Tuesday, 3 October 2017

அருளும், பொருளும் நல்கும் அரிய யந்திரம்

🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

அருளும், பொருளும் நல்கும் அரிய யந்திரம்

இந்த இனிய  சுப புதன் நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் அருளும், பொருளும் நல்கும் யந்திரம் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த யந்திரம் கருவூராரால் தனது கருவூரார் மாந்திரீக காவியம் என்ற நூலில் அருளப் பட்டிருக்கிறது.தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முய்ற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த யந்திரம் உதவுமென்கிறார் கருவூரார்.

மேலே இருக்கும் படத்தில் இருக்கும் அறுங்கோனமும் அதனூடாக அமைந்திருக்கும் ஸ்ரீம் எனற எழுத்துக்களைக் கொண்ட எளிய யந்திரம்தான் இது. மையத்தில் பலன் வேண்டுவோரின் பெயரை பொறித்தால் இந்த யந்திரம் முழுமையடைந்து விடும். இந்த யந்திரத்தினை கீறும் முறையினை கருவூரார் பின்வருமாறு விளக்குகிறார்.

மூன்ற்ங்குல சதுரமான தங்கம் அல்லது வெள்ளி அல்லது செப்புத் தகடு இந்த யந்திரம் கீறிட உகந்தது.தகட்டில் யந்திரத்தை கீறிட செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து சிவப்பு நிற மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும்.

"ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மகா லட்சுமி சுவாஹா"

இவ்வாறூ தொடர்ந்து பதினோரு நாட்கள் இம்மாதிரி பூசை செய்து வந்தால் யந்திரம் உருவேற்றப் பட்டு சக்தி கொண்டதாக ஆகிவிடுமாம். இத்தகைய சக்தி வாய்ந்த யந்திரத்தினை வர்த்தகம் அல்லது தொழில் ஸ்தாபங்களில் வைத்து தினமும் காலையில் பூக்கள் தூவி மேலே சொன்ன மந்திரத்தினை மூன்று தடவைகள் மட்டும் கூறி வந்தால் அந்த இடத்தில் அருளும், பொருளும் பெருகும் என்கிறார் கருவூரார்.

மிகவும் எளிதான இந்த யந்திரத்தை பயன்படுத்தி பலனடைய எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கட்டும்.
நல்லது நடக்கும்

No comments:

Post a Comment