Sunday, 22 October 2017

அகத்தியர் கூறும் ஒன்பது ஆசனங்கள்

தனது "அகத்தியர் பரிபூரணம்" எனும் நூலில் ஒன்பது ஆசனங்களை முன்னிறுத்துகிறார்.


சித்தமுடன் நேமவகை பத்துக்கண்டு தெளிந்துசிவ யோகமது திற்மாய்நிற்க வெத்தியுள்ள ஆசனந்தா னொன்பதப்பா விபரமுடன் சொல்லுகிறேன் விரும்பிக்கேளு பத்தியுள்ள பாதகஸ்தங்கோ முகமும்பத்மம் பதிவான புஜங்கபத்திரம் முத்ரமொடுவச்சிரம் முத்தியுள்ள மயூரமொடு சவமதுவுமைந்தா முதலான நவக்கிரகம் ஒன்பதுஆசனமே.
ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால் பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே.
அவை முறையே....
பத்மாசனம், பத்திராசனம், கோமுகாசனம், மயூராசனம், புஜங்காசனம், முத்ராசனம், வச்சிராசனம், பாதகஸ்தாசனம், சவாசனம்.
இந்த ஒன்பது ஆசனங்களையும் அறிந்து உணர்ந்து பழகி தவசு மற்றும் சிவயோகம் செய்தால் புருவமத்தியில் கற்பூர தீபம் போன்ற ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அனைத்தும் சித்தியாகும் என்கிறார்.

No comments:

Post a Comment