Thursday, 5 October 2017

05Oct17 பவுர்ணமி - பொகளூரில் விசேட பூசை - செய்தி, படங்கள்

முன்னுரை :

இன்று அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி அன்று பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்தில் சித்தர்கள் முறைப்படி யாகம் செய்யப்பட்டது.










அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் என்றால் சும்மா பிரசாதம் போல அல்லாமல், அனைவருக்கும் சாதம் குழம்பு ரசம் பொரியல் தயிர் கலந்த சாதம் போன்ற வகைகள் அளிக்கப்பட்டன.

பல பக்தர்கள் தங்கள் நோய்கள் தீர இறைசித்தரிடம் சித்த மருத்துவ மருந்துகள் பெற்று சென்றனர்.

கோ பூசை - கோமாதா வரவழைக்கப்பட்டு அதற்க்கு ஒரு பக்தர் நீரால் சுத்தம் செய்து சந்தன குங்குமம் இட்டு, வஸ்த்திரம் இட்டு பூசை செய்து பின்னர் அது சாப்பிட கீரை, புண்ணாக்கு, பழங்கள் ஆகியவை கொடுத்து தன்னுடைய பரிகார கணக்கை செய்து முடித்தார்.

யாகத்தில் 64 வகையான மூலிகைகள் பக்தர்கள் அவர்களது கைகளாலேயே இட வாய்ப்பு அளிக்கப்பட்டது

வன்னி மர குச்சிகள் பயன்படுத்தப்பட்டன. 

சிறப்பான மகா வில்வ காய்கள் இடப்பட்டன.

பக்தர்கள் பல விதமான பூசை பொருட்களை கொண்டு வந்தனர். அவற்றுள் பூக்கள் - தாமரை, செவந்தி, மல்லிகை, முல்லை, சம்பங்கி, மகாவில்வம், போன்றவையும், மற்ற பூசை பொருட்களான சூடம், பத்தி, ஜவ்வாது, இளநீர், பால், நெய், தயிர், மஞ்சள், குங்குமம், அரிசி மாவு, தேன், வஸ்த்திரம் போன்றவையும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

யாகத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்களை அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அனைவரும் ஒன்று சேர மந்திரங்கள் படிக்க, யாகம் நடத்தப்பட்டது.







பல வகையான அபிஷேகங்கள் : யாகம் முடிந்த பின், அனைவரும் உணவு அருந்திய பின், குருநாதர் அகத்திய சித்தருக்கு அபிஷேகம் துவங்கப்பட்டது. சுமார் பதினெட்டு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அவற்றுள் குங்குமம், மஞ்சள், சந்தானம், விபூதி, தேன், பால், தயிர், பஞ்சகவ்யம், இளநீர், நீராடும் பொடி, பன்ணீர், அரிசி மாவு, பழங்கள், நெய், வில்வப்பொடி, கங்கை நீர், பழச்சாறு போன்றவை அடங்கும்.
விசேஷமாக கங்கா நீர் கொண்டு வரப்பட்டு, அனைத்து அபிஷேகங்களிலும் கொஞ்சமாக கலக்கப்பட்டது..


அலங்காரம் : பின்னர், அய்யாவிற்கு, பல வகையான மலர்களால் அலங்காரம் செய்து, பிரார்த்தனை செய்து, பக்தர்கள் அவர்கள் கைகளாலேயே மலர்கள் தூவி வழிபட்டு, தீப ஆரத்தி எடுத்துக்கொண்டனர்.









பல வகையான பிரசாதங்கள் : எல்லோருக்கும் பிரசாதமாக அபிசேக தீர்த்தம், அபிசேகம் செய்யப்பட, பழம், தேன், பால், நெய் கலவை - அருந்துவதற்கு அளிக்கப்பட்டது. யாக பஸ்மம் ரட்சையாக நெற்றியில் அணிவிக்கப்பட்டு, இறைசித்தர் அய்யா, தன் கைகளால் அனைவருக்கும் திரு நீறு இட்டு விட்டார். அனைவருக்கும், நெய்வேதியம் செய்யப்பட்ட கனிகள், எலுமிச்சை போன்றவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.


அனைவருக்கும், வாசி யோகா குடிலில் தியானம் செய்ய அனுமதிக்கப்பட்டது. வேண்டுபவர்களுக்கு வாசி யோகா தீட்சை எந்த கட்டணமும் இல்லாமல் கற்று கொடுக்கப்பட்டது

ஜீவ நாடி


நன்றி

சந்தானம்


No comments:

Post a Comment