Friday, 6 October 2017

இல்லமும் ஒரு பணிபுரியும் இடம்.

இல்லமும் ஒரு பணிபுரியும் இடம்.
கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே  செய்ய வேண்டிய பணிகளை செய்ய வேண்டும். ஆனால் தீவிர பற்றையோ, பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக, ஒரு பயிற்சியாக  வித விதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும். பல விதமான ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர, மெல்ல மெல்ல அதீத பற்றும், பாசமும் குறைய, கட்டாயம் புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும், மெல்ல, மெல்ல வெல்லக் கூடிய நிலைமை வரும். பற்றையெல்லாம் விடு, பாசத்தையெல்லாம் விடு என்றால், கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும், அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்றுவிடுவாளோ? என்று கணவனும், அல்லது தாயும், தந்தையும் இப்படி ஆன்மிகம் பார்த்துக் கொண்டு தங்களை எல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம். நாங்கள் அதனை கூறவரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும்; அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது." அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!

No comments:

Post a Comment