Sunday, 29 October 2017

திருச்சூர் வடக்குநாதர் கோவில் வழிபாட்டு முறை


தென் கைலாயம்" திருச்சூர் கேரளாவில் தோன்றிய முதல் கோயில் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்தான். வடக்குநாதர் என்பது விடைகுன்றுநாதர் என்ற தமிழ்ப்பெயரிலிருந்து மருவியது என்று சொன்னது வியப்பாயிருந்தது. அக்கோயில் விடைபோன்றதொரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது.
திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்" என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்" என அழைக்கிறார்கள்.
திருக்கோயிலின் முகப்பில் உள்ள ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரத்தை 7 முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் கழுவி திருக்கோயிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில்குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும்..
வடக்கே உள்ள சிவபகவானை வேண்டி விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை 3 தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும்.
எந்தக்கோவிலிலும் முதலில் தரிசனம் செய்யும் கணபதியிடம் போகாமல் முதல் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்க வேண்டும்..
மூலவரையும் பிரதட்சிணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்று சென்று விட்டு பின்திரும்பி வர வேண்டும்.
கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்க வேண்டும்.
திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசித்து திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் ஆதிசங்கரரின் அதிஷ்டானம் அடைந்து வழிபடலாம்.
சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும். வடக்கு நாதரின் கர்ப்பக்கிரகம் வட்ட வடிவில் அமைந்திருக்கிறது. கிழ்க்குமுகமாக பார்வதி தேவி சன்னதியும் மேற்குமுகமாக வடக்கு நாதர் சன்னதி அமைந்துள்ளது.  இங்கு மின் விளக்கு ஏற்றப்படாமல் பல எண்ணைவிளக்குகள் ஏற்றப்பட்டு, அதன் புனித ஒளியில் இறைவனைத் தரிசிக்கிறோம்.
மணம் மிக்க சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அர்ச்சுனன் பாசுபதம் பெற்ற பின் சிவ பெருமானைத் தரிசிக்க கயிலை சென்ற பொழுது சிவனைக் காணாமல் இந்த வடக்கு நாதர் கோவிலுக்கு வந்து சுற்றிவரும்போது பரசுராமர் கோவிலைக்கண்டு, ஷத்திரியன் ஆன தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணி, தன் அம்பை ஊன்றி வெளிப்பககமாகக் குதித்துவிட்டான்.
அவன் அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு சுனை உண்டாகி சுனை வில்குழி தீர்த்தம் எனப்படுகிறது.
[Gal1] கோயிலை சுற்றி தேக்கு மரக்காடு அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுக்க்வே இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது.  சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டதால் தான் அதன் பிறகு கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை என்பது மக்கள் நம்பிக்கை..
சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது.  இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது. பிரகாரத்தில் இருக்கும் கூத்தம்பலத்தில் ஆயிரம்பேர் வரை அமரலாம். ஆளுயரக் குத்து விளக்கு ஏற்றப்பட்டு விடியவிடிய எரிந்து கொண்டிருக்கும்.
மேற்கு திசையில் கோபுரத்திற்கு அருகில் இருக்கும் சதுர வடிவ கல்லின் பெயர் கலிக்கல். அதை நான்கு புறமும் மேடைகட்டி காத்து வருகிறார்கள். கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் சிறிது எறிந்து கலி முற்ற முற்ற இந்தக்கல், கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடாமல் தடுக்கிறார்கள் என்பது ஐதீகம்.
ஆதிசங்கரரின் அதிஷ்டான இடமும் அதற்கான் ஆலயமும் இருக்கும் இடத்திற்கு சங்கு சக்கரம் என்று பெயர். அனுமன் சஞ்சீவிமலையை எடுத்துவரும்போது சில மூலிகைகள் வெளிப்பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம்.
இந்த இடத்திலிருந்து சிறு புல்லாவது பிடுங்கி கொண்டு போய் பத்திரப் படுத்துகிறார்கள். ஒரு மேடையின் மேல் இருக்கும் பெயர் தெரியாத பல சிலைகளைப் பூதங்கள் என்கிறார்கள்.
ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி "வடக்குநாதர்" என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.
வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். இதை "தென் கைலாயம்" என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்து பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் .
பரசுராம ஷேத்திரமாகத் திகழ்கிறது.
பரசுராமர் பிதுர் வாக்கியப் பரிபாலனத்திற்காக பல ஷத்திரியர்களைக் கொன்ற பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய பல சிவாலயங்களை எழுப்ப எண்ணம் கொண்டு சமுத்திர ராஜனிடம் விண்ணப்பித்து, ஹோம அகப்பையை வீசி எறிந்த இடம் வரை சமுத்திரம் பின்வாங்கி நிலம் அளித்தது.
வடக்கு நாதரை கொஞ்சம் மேடான இடத்திற்குக் கொண்டு செல்ல ஆவல் கொண்டு நிலத்தைக் குன்று போல் உயர்த்தினாராம்.
கோவில் தயாராவதற்குள் பார்வதியுடன் பரமேஸ்வரன் வந்து நின்றுவிட்டார். உள்ளே வேலை நிலவரத்தைப் பார்க்க அனுப்பிய சிவ கணமான சிம்மோதரன் இடத்தைப்பார்த்துவிட்டு அங்கேயே அமர, காத்து நின்ற சிவபிரான் உள்ளே சென்று கோபத்தினால் காலால் எட்டி உதைத்த இடத்தில் சிம்மோதரனுக்குக் கோவில் இருக்கிறது.  பரமேஸ்வரன் அங்கிருந்த ஸ்தம்பத்தில் ஜோதி வடிவமாக ஐக்கியமான இடமே வடக்கு நாதர் மூலஸ்தானம்.
இவரது கோபத்தைத் தணிக்கவே நெய்யினாலேயே அபிஷேகம் செய்கிறார்கள். சலவைக்கல் போல் காணப்படும் லிங்கம் எத்தன டிகிரி வெப்பமானாலும் உருகுவதில்லை.
வட குன்று நாதர் என்ற பெயர் மறுவி வடக்கு நாதர் ஆயிற்று.லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை.
மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.
இரவு பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும். வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத சக்தி படைத்த ஆலயம் !
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது.
எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
நெய் கட்டியாக உறைந்து வரும்.
கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
பூச்சிகள் மூலவரை தாக்காது.
மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய தன்வந்திரி பகவான் நெய் தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்த சிறிது நேரத்திலேயே உருக ஆரம்பித்துவிடும் வெண்ணையும் நெய்யும் மகத்துவம் மிக்க திருச்சூர் வடக்கு நாதர் கோவிலின் கடும் வெய்யில் காலங்களிலும் கூட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யாப்பட்ட பிறகு உருகாமல் நிலைத்து இருக்கிறது.
இத்தலத்தில் உள்ள வியாசமலை-யில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள் ஹரி ஸ்ரீகணபதியே நமஹ என்று தனது கைகளால் கற்சிலை - வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல).
அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம்.உலகம் உய்ய அவதரித்த மகான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார். Trichur Elephant March, Kerala தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு மார்ச் மாதம் நடைபெறும்.  இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்புரம் .
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், "யானையூட்டு விழா'வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யானைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்வார்கள்.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் தேதியன்று யானையூட்டு விழா நடந்து வருகிறது.
அதிகாலை 4 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி , யானைகள் பங்கேற்கும் கஜபூஜை நடைபெறும். கஜபூஜையுடன் , தெற்கு கோபுரவாசல் முன் யானைகள் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
சித்திரை முதல் நாள் விஷூக்கனி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

No comments:

Post a Comment