இன்று, ஆக்டோபர், 7, 2017 - எனது சீவ நாடி வாக்கு
இன்று ஒரு மகத்தான நன்னாள். மீண்டும் ஒரு முறை ஜீவ நாடி வாசிக்க சென்றேன். முன்பு சில வருடங்களுக்கு முன் பர்வத மலை ஏறி ஈசுவரனை தரிசித்து, இரவு மலை மேலேயே தங்கி காலை சூரிய உதயம் காண உச்சியில் தவத்தில் ஆழ்ந்தேன். அப்போது சூரிய உதயத்தின் போது சங்கொலி கேட்டது. சாதாரண சங்கொலி அல்ல, அது மிக நீண்ட 3-4 நிமிடங்களுக்கு ஒரே மூச்சில் நிறுத்தாமல் தொடர்ந்தது. இவ்வளவு நேரம் எந்த ஒரு மனிதனும் சங்கு ஊத முடியாது. அவ்வாரான மிக நீண்ட சங்கொலி ஐந்தாறு முறை கேட்டது. அப்போது நான் நினைத்தேன், இனி தினமும் வீட்டு மொட்டை மாடியில் சூரிய உதயத்தின் போது த்யானம் செய்வோம், ஒரு நாள் இல்லை ஒரு நாள் மீண்டும் சங்கொலி கேட்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியது உண்டு. இப்போது, தினமும் தமிழ் ஒக தியான பயிற்சியை மொட்டை மாடியில் மேற்கொண்டுள்ளேன். பர்வத மலை சென்று இரண்டு வருடம் கழித்து நேற்று முன் தினம் அவ்வாறு நம் இல்லத்தில் காலை சங்கொலி கிடைக்குமா என்று எண்ணம் தோன்றியது. ஆனால் மணியை பார்த்தேன், அப்போது மணி 7.15 am இருக்கும். எனக்குள் சொல்லிக்கொண்டேன், அதர்க்கெல்லாம் சூரிய உதயத்தின் முன் எழுந்து த்யானத்தில் அமர வேண்டும், தாமதமாக எழுந்தால் எவ்வாறு காண முடியும் என்று எனக்கு நானே பதில் கூறிக்கொண்டேன். இன்றும் காலை 7.15 மணிக்கு த்யானத்தில் அமர்ந்தேன், ஆனால் சங்கொலி என் ஞாபகத்திலேயே இல்லை. ஆனால் தியானத்தின் நடுவில் சங்கொலி கேட்டது, நான் அது Texmo Motor கம்பெனியின் ஷிப்ட் நேரம் முடிவடையும் சங்கு என்று நினைத்தேன். ஆனால் அந்த நீண்ட சங்கொலி மீண்டும் தொடர்ந்து ஒலித்தது, நான் பர்வத மலையில் கேட்ட அதே சங்கொலி, அதே கால அளவு நேரம் ஒலித்தது. இன்று நாடியில், அய்யா என்னை கேட்டார் - உன் இல்லத்தில் இன்று சங்கொலி கேட்டதோ என்று வினவினார். என்னே அற்புதம் !!!!!!!!
எனக்கே தெரியாது, என் உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்று. ஆனால் தீர்க்கதரிசி ஆன அகத்தியர் அய்யா, என் உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்று கண்டறிந்து, அது வெளியே உடலில் தலை காட்டும் முன்னரே அதற்கு வைத்தியத்தையும் உரைத்து, என்னை நான்கு வாரங்களுக்கு மருந்து உட்கொள்ள சொன்னார்.
மேலும் நான் கற்று வரும் தமிழ் ஓக பயிற்சியை தொடர்ந்து கற்க , அதுவே சித்தியாகும் என்றும் உரைத்தார்.
மேலும் எனது தவறுகளை சுட்டிக்காட்டி சற்றே கோபமாகி என்னை திருத்திக்கொள்ள சொன்னார்.
தேவ ரகசியம் ஒன்று வெளிப்பட போவதாகவும், அதனை நான் காதில் வாங்கி கொண்டு ரகசியம் காக்க வேண்டும் என்றும் உத்தரவு. அது நாளை 8Oct17 அன்று கிடைக்கும். ரகசியம் காப்பேன். யாரும் கேட்டு விட வேண்டாம்.
மேலும் எனது இல்லத்தில் செய்ய. வேண்டிய விசேட சாம்பிராணி தூபத்தை பற்றி கூறி , அதனை குறிப்பிட்ட நாட்களுக்கு செய்ய சொன்னார். வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், தீய சக்திகள் என்னவென்றே தெரியாத நிலையில், வீட்டில் பல பிரச்சனைகள், இதை எல்லாம் நான் நாடியில் கேட்கவே இல்லை, ஆனால் எனது மகான் அகத்தியர் அனைத்தையும் உணர்ந்து அறிந்து அதை போக்க கூடிய உபாயத்தையும் கூறி அருளினார். என்னே அவரது அன்பு...
என்னை மீண்டும் கடிந்து கொண்டார். உனக்கு தெரியாதா, நான் ஏற்கனவே உனக்கு வாக்களித்திருக்கிறேன், உன்னை காப்பேன் என்று, உனக்கு வெளியில் இருந்து அல்ல, உன் உள்ளே இருந்தே உன்னை காப்பேன் என்று அன்றே உரைத்தோம், உனக்கு என்ன அதில் சந்தேகமா, என்று கேட்டார். நான் ஆழ் மனதில் அய்யா நமக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் காப்பாரா அல்லது நமது விதி அனுபவிக்கட்டும் என்று விடுவாரா என்று ஒரு எண்ணம், ஆனால் நானே மறந்த அந்த எண்ணத்தை அறிந்து கொண்டு நாடியில் என்னை காப்பதாக உறுதி அளிக்கும் எம் மன்னவன் அகத்திய சித்தருக்கு எப்படி நன்றி கடன் செலுத்துவது. பலர் கோவில் சென்று அழுது புலம்பி கடவுளிடம் என்னை காப்பாற்று என்று கதறுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் கடவுள் சில சமயம் செவி சாய்ப்பதுண்டு, ஆனால் பல சமயம் கஷ்டங்கள் குறைவதில்லை. ஆனால் இங்கே, நமது கடவுள் அகத்தியர் அய்யா அவர்கள் நம்முடன் பேசுகிறார், யாமே உன்னை உனக்கு உள்ளே இருந்து காப்போம் என்று பல முறை உறுதி செய்து, நோய் களிலிருந்தும் விபத்துகளில் இருந்தும் காக்கிறார். நோய் வந்த பின்னே காக்காமல், நோய் வரும் முன்னரே அறிந்து மருந்து உட்கொள்ள சொல்கிறார். அதே போல சென்ற முறை நான் வெள்ளியங்கிரி மலை சென்று வந்த போது, ஒரு பெரும் விபத்து நேர இருந்தது, அதிலிருந்து உன்னை காக்கவே யாமே உன்னை வெள்ளியங்கிரி மலைக்கு அழைத்தோம் என்று உரைத்தார். இவ்வாறு இரவும் பகலும் காக்கும் என் காவலனை, குருநாதர் குருமுனி, மகத்துவம் பொருந்திய அகத்தியரை வணங்குவதை காட்டிலும் வேறு எப்படி அவரது அன்பிற்கு பாத்திரமாக முடியும். முதலில் அவரிடம் முழு சரணாகதி அடைய வேண்டும், பின் அவர் நம்மை காப்பார்.
இன்று நாடியில் பொதிகை மலையேற உத்தரவு வந்துள்ளது, எப்போது என்று தெரியவில்லை, அய்யா அழைக்கிறார், அவரது காட்சி மலையில் எங்கே, எவ்வாறு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார், வேறு எந்த கடவுளடா தனது இல்லத்திற்க்கே அழைத்து, தனது காட்சியையும் காண்பிப்பார்? அகத்தியர் ஒருவரே உலகில் இன்றும் ஜீவித்துள்ளார், காக்கிறார், வழி நடத்துகிறார். நான் ஆரம்பம் முதலே முருக பக்தன், முருகரிடம் தீவிர பக்தி கொண்டதன் விளைவாக, அகத்தியர் அய்யா என்னை சீவநாடி பார்க்க அழைத்தார், ஏனென்றால் நானும் ஒரு பிறவியில் சித்த வித்தைகள் கற்றவன், சித்தர் கூட்டத்தில் ஒருவன், இதை அய்யாவே நாடியில் உரைத்தார், எனவே சித்தர் கூட்டத்தில் ஒருவனை சித்தர்களே காக்க வேண்டும் என்று தான் என்னை முருகர், அகத்தியர் அய்யாவிடம் அனுப்பி உள்ளார். இன்றும் நாடியில், என்னை மட்டும் அல்லாது எனது குடும்பத்தையும் காப்பேன் என்று வாக்களித்தார். நாடியில் சென்று அமர்ந்த உடனேயே, முழு உடலையும் ஸ்கேன் செய்து, என்ன குறை உள்ளது என்று 1 விநாடிக்குள் கண்டு அறிந்து, சுட்டிக்காட்டி, மருத்துவமும் உரைக்கிறார், நோய் எதனால் வந்தது என்று காரணமும் சில முறை கூறுவதுண்டு. நான் கண்டறிந்த வரை கலியுக கண் கண்ட தெய்வம் எமது அய்யா அவர்களே.
இன்றும், ஒரு நண்பருக்கு மருத்துவர் காதில் குறைபாடு சரி செய்ய மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார், தாமதித்தால் காதே கேட்காமல் போகும் என்று எச்சரித்து உள்ளார். இன்று அந்த நண்பருக்கு நாடியில் அய்யா கூறினார், " ஒரு மூட மருத்துவன் உனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பானே, பயப்படாதே, நான் இருக்கிறேன், அறுவை சிகிச்சை எதுவும் வேண்டாம், நான் கூறும் ஒரு பொருளை சில காலம் உண்டு வந்து பார், உன் காது அறுவை சிகிச்சை இல்லாமலே முழவதும் குணம் ஆகும் என்று உரைத்தார். நமது நண்பரும் நம்பிக்கையோடு மருந்து வாங்கி சென்றுள்ளார். குணமானதும் அறிவிப்பேன், நமது வலை தளத்தில். ஒரு மாதம் காத்திருங்கள்.
இன்று நாடியில் நான் கூறினேன், அய்யா தாங்கள் சென்ற முறை நாடியில் எனது புகழை பரப்புவதே உமது வேலை என்று உரைத்தீர்கள். யாமும் தாங்கள் உரைத்தவாரே, தங்களது பெயரிலேயே ஒரு blogspot வலை தளம் துவங்கி, தங்களை பற்றிய செய்திகள், சீவ நாடி வாசிக்கும் இடம் போன்றவைகளை அதில் இட்டு வந்துள்ளேன், அதை பற்றி என்ன உங்கள் கருத்து என்று வினவினேன். அதற்கு அவர், ஆம், நானே உண்னை எமது புகழை பரப்ப சொன்னோம், உனது வேலையைக்கண்டு நான் மிக்க மன மகிழ்ச்சி கொண்டேன் என்று உரைத்தார். இதை விட நமது வலை தளத்திற்கு வேறு என்ன அங்கீகாரம் பெற முடியும்.
நான் இறை சித்தர் அய்யாவிடம், பொது நாடியில் வரும் தகவல்களை அவ்வப்போது எனக்கு தெரிவிக்கவும், நான் அய்யாவின் அங்கீகாரம் பெற்ற எனது வலை தளத்தில் அவற்றை இடுகிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளேன், அவரும் அதனை ஏற்றுள்ளார். மேலும் நாடியில் அகத்தியர் அய்யா எமக்கு உரைத்ததாவது, இனிமேல் உனக்கு, நான் நறுமண வடிவில் வந்து அவ்வப்போது உணர்த்துவேன் என்று இன்று வாக்களித்துள்ளார். அய்யா நமது வேலையைக்கண்டு மகிழும் போதெல்லாம் நமக்கு நறுமணம் கமழும். என்னே ஒரு பாக்கியம், அந்த தருணத்திற்காக தினமும் காத்துகொண்டு இருப்பேன்.
இன்று நடந்த ஒரு சம்பவம், அய்யா நாடியில் உரைத்த ஒரு மருந்தை இறைசித்தர் அய்யாவிடம் வாங்கினேன், அதற்கு தட்சிணை பெற்று கொள்ளுங்கள் என்று வேண்டினேன், அவரோ வேண்டாம் என்று மறுத்தார், நானோ விடாப்பிடியாக கொஞ்சம் பணத்தை வெற்றிலை, பாக்கு, பழம் தட்டில் வைத்து கொடுத்தேன். பணம் போதுமா, இன்னும் வேண்டுமா பாருங்கள் என்றேன், அவரோ, எனக்கு பணம் வேண்டும் என்றால் நான் உங்களை தவிர யாரை கேட்பேன், அதனால் எவ்வளவு பணம் கொடுத்துள்ளீர் என்று பார்க்க வேண்டாம் என்று கூறினார். அப்போது அதை ஆமோதிப்பது போல சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்த சின்ன வேல் கீழே விழுந்தது. இரண்டு நாள் முன்பு கூட புரட்டாசி பவுர்ணமி பூசை ஆரம்பிக்கும் முன், அய்யா அவர்கள் என்னை யாகத்தில் அமர சொன்னார், அப்போதும் அதே வேல் கீழே விழுந்து உணர்த்தியது. அய்யாவின் நடமாட்டம் நூறு சதவிகிதம் சீவ நாடி குடிலில் உண்டு என்பதை உணர்ந்த பல தருணங்களுள் மற்றும் ஒரு தருணமாக இன்றும் அமைந்தது.
யாரும் விதை போடாமல், கிளையை முறித்து நடாமல், தாமாகவே சீவ நாடி குடிலின் வாயிலில் வில்வ செடி வளர்ந்துள்ளது, அந்த அதிசியத்தையும் இன்று கண்டு களித்தேன்.
எப்போதும் என்னை நாடியில் அழைக்கும் போது என் அப்பன் சீனிவாச பெருமானின் நாமம் கொண்டவனே என்று தான் அழைப்பார், இன்றோ அவர் அழைத்தது கோவிந்த நாராயணனின் திரு நாமம் பெற்றவனே, என்று அழைத்தார்.
வாழ்க அகத்திய சித்தர், ஓங்குக அவரது புகழ்.
நன்றிகள் கோடி
தி. இரா. சந்தானம் ( இயற் பெயர் - சந்தான கோபால கிருஷ்ணன்)

No comments:
Post a Comment