அகத்தியர் பொது நாடி அருள் வாக்கு - கடந்த பத்து இருவது நாட்களில் உரைத்தது
அகத்தியர் அய்யா தினமும் அதிகாலை மூன்று
முப்பது மணி அளவில் பொதுவான பலன்களை உரைப்பது உண்டு. இறை சித்தர் இதை தினமும்
வசிக்கும் ஒரு பழக்கமாகவே கொண்டு உள்ளார். ஆனால் அது அதிகாலை பொழுது என்பதால்
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். எனவே இறை சித்தருடன் யாரு அருகில் இருக்க
மாட்டார்கள். நாடியும் எழுத்துக்கள் தோன்றி உடனே மறைந்து விடும். எனவே அதனை எழுதி
வைக்கவோ பதிவு செய்யவோ இயலாது. ஆனால், சில முக்கிய விஷயங்களை இறைசித்தர் அவர்கள் ஞாபகப்படுத்தி கூறுவார்.
கடந்த மாதம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இட்ட
பதிவில் சென்னை நகரம், கடலூர் டிசெம்பர் மாதம் நீரில் மிதக்கும் என்று
உரைக்கப்பட்டது.
அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அய்யா அவர்கள் பல தலை
நகரங்கள் இயற்கை சீற்றத்தினால் பேரழிவை சந்திக்கும் என்று உரைத்து உள்ளார்.
மேலும்
சித்தர் வழிபாட்டில் இருப்பவர்கள், இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கப்படுவர்
என்று உரைத்து உள்ளார்.
ஆனாலும் அனைவருக்கும் சில கஷ்டங்களை கொடுத்து தான் காப்பாற்றுவேன்
என்று உரைத்து உள்ளார். உதாரணமாக என் வீட்டில் சில சிக்கல்களை சந்திக்க
நேரிட்டது, இறை சித்தர் உடல் ரீதியாக ஒரு நாள் கடும் அவதியுற்றார். பல அகத்திய
பக்தர்களும் இவ்வாறே அந்த ஒரு வாரத்தில் அவதியுற்றதாக முறையிட்டனர். ஆனால் அந்த இன்னல்கள்
எல்லாம் தற்காலிகமானவையே.
டிசம்பர் மாதத்துக்குள் உச்ச கட்ட அரசியல் குழப்பம் தமிழகத்தில்
வெடிக்கும் என்று உரைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment