சிறந்த படிப்பு மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க அருள் வழங்கும் துடையூர் விஷமங்களனாதர் கோவில்
துடையூர் விஷமங்களனாதர் கோவில் திருச்சி டு மணச்சநல்லூர் ரோடில் நொச்சியம் இல் இருந்து சேலம் செல்லும் ரோடில் அதாவது 5 கி.மி தூரத்தில் உள்ளது இந்த ஆலயம் இது ஒரு சிவன் கோவில் இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது இந்த கோவிலில் உள்ள சிவன் மிகவும் சக்தி உள்ளவர் இவர் முனிவர்களாலும் தேவர்களாலும் வணங்க்கபட்டவர், இந்த கோவிலில் 3 மணி நேரம் எரியும் படி விளக்கு போட்டால் நினைத்த காரியம் கைகூடும், இந்த கோவில் ஒரு ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது, இங்கு சிவன் விஷமங்களநாதர் என்ற பெயரில் இருக்கிறார் இங்கு வீணை சரஸ்வதியும் வீணை குருபகவானும் இருகிறார்கள் அவர்களுக்கு தேன் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரும், முதலில் சிவனை கும்பிட்டுவிட்டு பின்பு தாயாரை வணங்கிவிட்டு அப்புறம் சரஸ்வதி மற்றும் குருபகவான் வணங்கி பின்பு சிவன் கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி பின்பு வெளியில் உள்ள பாம்பு புற்றுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் நிரந்தர வேலை கிடைக்கும் , கணவன் மனைவி உறவு மிகவும் சிறந்த முறையில் இருக்கும், பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர் , குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், செல்வம் பெருகும், வேலை சம்பந்தமான குறைகள் நீங்கும்.
திரயோதசி திதியை, துடை திதி என்பார்கள். திரயோதசி திதியின்போது, அந்தி சாயும் வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பூஜைகள் செய்து வழிபட்டால், முன்வினைகள் நீங்கி, நிம்மதியான நல்ல வாழ்க்கையைப் பெறலாம் என்பது ஐதீகம்! அதையே 'பிரதோஷ பூஜை’ என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், நொச்சியம் மற்றும் திருவாசியை அடுத்து, கொள்ளிடக் கரையிலேயே, சாலைக்கு அருகில் அமைந்துள்ளது துடையூர் திருத்தலம். திரயோதசி எனப்படும் துடை திதியின்போது, இங்கே உள்ள சிவனாரை வணங்கித் தொழுவது விசேஷம்! எனவேதான், இந்த ஊருக்கு துடையூர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.
சுமார் 2,000 வருடப் பழைமைமிக்க கோயில்; கண்டராதித்த சோழன் கட்டிய ஆலயம் எனப் போற்றுகிறார்கள். ஒருகாலத்தில் கொள்ளிடக் கரையில், கடம்ப வனத்தில், மிக பிரமாண்டமாக இருந்த கோயில், பிறகு கால ஓட்டத்தில் வழிபாடுகள் குறைய... பக்தர்கள் கூட்டம் குறைய... கோயிலின் நீள அகல பிரமாண்டமும் குறைந்துவிட்டதாகச் சொல்வார்கள்.
இன்றைக்கு மிகச் சிறிய கோயிலாகக் காட்சி தருகிறது இது. ஆனாலும், சிவ சாந்நித்தியமும் சக்தியின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது. ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர். இவரை வணங்கி, விபூதிப் பிரசாதத்தை இட்டுக்கொண்டால், எந்தப் பூச்சி களின் விஷத்துக்கும் ஆளாகாமல், தப்பித்துக் கொள்ளலாம்.
கர்வம், ஆணவம், பொறாமை, வயிற்றெரிச்சல், உண்மையை மறைத்தல், மற்றவரை வஞ்சித்தல், வீட்டுப் பெண்களையோ அல்லது பிடிக்காத நபர்களையோ துன்புறுத்துதல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுதல், வார்த்தைக் கொடுக்கால் பிறரை காயப்படுத்திப் பேசுதல் எனும் விஷ ஜந்துக்களின் விஷத்துக்கு இணையான துர்குணங்களைக் கொண்டவர்கள் இங்கு வந்து சிவ தரிசனம் செய்துவேண்டினால், அவர்களிடம் உள்ள துர்குணம் யாவும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!
தீயதை அழித்து நல்லதைத் தருவார் சிவபெருமான். அதாவது, விஷத்தை முறிக்கச் செய்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தந்தருள்வார் ஈசன். எனவே, ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் எனும் திருநாமம் அவருக்கு அமைந்தது.
அம்பாள் ஸ்ரீமங்களாம்பிகை. நல்ல விஷயங்களை, சத்காரியங்களை, மங்களகரமான நிகழ்வுகளை கணவருடன் சேர்ந்து தம்பதி சமேதராக, அம்மை அப்பனாக இருந்து நமக்கு வழங்குவதால், ஸ்ரீமங்களாம்பிகை எனும் திருநாமம் அமைந்ததாம் உமையவளுக்கு.
''துடையூர் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கு.
[ துடையூர் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கு. அசுரர்களின் அட்டூழியத்தால், அகிலத்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா இறந்துட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல, அசுரர்களை எதிர்த்துப் போராட பலசாலிங்க யாருமே இல்லாத நிலையில, ஒரு தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை ஒன்று, துடையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து, அடுத்த கணமே பெரிய மனிதர் போல் உருவமெடுத்ததாம். அந்தக் குழந்தைதான் ஒளரவ மகரிஷி. இதோ, இந்தக் கடம்ப வனத்தில் இருந்துதான், துடையில் இருந்து பூமிக்கு வந்து, அசுரர்களை அழித்தொழித்தார் ஒளரவ மகரிஷி. எனவே, இந்த இடத்துக்கு துடையூர் எனப் பெயர் அமைந்தது'' என்கிறார் கோயிலின் ஹரி குருக்கள்.
அதுமட்டுமா... ஸ்ரீராமபிரான், மாரீசன் எனும் மாயமானை அம்பு தொடுத்துச் சாய்த்தார் அல்லவா? அப்போது, மாயமானின் தொடைப் பகுதியில்தான் அம்பு விட்டுக் கொன்றார் ஸ்ரீராமர். எனவே, இந்த ஊருக்கும் ஸ்ரீராமருக்கும் தொடர்பு உண்டு என்றுகூடச் சொல்வார்கள். எது எப்படியோ... துடையூர் சிவபெருமானை வாழ்வில் ஒருமுறையேனும், ஒரு பிரதோஷ வேளையில் வந்து தரிசனம் செய்துவிட்டால், இன்னொரு பிறவி என்பது இல்லை என்பது ஐதீகம்!'' என்று விவரிக்கிறார் ஹரி குருக்கள்.
கோபுரமோ மதிலோ இல்லை; கொள்ளிடக்கரைக்கும் தார்ச்சாலைக்கும் நடுவே சின்ன வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. அதையடுத்து, கோயில்தான்! கோயிலை நெருங்கும்போதே, ஒரு தகரக் கூரையின் கீழ் அருமையாக உட்கார்ந்திருக்கும் நந்தி கண்ணில் படுகிறது. அடடா... நந்தியின் சிற்பத் திருமேனி கொள்ளை அழகு!
'பிரதோஷத்தின்போது, இந்த நந்திக்குத்தான் அபிஷேகம் நடைபெறுமா? குளிரக் குளிர, பாலும் தயிரும் பஞ்சாமிர்தமும் பன்னீரும் இந்த நந்திதேவருக்குத்தானா? எத்தனை கம்பீரம் இந்த நந்தி! எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு, இந்தச் சிற்பத்தில்!’ எனச் சிலிர்ப்பும் வியப்புமாக நந்தியை வலம் வருகிறோம்.

No comments:
Post a Comment