Friday, 27 October 2017

சீவ சமாதியில் வழிபடும் முறை


மகான்களின் ஜீவசமாதியில்
பக்தி சிரத்தையோடு காலை உள்ளே வைக்க வேண்டும்.
மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்.
மூச்சை மகானின் சிவலிங்கத்தில் இருந்து இழுத்து உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.
மூச்சுக் காற்றை குறைந்தது 9 முறையாவது அவ்வாறு இழுக்க வேண்டும்.
அவ்வாறு மூச்சை இழுத்து விழும் போது உடல் முழுவதும் ஆனந்த அதிர்வலைகள் உருவாகின்றதை நன்கு உணரலாம்.
குறைந்தது ஐந்து நிமிடம் சன்னதியின் முன் உட்கார்ந்து மகானின் திரு உருவத்தின் மீது மனதை தியானிக்க வேண்டும்.
உங்களின் குறைகளை மகானின் முன், அமைதியில் வெளிப்படுத்த வேண்டும்.
உங்களின் குறைகள் தீர்வு பெற்ற பின்பு உங்களால் ஆன உதவிகளை மகானின் கோவிலுக்கு செய்ய வேண்டும்.
உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு தேவைப்படும் அகர்பத்தி, எண்ணை, பூ, இவற்றை செலுத்தினாலும் நல்லது.
மகானின் கோவிலுக்கு செல்லும் போது சிறந்த நறுமணம் கொண்ட ஊதுவத்தியுடன் செல்வது மிக சிறந்த பண்பாகும்.
ஜீவசமாதியில் தியானம் செய்யும் போது நம் பாவ வினைகளின் தீவிரம் குறையும்.
இது புனிதமான இடம். இந்த இடத்தில் சித்த புருஷர் ஜீவசமாதியில் உறைந்திருக்கும் இடம்.
இந்த புனிதமான இடத்தில் நீங்கள் தரிசனம் செய்தால் உங்களின் பாவ பதிவுகள் அனைத்தும் பறந்தோடிவிடும்.
இந்த புனித இடத்தில் நீங்கள் உட்கார்ந்து தவம் இயற்றினால் உங்களின் ஆத்மா பரிசுத்தம் அடையும்.
ஆன்மீக தாகம் கொண்டவர்கள் இங்கு தவம் இயற்றும் போது மகானின் சூக்கும சரீரம் உங்களுள் ஊடுருவுவதை கண்கூடாக உணர்வீர்கள்.
உங்களின் தேவையற்ற சிந்தனைகள், கட்டுப்பாடில்லாத எண்ண ஓட்டங்கள் மற்றும் உங்களை படுகுழியில் தள்ளிவிடும் அர்த்தமற்ற ஆசைகள் அனைத்தும் நின்று போகும்.
ஜீவன் முக்தர் உறையும் இடத்தில் தொடர்ந்து நித்திய கருமமாக நீங்கள் தவம் இயற்றினால் நீங்கள் இந்த மனிதப் பிறவி எடுத்ததற்கான முழு அர்த்தத்தை உணர்ந்து அந்த பெருவதற்கு அரிய பேறையும் அடைவீர்கள்
ஜீவ சமாதிக்கு செல்லும் போது மகானின் சன்னதி மிகவும் ஏழ்மை நிலையிலும், பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அதனை சரி செய்வதற்கு நம் சக்திக்கு முடிந்த வரை முயல வேண்டும்.
மகானின் ஜீவசமாதிக்கு தொண்டு புரியும் போது, நான் என்ற அகம்பாவம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment