கு) உடைய சிம்புறா என்னும் இரண்டு அரிய அபூர்வமான தெய்வீகப் புறாக்களும் ஸ்ரீபோகர் சித்தரின் யோக மா ஒளியில் ஆனந்தப் பரவசத்தில் திளைத்து அமர்ந்துள்ளன...
••• இறைப் படைப்புக்களின் மூன்றாம் நேத்திரப் பார்த்திரத்தைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த சித்புருஷர்களுள் ஸ்ரீபோகர் சித்தரும் ஒருவராவார் .
••• ஸ்ரீபோகர் சித்தர் பரவெளியிலிருந்து பொறிக்கும் ஜோதி வாக்கியங்கள் யாவும் ஜோதி விருட்சங்களின் ஒளி பொருந்திய இலைகளில் அவர்தம் யோகத் திறத்தால் பிரகாசித்து ஒளி அட்சரங்களாகவே பரிமளிக்கும் ..
••• இவற்றையே கர்ண பத்திரங்களாக ஸ்ரீபோகர் தம் திருக்கரங்களில் தாங்கிட அவற்றையே சிம்புறாக்கள் தம் சிவந்த நாசியில் தாங்கிச் செல்லும் . இவைதாம் லலாடங்க பிரசன்ன கர்ணிகா பத்திரங்கள் எனச் சிறப்புப் பெயர் பூண்டு வேத கிரந்தங்களாகப் பல தேவலோகங்களில் உருப்பெற்றுப் பிரபஞ்சத்தில் திகழ்கின்றன...,
••• இவ்வாறாக ஸ்ரீபோகர் சித்தபிரான் ஒவ்வொரு வினாடி நேரமும் தம்முடைய ல்லாட முனிபுங்கவ யோகத் திறத்தினால் இப்பிரபஞ்ச வாழ்விற்கான , அரிய ஒளி பொருந்திய மந்திரப் பத்திரச் சுடர்களை நமக்குப் பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றார் .
••• தினந்தோறும் , குறிப்பாக புதன் ஹோரை நேரத்தில் , ஒரு தட்டில் பசு நெய் விளக்கேற்றி, தீப ஜோதிதனை ஜோதி விருட்சமாக பாவித்து மாவிலைகளைப் பரப்பி “ஸ்ரீபோகர் தர்ப்பயாமி” என்று 18முறை ஐவிரல்களின் நுனியிலும் நீரை வார்த்து அர்கயம் இடவேண்டும்
••• இதனால் குருவருளால் யோக சகதிகளின் தன்மைகளை உணரும் பக்குவத்தையும் , சக்தியையும் பெற்றிடலாம் . ஜோதி விருட்சத் தரிசனத்திற்கு ஸ்ரீபோகர் சித்த பிரானின் குருகடாச்சம் மிகவும் முக்கியமானதாகும்.!

No comments:

Post a Comment