அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு
உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது, அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே, பின்விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும். உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான் என்றாலும், உண்மையை, உண்மையாக, நன்மையாக பேசவேண்டும். உண்மையை கூறுகிறேன் என்று, யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய, சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், நாங்கள், எம்முன்னே அமரும் சில மனிதர்களுக்கு மௌனம் காக்கிறோம் என்றால், உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள். உண்மையை கூறினால், நம்பி வந்த கூட்டம் எரிச்சலடையும், பிறகு தேவையில்லாத விவாதங்கள் வரும். அதனால் தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே, அனைத்திற்கும் "சம்மதம்" என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம், "ஜீவ அருள் நாடி" என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதை கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட, மழை நீர் வேண்டுமென்றால், நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல், நிமிர்த்து வைத்து, மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப்போல எம்முன்னே அமருபவருக்கு பக்குவம், தெளிவு இல்லாமல் "இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்?" என்று விமர்சிப்பதால், பாவங்கள் சேர்வதைத் தவிர். அகத்தியர் ஆசி.

No comments:
Post a Comment