Thursday, 5 October 2017

மர்ம யோகம் - முக்கிய கேள்வி பதில்

துளிகள் பதினைந்து

ஒரு அன்பரின் கேள்விக்கான பதில்

கேள்வி:-----    Ungal siva kallappu, vasi yogam and Natha ulavukal paditha vudan Aanmegathil ethuvarai naan therintha visayangal yavum zero vaki vidana. apadiyanral naan ulaitha ulaippu veeno ennoda arpannippu thappakividathe enra kavalai orupuram erunthalum neenga chollum visayamum oru kala kattathil zero vaki vedathu enpathai eppadi naan othukolvathu. enn oru unnathamana nelayai peruvatherku evalavu kulappam. eraivanai adaivatharku ellorum ettrokolum vethiyai nammal uruvakka muthiyatha please

உங்கள் சிவகலப்பு வாசியோகம் நாத உளவுகள் படித்தவுடன் ஆன்மீகத்தில் இதுவரை நான் தெரிந்த விசயங்கள் யாவும் பூஜ்ய மாகி விட்டன...அப்படி யென்றால் நான் உழைத்த உழைப்பு வீணோ ? என்னோட அர்பணிப்பு தப்பாகி விட்டதே என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் நீங்கள் சொல்லும் விசயமும் ஒரு கால கட்டத்தில் பூஜ்யமாகி விடாது என்பதை எப்படி  நான் ஒத்துகொள்வது ? ஏன் ஒரு உன்னதமான நிலையை பெறுவதற்கு இவ்வளவு குழப்பம் ... இறைவனை அடைவதற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதியை நம்மால் உருவாக்க முடியாதா? தயவுசெய்து கூறவும்....


பதில்

பக்தர்கள் சிலர் மிக ஆழ்ந்த பக்தியில் இறைவனிடம் கண்ணீர் மல்க, எங்களை கரை ஏற்று என்று வேண்டிக் கொண்டு இருந்தார்களாம்... எதிர் பாராத வகையில் இறைவன் தோன்றி, சரி என்னை பின் தொடர்ந்து வாருங்கள் அனைவரையும் சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லுகிறேன், என்று திரும்பி நடந்தாராம்.. பத்து அடி எடுத்து வைத்து திரும்பி பார்த்தாராம்.. பின்னே ஒருவர் கூட இல்லை.. சிரித்துக் கொண்டே தேவ லோகத்திற்கு சென்று விட்டாராம்..

தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், இடையிலான பெரிய வித்தியாசத்தை முன் பகுதிகளில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. உலக விசயங்களை தெரிந்து கொண்டு, அவைகளை புரிந்து கொள்ளாமலே நடைமுறைக்கு வருபவர்கள், மேலே கூறிய பக்தர்களை போல தான் இருப்பார்கள்... புரிந்து கொண்டவர்கள் புத்தியோடு இறைவனை பின் தொடர்ந்து சென்று இருப்பார்கள்.. தெரிந்து கொண்டவர்களுக்கும் புரிந்து கொண்டவர்களுக்கும் வித்தியாசம் மிக மிக அதிகமானது...இதற்கு சரியான  காரணம் உண்டு.. தெரிந்து கொண்ட விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இன்றி இருக்கும்.. ஒரு விசயத்தின் ஆதிக்கம் இருக்கும் பொழுது இன்னொரு விசயத்தின் ஆதிக்கம் தலையிடும்.. அதனால் குழப்பம் மட்டுமே இருக்கும்.. மனம் விசயங்களால் நிரப்பப் பட்டு இருப்பதால், பல விசயங்களின் ஆதிக்கங்கள் ஒரே நேரத்தில் நடை பெறுவதால் மனம் சதா குழப்பத்திலேயே இருக்கும்.. இதை வகைபடுத்த தான் காற்று என்ற புத்தி என்ற பூதம்.. புத்தி என்பது அந்தந்த நேரத்திற்கு, அதற்குறிய விசய ஆதிக்கம் செலுத்தவே அனுமதிக்கும்... விசயங்களை புரிந்து கொண்ட விதத்தில் புத்தி தோன்றி விசயங்களை வகை படுத்தும்.. எல்லா விசயங்களோடு தொடர்பு கொண்டுள்ளதால் அதில் எது எது முக்கியம் என்பதை புத்தி புரிந்து கொண்டு
இருக்கும்.. புரிதலின் மூலமாகவும், தொடர்பு மூலமாகவும், எல்லா விசயங்களை வகை படுத்தவும், கையாளவும் புத்தி அறிந்து இருக்கும்...

விசயங்களை தெரிந்து கொண்ட மனம் இறைவன் தோன்றுகின்ற தருணத்தில், பல வகையான விளைவுகளை கொண்ட விசயங்களின் ஆதிக்கத்தை ஒரே நேரத்தில் செயல் படுத்த முயற்சிப்பதால், குழப்பமே ஏற்பட்டு இறைவனை பின் தொடர மறுக்கிறது... ஆனால் புரிந்து கொண்ட நிலையில் புத்தி செயல் பட்டு இறைவன் தோன்றுகின்ற அந்த தருணத்தில், அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் சரியான விசய ஆதிக்கத்திற்கு மாத்திரமே செயல் பட வைத்து இறைவனை பின் தொடர வைக்கிறது.. இவன் இறைவனா? இவன் சொர்க்கத்திற்கு கொண்டு போகாமல் நரகத்திற்கு கொண்டு சென்றால் என்ன செய்வது?
போன்ற சந்தேக விசயங்களின் ஆதிக்கத்தை பின்னுக்கு தள்ளி வைக்கிறது...

மேலே சொல்லப்பட்டவைகளிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உளவு ஒன்று உள்ளது... தெரிந்த கொண்ட மனம் ஒரே நேரத்தில் பலவகையான விசய ஆதிக்கங்களால் என்றும் குழப்பமாகவே இருக்கும்.. அப்படியே பழகி விட்ட மனம் புத்தியின் கீழ் வரும் பொழுது அதன் விசய ஆதிக்கங்கள் வகை படுத்தும் பொழுது, குழப்பமே இல்லாத சுத்த மனமாக மாறி விடுகிறது.. குழப்பம் இருந்தால் அது மனம்.. குழப்பம் இல்லாவிட்டால் அது சுத்த மனம்.. இது தான் உண்மை.. குழப்ப மனம் சுத்த மனம் ஆகின்ற பொழுது தன் இயல் நிலையில் ஒரு மாற்றம் வருகின்ற பொழுது, ஏதோ இழந்தது போல் அதற்கு தோன்றுகிறது... அது இழந்தது மோதி அலைபாயும் விசய ஆதிக்கங்களே.. விசயங்கள் அல்ல.. அல்லவே அல்ல..

இது வரை ஆன்மீகத்தில் கற்றுக் கொண்ட விசயங்கள் தெரிந்து கொண்ட விசயங்களாகவும், விசய ஆதிக்கங்களாகவும் உள்ளன... விசயங்களில் எந்த குறைபாடும் இல்லை.. தெரிந்து கொண்ட விசயங்களின் ஆதிக்கத்தில் தான் குறை பாடுகளே...
இப்பொழுது என் முக நூல் பதிவுகளை சற்று நிதானமாக படித்ததின் விளைவாக, புரிதல் என்ற நிலைபாட்டில் நீங்கள் மேம்பாட்டை அடைந்திருப்பதால், இதுவரை தெரிந்து கொண்ட விசய ஆதிக்கங்கள் புத்தி என்ற பூதத்தால் வகை படுத்த பட்டு இருப்பதால், உங்களின் மனநிலையில் ஒரு பெரும் மாற்றத்தின் காரணமாக விசயங்கள் யாவும் பூஜ்யம் ஆகிவிட்டன என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள்.. உண்மை அதுவல்ல.. விசய ஆதிக்கங்கள் தான் பூஜ்யம் ஆகிவிட்டது... இப்பொழுதான் உங்கள் அற்பணிப்பு பலன் கொடுத்து உள்ளது.. உங்கள் அற்பணிப்பு துளியும் வீணாகி விட வில்லை.. புத்தி ஆதிக்கம் ஓங்கி விட்டதால், மனம் தான் தோற்று போனது போன்ற மாயையான கவலை கொள்கிறது.. புத்தி ஆதிக்கத்தின் பெருமையை பூரணமாக அறியும் வரை, மனம் இப்படி கவலை கொள்ளுவதில் நியாயம் இருக்கிறது... நீங்கள் என் பதிவுகள் ஒரு கால கட்டத்தில் பூஜ்யம் ஆகி விடாதா என்ற வினா எழுப்பி உள்ளீர்கள்.. நிச்சயமாக பூஜ்யம் ஆகாது.. காரணம் நீங்கள் படிக்கும் பொழுதே இயல்பாகவே பூஜ்யமாகவே உள்ளது.. எந்த விசய ஆதிக்கங்கள் அதில் துளியும் இல்லை.. அதனால் தான் என் பதிவுகள் மனதை தாண்டி புத்தியில் பதிந்து புத்தியை தூண்டுகிறது.. புத்தியில் ஏற்பட்ட புரிதலின் பலம் பெருகிய காரணத்தினால் தான் உங்கள் மனதில் சற்று தற்காலிக கவலை.. ஆனால் புத்தி தூண்டப்பட்ட பெரும் பலனை பெற்று விட்டீர்கள்..

ஒரு உன்னத நிலை பெறுவதற்கு இவ்வளவு குழப்பமா ? என்றீர்கள்.. தெரிந்து கொண்ட விசயங்களை புரிந்து கொண்டால் விசய ஆதிக்கங்கள் புத்தியால் வகை படுத்தப் பட்டு, தானாக குழப்பம் நீங்கி விடும்.. 'சி' என்ற மனம் 'வ' என்ற புத்தியோடு கலந்து விட்டால் குழப்பம் நீங்கி அமைதி தான்.. சாந்தி சாந்தி என்று சொல்லுவதும், சிவ சிவ என்று சொல்லுவதும், ஒரே பொருளையே குறிக்கும்.. ஆனால் சிவ சிவ என்று சொல்லுவதில் உயர்ந்த அர்த்தம் உள்ளது..  இறைவனை அடைவதற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதியை நம்மால் உருவாக்க முடியாதா? என்றீர்கள். ஆனால் ஏற்றுக் கொண்ட விதியால் தான் இத்தனை குழப்பமும்.. ஒரு விதியை இன்னொரு விதியால் மாற்றவே முடியாது.. மதியால் தான் முடியும்.. விதியை வெல்ல யாவராலும் முடியாது.. ஆனால் விதியை மதி என்ற புத்தியால் ஒழுங்கு படுத்தி விட்டால், அந்த ஒழுங்கு படுத்தப் பட்ட விதி போல் உதவக்கூடியது வேறு எதுவும் இல்லை.. இதுதான் மிக பெரிய உளவு..

முடிவாக இறைவனை அடைவதற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மதிதான் ( விதி அல்ல) சிவ கலப்பு சிவ யோகம்.. ஆகையால் புரிய வேண்டியதை புரிந்து கொள்க என வேண்டுகின்றனன்... இதை முக நூலில் பதிக்கும் நேரம் நள்ளிரவு 1.55 A.M.

Marma Yoogi....

No comments:

Post a Comment