Tuesday, 31 October 2017

அகத்தியரிடம் உங்கள் குறைகளை தெரிவிக்க ஒரு வழி.....

https://m.facebook.com/story.php?story_fbid=1578168115584081&id=100001727234463


வாசகர்களின் வாழ்வில் குறையேதும் இருந்தால், பெயர்,
முகவரி, நட்சத்திரம், தொலை பேசி எண், குறிப்பிட்டு,
குறைகளை எழுதி, Visitor post என்ற இடத்தில் பதிவிடவும்,
நான் அவற்றை அச்சிட்டு ஜீவ நாடியில் கொண்டு போய் வைக்கிறேன்.
அய்யா ஏதாவது உரைத்தால், தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
 சந்தானம்.

அகத்தியர் முக நூல் பக்கம் :

https://www.facebook.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-1903278616577199/

கரபுர நாதர், கல்யாண அவ்வையார் கோவில்

திருமணத்தடை நீக்கும் கல்யாண அவ்வையார் சேலம் அருகிலுள்ள
உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அருள்புரிகிறார்.

சிவதரிசனம் வேண்டி தவமிருந்த சிறந்த சிவபக்தர்களாக இருந்த ராவணனின் தம்பிகளான கரன், தூஷணன் இருவரும் ஆண்டுகள் பல கடந்ததால் கரதூஷன் மீது புற்று வளர்ந்து, அவனது உருவத்தை மறைத்துக் கொண்டது. அசுரனின் இந்த கடும் தவம் கயிலாயத்தில் எதிரொலிக்க, மகிழ்ந்த சிவபெருமான் கரதூஷனுக்கு காட்சிஅளித்தார். தமது கடும் தவம் பலித்து விட்ட சந்தோஷத்தில் கரதூஷன் தமது ஆயிரம் கரங்களை நீட்டி ஈசனை நோக்கி வரம் வேண்டினார். காட்சி தந்த சிவபெருமான், கரதூஷன் மன்னர் ஆவதற்கு வரம் கொடுத்தருளினார். அதன்பின்னர் இலங்கை சென்ற கரதூஷனை இலங்கை வேந்தன் ராவணன் வரவேற்று யாழ்ப்பாணத்துக்கு அவனை மன்னராக்கினார்.

கரதூஷன் தவம் செய்து சிவபெருமானை தரிசித்த இடத்தில் சுயம்பு மூர்த்தியாக, சிவபெருமான் 'கரபுரநாதர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அதன்பின்னர் அவ்வப்போது கரதூஷன் உத்தமசோழபுரம் வந்து கரபுரநாதரை தொழுது வணங்கி சென்றதாக கோவில் தலவரலாறு கூறுகிறது.

பக்தர்களுக்கு கை (கரம்) கொடுப்பவராக அருளுவதாலும் , கர தூஷணருக்கு அருள்புரிந்ததாலும் சிவன் , "கரபுரநாதர்' என்ற பெயர் பெற்றார்.

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது.

கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தங்கி இறை வழிபாடு நடத்தியதற்கான கல் வெட்டு ஆதாரம் உள்ளது. அதனால் தான் சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றும், பாண்டியன் தங்கிய இடத்தை வீரபாண்டி என்றும், சேரன் தங்கிய மலை சேர்வராயன் மலை என்றும் வழங்கப்படுகிறது.கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.
சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை கோவிலில் பூஜை செய்து வந்த அர்ச்சகர் இறந்து விடவே,
16 வயதான அவரது மகன் குணசீலன் அபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தான். கருவறைக்கு சென்று தான் கொண்டு வந்த அபிஷேக நீரை சாமிக்கு ஊற்றி விட்டு, லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மலர்மாலை போட முடியாமல் மனம் வருந்தி அழுது நிற்க, இறைவன் தன் தலையை சாய்த்து அந்த மாலையை ஏற்றுக்கொண்டார். மாலை போட முடியவில்லை.
கோவிலில் உள்ள லிங்கம் இன்றும் தலை சாய்ந்த நிலையில் நிற்கிறது. கரபுரநாதரை 'முடி சாய்ந்த மன்னர்' என்றே அழைக்கின்றனர்.

மூலஸ்தானம் அமைந்துள்ள மண்டபத்திலேயே தாயார் பெரிய நாயகி அம்மனாக தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

அம்மன் சன்னதி பக்கத்தில் நடராஜர் காட்சி தருகிறார்.

கோவில் பிரகாரத்தில் சகட கணபதி, கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் சன்னதி,
சண்முக சுப்பிரமணியர் சன்னதி, அய்யப்பன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.

சூரிய பகவான் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார். மேலும் பிரகாரத்தின் ஒரு பகுதியில் காவல்தெய்வமான காலபைரவர் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.

கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹாரபைரவர், சண்டபைரவர், அசிதாங்க பைரவர், உன்மத்த பைரவர், உருபைரவர் ஆகியோரின் சிற்பங்கள் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.

ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த ¬முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாரிமகளிர் திருமணம்: பறம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னனை, எதிரிகள் சூழ்ச்சியால் கொன்று விடவே, அவனது மகள்களான அங்கவை, சங்கவை ஆதரவு இன்றி தவித்தனர்.

பாரியின் நண்பரான கபிலர்அவர்களுக்குத் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால், சேர, சோழ, பாண்டியர் மூவருமே பாரியை எதிரியாக கருதியதால், அவரின் மகள்களை மணந்து கொள்ள அனைவரும் மறுத்தனர்.

கரபுரநாதர் கோவிலுக்கும் தமிழ்பெரும் மூதாட்டி அவ்வையாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

பாரி மகளிரின் நிலை பற்றி கேள்விப்பட்ட அவ்வையார், மலைஅரசனான தெய்வீகனின் உதவியை நாடினார்.
மூவேந்தர்களும் ஒத்துக் கொண்டால், பாரி மகளிரை மணம் செய்து கொள்வதாக தெய்வீகன் நிபந்தனை விதித்தான்.
அவ்வையார், மூவேந்தர்களும் திருமணத்திற்கு சம்மதிக்க அருளும்படி விநாயகரிடம் வேண்டினார்.
விநாயகரும் அந்த மன்னர்களுக்கு தாமே கைப்பட திருமண ஓலை எழுதி வரவழைத்தார். இத்தலத்தில் திருமண ஏற்பாடும் நடந்தது.

ஒருமுறை இறைவனான கரபுரநாதரை தரிசனம் செய்ய இங்கு வந்த அவ்வையார் பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, அவ்வையார் சங்கவை ஆகிய 2 பேருக்கும் சேர, சோழன், பாண்டிய மன்னர்களை அழைத்து வந்து திருமணத்திற்காக கோவில் முன்பு பனை மரத்தை வெட்டி பந்தல் போட்டு அறுசுவை உணவை படைத்தார். அப்போது அவ்வையார் மூவேந்தர்களையும் பார்த்து, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு மன்னர்கள் பனம்பழம் வேண்டும் என்றனர்.

திருமணத்தன்று மூவேந்தர்களும், காய்ந்த பனை மரத்தை துளிர்க்கச் செய்தால், திருமணத்திற்கு சம்மதிப்பதாகக் கூறினர்
உடனே அவ்வையார் கரபுரநாதரை வேண்டி ஒரு பாடலை பாடிய போது, வெட்டப்பட்ட பனைமரம் தளிர்விட்டு ஒரு பனம்பழம் காய்த்து, மன்னர்கள் முன்பு விழுந்தது. அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் பழத்தை தின்று மகிழ்ந்தார் என்பதும் திருமண சாட்சியாக 18 சித்தர்களில் ஒருவரான கரடிசித்தர் இருந்த தாகவும் தலவரலாறு கூறுகிறது.

மூவேந்தர்களின் ஆதரவோடு திருமணம் இனிதே நடந்தது.

இதை உணர்த்தும் வகையில் கோவில் பிரகாரத்தில் கரடி சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. இதேபோல கோவிலுக்கு வெளியே சுமார் 5 அடி உயரத்தில் அவ்வையாருக்கு கற்சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நாரதர் கரபுரநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சிவபெருமானை சித்தர்களான திரு மூலர், கரடிசித்தர் ஆகியோர் வழிபாடு செய்ததால், கரபுரநாதருக்கு சித்தேஸ்வர் என்ற பெயரும் உண்டு.

மேலும் திருநாவுக்கரசர், அப்பர், அருணகிரிநாதர், சேக்கிழார், பட்டினத்தார், அவ்வையார் ஆகியோர் இந்த கோவிலை பற்றி பாடல்களை பாடியுள்ளனர்.

கரபுரநாதர் கோவிலில் 12 மாதங்களும் உற்சவம் நடக்கிறது.
சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோவில் சண்டி ஹோமம், பிரதோஷம் போன்று வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு. விசேஷ திருவிழாவாக சித்திரை பவுர்ணமி திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

கரபுரநாதர் கோவிலில் தரிசனம் செய்தால் செல்வம் பெரு கும், தோஷம் நீங்கும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஜதீகம்.

திருமணத் தடை போக்கும் கல்யாண அவ்வையார் ராஜ கோபுரம் அருகே வீற்றிருக்கிறார். கன்னிப்பெண்கள் அவரவர் பிறந்த(ஜென்ம) நட்சத்திர நாளில் மூன்று மாலைகள் வாங்கி வந்து, சிவன், அம்பாள், அவ்வையாருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். திருமணம் நிச்சயமானதும், அழைப்பிதழை வைத்து மீண்டும் வணங்குகின்றனர்.

இருப்பிடம்: சேலம்- ஈரோடு செல்லும் வழியில் 5 கி.மீ.,

சேலத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வழியாக கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாயில் பூலாவரி பிரிவு ரோட்டிற்கு அருகில் உத்தம சோழ புரத்தில் திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது கரபுரநாதர் கோவில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் உத்தம சோழ புரம் கரபுர நாதர் கோவில் அமைந்துள்ளது
திறக்கும் நேரம்: காலை 7.00- 12.30 மணி, மாலை 4.30- 7.30 மணி





குமார மலை, அதிசய முருகர் தலம்

குமரமலை

முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் திருவுருவிலும் அவனே வழிகாட்டிய வித்தியாசமான- சக்திமிக்க திருத்தலம் குமரமலை.

தினசரி மலையை ஒட்டியுள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் நீர் கொண்டு வந்து, சங்குச் செடிப் புதரில் வந்தமர்ந்த தண்டாயுதபாணிக்கு முதல் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நான்கு கால பூஜையும் நடைபெறுகிறது.

இந்தக் குமரமலை குமரேசனை வழிபடும் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அடைகிறார்கள். நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நோயற்ற வாழ்வும் மணமாலையும் மக்கட் பேறும் கிடைக்கும்.

வாதநோய்க்கு பிரார்த்தனை: வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன் அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நீங்குவதாக நம்பிக்கை.

நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்கின்றனர்.

வேலுக்கு வளையல்: இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்த மண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு காதுகுத்து சடங்கையும் இங்கேயே செய்கின்றனர். குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் வழிபிறக்கிறது.
சங்கு தீர்த்தம்: குமரமலை மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது.

இங்கிருந்தே அபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது.
கோயிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது.

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே

திருச்செந்தூரில் மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்ட இடைவெளியில் காதை வைத்துக் கேட்டால் "ஓம்' என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.

அதேபோல் இங்கு இடும்பன் சந்நிதிக்கு முன்னால் 24 மணி நேரமும் கடற்கரை காற்றுபோல் இதமான காற்று வீசுவதை அனுபவிக்கலாம்.

எதிரில் மரங்களோ குளமோ எதுவுமில்லை. இது ஆச்சரியம்!
சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்ட தீவிர முருக பக்தர். சேதுபதி...80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது.
கண் கண்ட தெய்வமே! கை வந்த செல்வமே! முருகா முருகா

"பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே! இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்!' என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், ! இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.

அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று "குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்!' என்று சொல்லி மறைந்தார்.

கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடி களின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர். .

வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுத பாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, "அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள்; தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.

குமரமலை முருகனின் பக்தர் முத்துமீனாட்சி கவிராயர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நாள்தோறும் வழிபட்டு
முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார்.

அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து "குமரேச சதகம்' என்று பெயரிட்டு, தன் பெய ரையும் "குருபாத தாசர்' என்று மாற்றிக் கொண்டார்.
அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரம். பஸ் உண்டு. 45படி ஏறினால் கோயிலை அடையலாம்.

புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் சாலையில், குமரமலையைஅடையாளம் காட்டும் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது...
திறக்கும் நேரம்: காலை 7- பகல் 12 மணி, மாலை 5- இரவு 8 மணி

சித்திரை வருடப் பிறப்பு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளியில் பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். ஐப்பசியில் கந்தசஷ்டி, மாதந்தோறும் கார்த்திகை, திருக் கார்த்திகை, சோமவார விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆங்கில வருடப் பிறப்பன்று படிபூஜை விழா என சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

நாடியில் வாக்கின் முக்கியத்துவம்




அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம்மை நம்பி வந்து, இந்த ஜீவ அருள் நாடியில், உரைப்பது சித்தர்கள்தான், என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர்கொண்டால், அவர்களுக்குத் தெரியும். பிள்ளைகள் படிப்பு, தாரத்தின் உடல்நிலை, சொந்த இல்லம், போன்ற எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்துவிட்டால், நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால், நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்

திருவெறும்பூர் கோவில் பெருமைகள்

திருவெறும்பூர்

அமைவிடம்
பொன்னி நதி பாய்ந்து புலமெல்லாம் வளம் மிகுந்தது திருச்சி.
கங்கையிற் புனிதமாய காவிரி ஆறு இரண்டாக பிரிந்து (கொள்ளிடம் – காவிரி) மீண்டும் இணைந்த புண்ணிய பூமி. ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே” என்று ஆழ்வார் களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் அரங்கனும், அரங்கநாயகி தாயாரும் அருள் புரியும் ஸ்தலம் ஆகும். ஆனைக்காவில் – அண்ணலான ஜம்புகேஸ்வரர் அகிலாண்ட நாயகி – அருள்புரியும் அப்பு (நீர்) ஸ்தலம் யானைக்கு அருளியது திருவானைக் காவல் ஸ்தலம். மலைக் கோட்டை – உச்சிப் பிள்ளை யார் – தாயுமானவருக்கு அருள் புரிந்த ஸ்தலம் – சமணர்கள் வாழ்ந்த சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளி மிகவும் பழமையானது.
நன்றுடையானை- தீயதில்லானை -நரை வெள்ளேறு ஒன்றுடையானை – சிராப்பள்ளிக் குன்று உடையானைக் கூற என் உள்ளம் களி கூறுமே என்பது தேவாரம்.

இத்தகைய பிரசித்தி பெற்ற – சோழநாட்டு (திருச்சி) தென்கரையில் ஏழாவது ஸ்தலமாக உள்ளது. திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சி நகரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே 8-வது கி.மீ.யில் -‘திருஎறும்பூர்” என்னும் திவ்ய ஸ்தலம் உள்ளது.

இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட ஸ்தலம். எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன் – முருகன், திருமகள், பிரம்மா, ரதிதேவி அக்கினி, நைமிச முனிவர் – கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கி பேறு பெற்ற ஸ்தலம்.

அகத்திய மாமுனிவர் – முருகப் பெரு மானிடம் ஞான உபதேசம் பெற்ற ஸ்தலம். மூவேழு இருபத்தி ஒரு தலை முறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள ஸ்தலம். சோழ பாண்டியர்கள் திருப்பணி செய்த ஸ்தலம். நாவுக் கரசர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று தொல் பொருள் துறையின ரால் பாதுகாக்கப்படும் தலம். திரு வெறும்பூர் என்னும் திருக்கோயில் ஆகும்.

புராண வரலாறு:
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர் களையும் முனிவர்களையும் துன் புறுத்தி வந்தான். இந்திரனை தோற் கடித்து விண்ணுலகைக் கைப்பற்றி னான். தோல்வியுற்ற இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அவர், ‘தென்கயிலாயமான மணிக்கூட புரத்துப்” பெருமானை வழிபடுவா யாக! அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான். அவனே அவ் வசுரனை அழிப்பான் அஞ்சாதே! செல் என்று வழிகூறினார்.

அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக்கூடாது என்று, இந்திர னும் தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை கரு நெய்தல் மலர்களால் அர்ச்சித்து வழிபட்டனர்.

எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபடச் சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு திருவருள் செய்தார் எறும்பீசர்.
இதே போன்று சிவசர்மன் என்ற சிறுவனுக் காக விரிஞ்சி புரத்திலும், தாடகைக்காக திருப் பனந்தாளிலும் முடி சாய்த்துக் காட்சி கொடுத்து திருவருள் புரிந்ததையும் இங்கே நோக்குவோம்.

கல்வெட்டுக்கள் :
இக்கோயிலில் சுமார் 49 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், மூன்றாம் ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் எனப் பல்வேறு அரசர்கள் திருப்பணிகள் செய்த விபரம் அறியப்படுகிறது.

மேலும் அக்கல்வெட்டுக்களில் இருந்து கிளியூர் நாட்டு சிறுதவூர் செம்பியன் வெய்தி வேளான் என்பவன் மலை மேல் உள்ள இறைவனுக்கு விமானம் எடுத்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தலப்பெயர்கள் :
மணிக்கூடம், இரத்தினக்கூடம் திரு வெறும்பி புரம், எறும்பீசம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனம், குமாரபுரம் எனப் பல்வேறு பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. உருவத்தில் சிறிய தான எறும்புக்கும் இரங்கி வந்து அருள் புரிந்த இறைவன் கருணையை என்னென்று கூறுவது?

இறைவன் – இறைவி – திருப்பெயர்கள்
புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இவ்விறைவனுக்கு எறும்பீசர், மதுவனேஸ்வரர் மணி கூடாசலபதி, பிபிலிகேசுவரர், திரும் பெறும்பூர் ஆள்வார், திருவெறும்பியூர் உடையார் நாயனர் என்று கூறப்படுகிறது.

நந்தி தேவரின் வலப்புறம் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியாக அம்மன் சந்நிதி அமைந் துள்ளது. அன்னையின் எழில் கோலம் நம்மை ஈர்க்கிறது.

நறுங்குழல் நாயகி, சுகந்த குழலாள், சௌந்தர நாயகி, மதுவன ஈஸ்வரி, இரத்னாம்பாள் என்ற திருநாமங்களில் அம்பாள் கருணை புரிந்து வருகிறார்.

இலக்கியச் சான்றுகள் :
திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகை திருத்தாண்டகம் முதலியன இறைவன் புகழை கூறுகின்றன.

‘இன்பமும் பிறப்பும் இறப்பினொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே ! அரனே ! என்றரற்று வார்க்கு
இன்பனாகும் எறும்பியூர் ஈசனே !”
– திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை
இது தவிர திருவெறும்பியூர் புராணம் ஒன்றும் இத்தலத்து ஈசனைப் போற்றுகின்றது.

“யானை முதலா எறும்பு ஈறாக ஊனமில் யோனியின்) என்று திருவாசகமும்.
‘நின்றழல் மெய்யன் எனழி நேர்ந்துலகு வாழ்த்துகின்ற நன் றெறும் பியூரிலிங்கு நன் னெறியே” – எனத் திருவருட்பாவில் வடலூர் வள்ளலாரும், “அத்தி முதல் எறும்பீறான உயிர் அத்தனைக்கும். சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகன்” என்று தனிப்பாடாலாலும் இத் தலத்தைப் பெருமைப்படுத்துகின்றது.

சரித்திரச் சான்று
கி.பி. 1752ல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக் காரர்களுக்கும் நடந்த போரின் போது வீரர்கள் தங்கும் இடமாக இக்கோயில் பயன்பட்டு வந்த தாக வரலாறு கூறுகிறது.

விழாக்கள்
வைகாசியில் பிரம்மோற்சவம் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி கிரிவலம் என சிவாலய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தரிசன நேரம்
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். சிவாச்சாரியப் பெருமக்கள் சிறப்பான வழிபாடு செய்து திருவருள் பெற்றுத் தருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத் தலத் திற்கு ஒரு முறை சென்று எறும்பீசரை வணங்கி வாழ்வில் ஏற்றம் பல பெற்று வாழ்வாங்கு வாழப்பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

அகத்திய பெருமான் மனம் மணக்கும் அருள்வாக்கு

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி, உள்வாங்கி, அவரவர்கள் சுய ஆய்வு செய்து, சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட, அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது, என்று ஆய்ந்து, தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனம் செம்மையாகவேண்டும். மனம் உயரவேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம், மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.

மண்டகப்பட்டு குடைவரை கோவில், மும் மூர்த்திகள் புராதன தலம்

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில் :

தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது. இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில் ஆகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டில் 'இந்தக்கோயிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன்' என்று குறுப்பிட்டுள்ளார்.
இவரே மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர்
அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார்.
இவருக்குப்பின் வந்த இவர் மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின் பணியைத் தொடர்ந்தார். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு குடைவரைக் கோயில் இவர் காலத்துப் படைப்புக்குச் சிறந்தசான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான் பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக்கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை
போன்ற படைப்புகள் அனைத்தும் இவரது படைப்பாகும்.விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முதல் குடைவறைக் கோயில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால் அதுகுறித்த தகவல்கள் முழுமையாக இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ளது மண்டகப்பட்டு. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தூரமும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 5 நிமிட நடைப்பயணத்தில் இந்த கோயில் உள்ளது. மிகப்பெரிய பாறைக் குன்றை குடைந்து இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் நிறுவப்பட்ட முதல் குகைக்கோயில் இதுவேயாகும் என்று அங்குள்ள வடமொழி கல்வெட்டிலிருந்த தகவலை தொல்லியல் துறை வைத்துள்ள தனி கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை பயன்படுத்தாமல் லக்ஷிதாயதன என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு நிர்மாணம் செய்யப்பட்டது.
மலையைக் குடைந்து கற்றளிகள் செய்யும் புதியமுறையை தமிழகத்தில் புகுத்தியவர் மகேந்திரவர்மனே ஆவார். இதனால்தானோ அவருக்கு லக்ஷிதன், விசித்திரசித்தன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இக்கற்றளி மிக எளிய மண்டபம் போன்ற அமைப்பு கொண்டது. முன்னே மகாமண்டபம், பின்னர் அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மிகப் பெரிய 4 தூண்கள் வேலைப்பாடின்றி எளிய பாணியில் அமைந்துள்ளன.
பின் சுவற்றில் 3 கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இதில் சுண்ணாம்பு பூச்சும், அதன் மேல் ஓவியத்தில் மும்மூர்த்திகளையும் வரைந்து வணங்கப்பட்டு வந்தன என்று ஊகிக்க இடமுள்ளது என்று தொல்லியல் துறையின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டிலேயே பல தவறுகள் உள்ளன.
கோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகள் துவார பாலகர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோயில்களில் இந்த துவார பாலகர்கள் ஆயுதங்களுடன் நேர் நிலையில் நின்றபடிதான் இருப்பர். ஆனால் இங்குள்ள சிற்பங்களில் வலதுபுறத்தில் அரசர் வாள்மீது கைவைத்து, கம்பீரத்தோடு, மணிமுடி தரித்து ராஜதோரணையில் நின்று கொண்டிருக்கிறார். இடதுபுறத்தில் நளினத்துடன் நிற்கும் பெண் சிற்பம் உள்ளது. அது அரசியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல் 3 கருவறைகளிலும் கீழ்பாகத்தில் சிலை ஸ்தாபிதம் செய்வதற்கான துளைகள் உள்ளன. இதனால் அங்கு சிற்பங்கள்தான் இருந்திருக்க வேண்டும், ஓவியம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் கோயிலின் முகப்பில் அழகான இரண்டு சிற்பங்களை செதுக்கியுள்ளவர்கள், கருவறையில் மட்டும் ஓவியம் வரைவதற்கான வாய்ப்பில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்
கின்றனர்.
மேலும் தொல்லியல் துறை வைத்துள்ள கல்வெட்டில் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைக்கூட (கி.பி.571 அல்லது 600 முதல் 630) என குறிப்பிடவில்லை.
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு கோயிலை கட்டமைத்த வரலாற்றை குறைந்தபட்ச தகவல்களுடன்கூட அங்கே வைக்கப்படவில்லை. வைத்துள்ள கல்வெட்டும் சிதைந்துள்ளது. மகாபலிபுரம் சிற்ப சரித்திரத்துக்கே முன்னோடியாக திகழ்ந்த இதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ளவர்களின் எண்ணம்.
அதிகளவில் கூட்டம் இங்கு வராவிட்டாலும், தினசரி சிலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்வதாக இக்கோயிலின் அருகே வசிக்கும் வீரம்மா என்ற பெண் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடம், அதற்கான எந்த வசதிகளும் இல்லாமல் 1,500 ஆண்டுகளாக ஒரு சரித்திரம் அமைதியாக முடங்கிக் கிடக்கிறது
பல்லவர்காலம் குடைவரைகள் :
மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்,
பல்லாவரம் குடைவரை,
மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்,
மாமண்டூர் திருமால் குடைவரை,
குரங்கணில்முட்டம் குடைவரை,
வல்லம் வசந்தீஸ்வரம் (செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்),
மகேந்திரவாடி குடைவரை,
தளவானூர் சத்துருமல்லேசுவர் ஆலயம்,
திருச்சிராப்பள்ளி குடைவரை,
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்,
நார்த்தாமலை குடைவரை,
குடுமியான்மலை குடைவரை,
திருமெய்யம் குடைவரை,
சீயமங்கலம் திருத்தூணாண்டார் கோயில்,
விளாப்பாக்கம் குடைவரை,
மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்,
மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்,
மாமல்லபுரம் கோனேரி மண்டபம்,
மாமல்லபுரம் வராக மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்,
மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை,
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்,
மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்,
மாமல்லபுரம் பரமேஸ்வரவராக விஷ்ணுகிருகம்,
மாமல்லபுரம் இராமானுஜ மண்டபம்,
மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்,
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்,
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை.
பாண்டியர் குடைவரைகள் :
பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை,
மலையடிக்குறிச்சிக் குடைவரை,
மகிபாலன்பட்டிக் குடைவரை,
அரளிப்பாறைக் குடைவரை,
திருமெய்யம் குடைவரைகள்,
கழுகுமலைக் குடைவரை,
திருத்தங்கல் குடைவரை,
செவல்பட்டிக் குடைவரை,
திருமலைக் குடைவரை,
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை,
மனப்பாடுக் குடைவரை,
மூவரை வென்றான் குடைவரை,
சித்தன்னவாசல் குடைவரை,
ஐவர் மலைக் குடைவரை,
அழகர் கோயில் குடைவரை,
ஆனையூர்க் குடைவரை,
வீர சிகாமணிக் குடைவரை,
திருமலைப்புரம் குடைவரை,
அலங்காரப் பேரிக் குடைவரை,
குறட்டியாறைக் குடைவரை,
சிவபுரிக் குடைவரை,
குன்றக்குடிக் குடைவரைகள்,
பிரான்மலைக் குடைவரை,
திருக்கோளக்குடிக் குடைவரை,
அரளிப்பட்டிக் குடைவரை,
அரிட்டாபட்டிக் குடைவரை,
மாங்குளம் குடைவரை,
குன்றத்தூர் குடைவரை,
கந்தன் குடைவரை,
யானைமலை நரசிங்கர் குடைவரை,
தென்பரங்குன்றம் குடைவரை,
வடபரங்குன்றம் குடைவரை.
முத்தரையர் குடைவரைகள் :
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்.
தொகுப்பு அகத்தியர் ஞானம்.


ஞானஸ்கந்தர் ஜீவ நாடி பதிவு

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-41


ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்குகள் 100% மிகத்துல்லியமாக இருகின்றது. ஒருவர் வந்து நாடி கேட்க அமர்ந்த உடனேயே அவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பாடல் வடிவில் முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைக்கின்றார். அதேபோல் ஜீவ நாடி கேட்டு அதில்  வருகின்ற ஆலய வழிபாடுகளை மேற்கொண்ட உடனே பல மாறுதல்கள் வருவதாக பலர் ஆச்சரியத்துடன் வந்து கூறுகின்ற போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி ஆனந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு அர்ச்சகர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான பலன்களை உரைத்து வந்த முருகப்பெருமான் தீடீரென ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அப்போது ஜீவ நாடியில் ஒரு ஆனியில் ஒரு ஜப மாலை தொங்கும்  காட்சி வந்தது. உடனே ஜபம் செய்ய வேண்டிய இந்த ருத்திராட்ச மாலையை இப்படி ஆனியில் மாட்டி வைத்து இருக்கின்றாய். அதுமட்டுமில்லாமல் தினசரி ஜபம் செய்வது கிடையாது. ஜப மாலையை யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்க வேண்டும். இப்படி அனைவர் கண்ணிலும் படும் படியும் அதுவும் இரும்பு ஆனியில் மாட்டி வைத்திருப்பது மிகவும் குற்றமாகும். அது ஐந்து முக ருத்திராட்சம் 54 மணி கொண்ட மாலை சரியா என்றார் முருகப்பெருமான் வந்தவர் தேம்பி அழுது கொண்டிருந்தார். தொடர்ந்து உரைத்தார் முருகப்பெருமான்… பொதுவாக ஒரு குரு தனது சீடனைத்தினந்தோரும் ஒரு குறிப்பிட்டஎண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம்செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தைஎண்ணிக் கணக்கிடுவதை விரல்களின்மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜபமாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லதுமனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலைசாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்குஉதவி செய்கிறது. ருத்ராக்ஷம், சந்தனம்,இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம்,தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால்ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின்எழும்புகளான ஜபமாலைகளையும்உபயோகிக்கிறார்கள். அமானுஷ்ய சக்திவிரும்புகிறவர்களுக்கு மனித அல்லதுவிலங்குகளின் எழும்புகளைஉபயோகிப்பார்கள். ஜபிக்கும் மந்திரத்தைப்பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும்அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54மணிகளைக் கொண்டதாகும். ஒருவர்உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத்தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்டமந்திரத்தையே ஒரு மாலையின் மூலம்ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம்வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.

ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறைஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாகஉயிருள்ளதாக ஆகிவிடுகிறது. ஜபம் செய்தமந்திரத்தை 10ல் ஒரு பங்கு யாகமாகவும்,அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்டமந்திரம் முழு பலத்தை பெற்று விடும். நல்லஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தைசரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும்அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறதுஎன்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.இறைவனைப் பற்றி நினைக்கவிரும்பாதவர்கள் இருக்கும் இடங்கள், எங்குபுனிதமான மனிதர்கள்கௌரவிக்கப்படுவதில்லையோ, எந்தஇடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளியவாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாகஇருக்கிறார்களோ, அந்த இடங்கள் ஜபம்பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவைபிரதிகூலமான பலனை தருபவை.தினந்தோரும் நாம் குறிப்பிட்டநேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும்.அப்படி செய்து வந்தோமானால் நம்மனதிலும் அந்த நேரங்களில் ஜபம்செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும்ஏற்படுகின்றன. நமது மனதுக்கும்,உடலுக்குமிடையே ஒரு சரியான நல்லஇணைப்பு ஏற்படுகிறது. அது எதுபோன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒருகுறிப்பிட்ட நேரத்திலேயே உணவுஉட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம்வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவேதோன்றுகிறதல்லவா?

ஒரு குறிப்பிட்டநேரத்தில் நாம் தூங்கச்செல்கிறோமென்றால், அந்த நேரம்வந்தவுடன் நமக்குத் தூக்கமும்வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான்நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம்செய்வதென்பதுமாகும். அந்த நேரம்வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்யநம்மைத் தூண்டும். இவ்விதம் குறிப்பிட்டநேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால்நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்துவலுப்பெற்று  நாம் நல்ல ஆன்மீகமுன்னேற்றமும் காண முடிகிறது.விடியற்காலை, நண்பகல், மாலைசந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம்செய்வதற்குரிய மிகவும் விசேஷமானகாலங்கள். இவற்றைத் தவிர பௌர்ணமி,அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடுகூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜைதினங்கள் மற்றும் கிரஹண காலங்கள்,ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும்சிறந்தவையாகும். உச்சரிப்பு புனிதமந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்படவேண்டும். ஒரு எழுத்து மாறினாலும் அல்லதுத்வனியில் சத்தம் ஏற்றம்,குறைவுஇருந்தாலும் பிரதினுகூலம் எதிர்மறைபலன்கள் தந்துவிடும். நாம் ஜபம்செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா,நினைவு முழுவதும் ஆகிய மூன்றும்ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம்செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில்ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவைஇரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மாநினைவு முழுவதும் அதில் விருப்பமில்லாமல்ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும்இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின்ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதைநாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனிதமந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள்நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்தநிலையை நமக்குள் தோற்றுவிக்கும்.வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்பநிலை நமக்கு கிடைக்கும். அதும் நீ அர்ச்சகராக இருப்பதால் இந்த ஜபம் விரைவில் பலன் தரும். தவறு செய்வது மனித இயல்பு ஆனால் இந்த தவறு நடந்ததால்தான் உன் குடும்பம் இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றது. என்று சொன்ன முருகப்பெருமான் மேலும் பல உபதேசங்களைத் தொடர்ந்தார். ருத்திராட்சம் என்பன தெய்வத்தன்மையும்,மருத்துவக் குணங்களும் ஒருங்கேகொண்டவை. ருத்திராட்ச மணிகளைத்தரிப்பதால் உடம்பிற்கும் உள்ளத்திற்கும்உயிருக்கும் பல நன்மைகள்விளைவிக்கின்றன. ருத்திராட்ச மணிகள்உடலுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும்தருகின்றன. உடம்பில் வாதம், பித்தம், கபம்என்ற மூன்றும் ஒன்றையொன்று முந்தாமல்ஒரே சீராக வைத்திருக்க ருத்திராட்ச மணிகள்துணை செய்கின்றன. தீய சக்திகள்உடம்பைத் தீண்டாமல் கவசமாக நின்றுருத்திராட்ச மணிகள் காக்கின்றன. உடம்பில்நோய்கள் வராமல் தடுக்கின்றன. இதைஅணிவதால் உள்ளம் அமைதியடைவதோடு,பக்குவமடைகிறது. உள்ளத்தில் பக்திஉணர்வுகள் பெருகின்றன. தீய எண்ணங்கள்தோன்றுவதில்லை. அனைத்துக்கும் மேலாகருத்திராட்சம் தரித்தவர் சிவபக்தர் என்றபெருமிதக் களிப்பை உள்ளம் அடைகிறது.மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியைருத்திராட்ச மணிகள் இயல்பாகக்கொண்டிருக்கின்றன. எனவே மந்திரங்களைஉச்சரிக்கும் போதும், பக்திப் பாடல்களைப்பாராயணம் செய்யும் போதும், அவற்றின்முழுப்பலன்களை உடலும், உள்ளமும் உயிரும்பெறுவதற்கு ருத்திராட்சத்தின் துணைஅவசியம் தேவைப்படுகிறது. சிவாலயவழிபாட்டின் போது ருத்திராட்ச மணிகளைஅணிந்து வரும் அடியவர்கள், சிறப்பாகச்சிவதரிசனம் செய்ய நந்தியும்சண்டிகேஷ்வரரும் உதவி புரிகிறார்கள்.ஆயிரம் ருத்திராட்ச மணிகளை அணிந்துவருபவரைப் பார்த்து இவர் சிவனே என்றுதேவர்கள் பணிகிறார்கள் என்று இவற்றின்மேன்மையைப்  பிரமோத்தர காண்டாம்என்றும் நூல் கூறுகிறது. ஐந்து முகருத்ராக்ஷத்தை மட்டுமே கிரஹஸ்தர்கள் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள்பயன்படுத்தலாம். ஏக முகி எனஅழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம்சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும்.பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும்விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.நான்கு முக ருத்ராக்ஷத்தைபயன்படுத்தினால் கலை நயம், சங்கீதஞானம் போன்ற கலையாற்றல் வளரும்.குழந்தை பிறப்பு இல்லாமல்சிரமப்படுபவர்களுக்கு நான்கு முகருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடைநீங்க வாய்ப்பு உண்டு. துடிப்பு இல்லாமல்சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டுவயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக(ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனைஅளிக்கும். மணவாழ்க்கையில் வாழ்க்கைத்துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரிசங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால்மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதைவிட மணிமாலையாக அணிவது நல்லது.பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறுவகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமதுபஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட108 மணிகள் கொண்ட ஐந்துமுகருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்துமேம்பாட்டையும் பெறலாம். இத்தகைய அரிய அபூர்வ விளக்கங்களைக் கூறிய முருகப்பெருமான் அவருக்கு ஒரு பரிகாரமும் உரைத்தார். அதுதான் அடுத்த ஆச்சரியம். அருணகிரிநாதருக்கு ஜப மாலை ஒன்றை திருவாவினன்குடி எனும் தலத்தில் முருகப்பெருமான் கொடுத்ததாக அருணகிரிநாத சுவாமிகளே ஜப மாலை தந்த சற்குருநாதா திருஆவினன்குடி பெருமாளே என்று திருப்புகழில் பாடி இருகின்றார். ஜப மாலைக்கு செய்த குற்றத்திற்காக நீ மூன்று முறை திருஆவினன்குடி சென்று என்னை வணங்கி வா அது முதல் உனது வாழ்வு முன்னேற்றம் காணத்துவங்கும். வீடு கட்டும் யோகம் வரும். உன் மனைவிக்கு இருக்கும் நோய் நீங்கும். உனது கடன் நீங்க வழி பிறக்கும். எனவே இந்த ஆலய வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு வாழ்வில் வளம்பெறுமாறு ஆசி கூறி முருகப்பெருமான் ஜீவ நாடியில் இருந்து விடைபெற்றார். திருவாவினன்குடி  முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.  சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. பழனி மலைஅடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில்அமைந்துள்ளது திருவாவினன்குடி. இது தனிஊராக விளங்கிய திருத்தலம்.அருணகிரிநாதர் "ஆவினன்குடிப் பெருமான்''என்றும் "ஜபமாலை தந்த சற்குருநாதன்''என்றும் போற்றும் குழந்தை வேலாயுதசுவாமிஇங்குதான் எழுந்தருளியுள்ளார். இந்தத்திருவாவினன்குடி ஒரு காலத்தில் அடர்ந்தநெல்லிவனமாக இருந்தது. இந்தநெல்லிவனத்தில் யாரெல்லாம் தவம்செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒருகாரணத்துக்காக மஹாவிஷ்ணுவால்புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீமஹாலட்சுமி,அவருடன் பூமாதேவி, விஸ்வாமித்திரர்,படையையே வென்றுவிட்டேன் என்றஅகங்காரத்தால் தனது வலிமையை இழந்தகாமதேனுப் பசு, உயிர்கள் அனைத்தும்தன்னால்தான் வாழ்கின்றன என்றுகர்வப்பட்டு அதனால் சிவனின் சாபத்திற்குஆளான சூரியன், தட்சனது யாகத்தில் கலந்துகொண்ட காரணத்திற்காக ஸ்ரீவீரபத்திரமூர்த்தியால் தண்டிக்கப்பட்ட அக்னி -இவர்கள் எல்லோரும் இங்கு சாபவிமோசனம் பெற தவ வாழ்வுமேற்கொண்டிருக்கிறார்கள்! இங்குள்ளகுழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்டுவரம்பெற்று சாப விமோசனமும்அடைந்ததால் இப்பகுதியின் பெயர் "திரு ஆஇனன் குடி' என்று ஆனது. திரு -மகாலட்சுமி,ஆ- காமதேனுப் பசு, இனன் - சூரியன், கு -பூமாதேவி, டி - அக்னி என இத்தலத்திற்குப்பெயர் தந்த ஐந்து தேவர்களின்திருவுருவங்கள் இக்கோயில்உட்பிரகாரத்தின் தெற்கு, தென்மேற்கு மூலப்பகுதியில் உள்ளன.

இப்படி மகிமை வாயந்த திருத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபாடுன் செய்யச் சொல்லி இருகின்றார். இப்படியெல்லாம் நடக்குமா என்ற எண்ணம் வருவது இயற்கையே. எந்த ஒன்றையும் நமது அனுபவத்தில் பார்ர்க்கும்போதுதான் உண்மை எது பொய் எது என்று உணர முடியும். இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்கின்றேன் ஜீவ நாடி கேட்க முடியவில்லை என்று பலர் சொல்கின்றார்கள். முருகன் பார்வை உங்கள் மீது எப்போது விழ வேண்டும் எனும் விதியமைப்பு வரும்போதுதான் உங்களுக்கு ஜீவ நாடி கேட்டுக்கொள்ள சாத்தியமாகின்றது. அடுத்து நாம் என்ன மன நிலையில் வந்து ஜீவ நாடி கேட்க அமருகின்றோமோ அதற்கு தகுந்தவாறுதான் முருகன் வாக்குரைக்குன்றார். யாருக்கு 100% நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கே 100% துல்லியமாக ஜீவ நாடியில் வாக்கு வருகின்றது. சிறிதளவு நம்பிக்கை இருப்பவர்களுக்கு சிறிதளவே பலனும் பலிதமும் வருகின்றது என்பது எனது 20 ஆண்டுகால அனுபவம். அதேபோல் ஒருவருக்கு வருவது போல் மற்றவருக்கு வருவதிலை ஒருவருக்கு சுமார் 1 மணி நேரமும் அதற்கு மேலும் கூட ஜீவ நாடியில் வாக்கு வருகின்றது. ஒரு சிலருக்கு சுமார் 5 நிமிடம் வாக்கு வருவதே பெரிய விசயம். எனக்கு ஜோதிடம் தெரிந்தாலும் நான் பலன் உரைப்பதில்லை. முருகப்பெருமான் என்ன உரைகின்றாரோ அதை மட்டுமே உரைப்பது எமது பணி. நமக்கு ஜோதிடம் தெரியும் என்பதற்காக முருகன் வாக்கை விளக்க முற்படுவதில்லை. காரணம் முருகன் என்ன நோக்கத்தில் உரைக்கின்றார் என்பதை அறிவது கடினம்.

03November2017 பவுர்ணமி பூசை, அகத்தியர் குடில், பொகளுர்

வரும் வெள்ளிக்கிழமை 03நவம்பர்2017 காலை , 9 மணி அளவில், பொகளூரில் அமைந்துள்ள அகத்தியர் சீவ நாடி குடிலில், சிறப்பான முறையில் சித்தர் யாகம், அகத்தியருக்கு பல வகை அபிஷேகம், அன்னதானம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, செய்யப்படும். இறை சித்தர் அய்யா, பொது நாடி பலன்களை கூட கேட்க சம்மதித்து உள்ளார்.

அனைவரும், சிரமம் பார்க்காமல், வந்து கலந்திருந்தது, இறை அருளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பூசைக்கு தேவையான, சூடம் பத்தி சாம்பிராணி, பூ, மாலை, சந்தனம், குங்குமம் போன்ற அபிஷேக பொருட்கள், அன்னதானம் செய்ய அரிசி, பருப்பு, போன்றவைகளை, முடிந்தவர்கள் தானம் கொடுத்து புண்ணியம் சேர்த்து கொள்ளலாம்.

முகவரி :

 அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583.
Google  வரைபடம், கீழே

Dropped pin

https://goo.gl/maps/oiZ1qXYV5Sm


Monday, 30 October 2017

அகத்தியர் பாடல் விளக்கம் - உயிரும் உடலும்

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583




அகத்தியர் ஆயுள் வேதம்

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்
- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.
முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்

பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.
- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.
இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

அகத்தியர் நல்வாக்கு, கோவிலில் தீபமேற்றும் முறை

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583




கோவிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை ஆனாலும், ஒவ்வொரு மனிதனின், அன்றாட கலிகால வாழ்க்கையில், நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும், சூழலும், இட வசதியும் இருந்தால், எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும்பொழுது, "பஞ்சாட்சரம்" ஓதித்தான் அதைக் கையில் வாங்கி கொள்ள வேண்டும்.

அகத்தியர் நல் வாக்கு - பிரார்த்தனை

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583


விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அகுதொப்ப விதி, மதி என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்துவிடு. அதே உன்னை காலா காலம் காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் பார்த்து, பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத்தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான், மனோபலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. மனோபலத்தை உறுதி செய்யவும், வளர்த்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். அகுதொப்பத்தான், பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. அவற்றை கண்டு மனம் தளராது, எதிர்த்து, இறையருளோடு போராடினால், இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். அகுதொப்ப இயன்ற பிரார்த்தனைகளை, தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிக

சித்தர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய, அருள் வாக்கோ, ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும், மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான், அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ, எமது வகை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டிவிடாது. விதி, முதலில் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்றுதான் திசை திருப்பவேண்டும். விதி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவ, புண்ணிய அளவை வைத்து, நடப்பு பிறவியிலே அதற்கு ஏற்றவாறு தாய், தந்தை உறவினர், நட்பு, பணி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதில், விரும்பக்கூடியதை, மனிதன், ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை. என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள், தர்மங்கள் செய்துதான் பிரச்சினைகளில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வர வேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு, வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனின் கர்மா, பாவங்கள், தனித்தனியான அளவீடுகளை கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும், வாக்கை அறிவதும், அறிந்த பிறகு ஆதி பிழறாமல் செய்தும், எவ்வித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலருண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை, புரிந்து கொள்ளவேண்டும். மனச்சோர்வு கொள்ளாமல், மீண்டும், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ, துன்பமும் ஒரு மாயைதான். ஆக, இவ்விரண்டையும் தாங்கக்கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத்தான், "ஞானநிலை" என்று பெயர். அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்று யாங்கள் எதிர் பார்க்கிறோம்.

கொங்கண சித்தர்

கொங்கணர் சித்தர்

கேரளாவில் கொங்கண தேசத்தில் சித்திரைமாத உத்தர நட்சத்திரத்தில் புளியர் குடியில் கொங்கனர் பிறந்தார். கொங்கணரின் குரு போகர். சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறை மந்திரங்களை போகர் சொல்லித்தந்தார். போகரை வணங்கிவிட்டு மலை உச்சியில் அமர்ந்து அம்பிகை மந்திரங்களைச் சொல்லித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது மனதிற்குள் தோன்றியவாறு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான யாகத்தை செய்ய ஆரம்பித்தார். கௌதமர் அவர்முன் தோன்றி கொங்கணரே தவம் செய்துதான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விட்டு தவம் செய் என்றார்.
தில்லை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகம் செய்து சித்திகள் கிடைக்க அதன்மூலம் நிறைய குளிகைகள் உண்டாக்கினார். திருமழிசை ஆழ்வாரிடம் செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றைக் கொடுத்து ‘இது காணி கோடியை போதிக்கும்’ என்றார். ஆழ்வார் தம் உடம்பின் அழுக்கை திரட்டி ‘இரசவாதக் குளிகை இது காணியை கோடியாக்கும்” என்றார். இருவரும் நட்பு கொண்டனர்.
கொங்கணர் கடுந்தவம் செய்தார். இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தை செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். பிச்சை எடுத்த உணவையே உண்டார். தவம் செய்யும் போது ஒருநாள்மரத்தின் மேலிருந்த கொக்கு இவர் மேல் எச்சத்தை இட்டது. இவரதைப் பார்க்க அது எரிந்து சாம்பலாகியது. தன் சக்தியை நினைத்து பெருமை கொண்டார்.
திருவள்ளுவர் வீட்டில் பிச்சைகேட்டு வந்தார். வாசுகி அம்மையார் உணவு படைத்துக் கொண்டிருந்ததால் உடன் வந்து பிச்சையிட முடியவில்லை. சினங்கொண்டு இவ்வளவு நேரம் காக்கவைத்தாயன்றோ என விழித்து நோக்கினார். ஒன்றும் ஆகவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்க்க வாசுகி அம்மை நகைத்து ‘கொக்கென நினைத்தாயோ கொங்கணவா’’ என்றார். தான் காட்டில் செய்தது இவருக்கு எப்படித்தெரியும் என வியந்து அவர் கற்பின் மகிமையை வணங்கினார்.
அங்கிருந்து கிளம்பி பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் வீட்டிற்குச் செல்ல அவன் வந்து வணங்கி, சுவாமி, வாசுகி அம்மையார் நலமா என்றான். கொங்கணருக்கு மேலும் வியப்பு. நான் அங்கிருந்துதான் வருகின்றேன் என்று உனக்கு எப்படித் தெரியும் என்றார். சுவாமி நான் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து செயல்படுவதால் எங்களுக்கு ஏதோ சக்தி இருக்கின்றது என்றான். கொங்கணர் அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியன மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாகும் என அறிந்தார்.
போகரை சந்திக்க செல்லும் வழியில் பல சித்தர்களை சந்தித்தார். பின் குரு போகரை அணுகி ஆசி பெற்றார். அவர் திருமாளிகைத்தேவர் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ. உனக்கு அமைதி கிடைக்கும் என்றார். கொங்கணரை எதிர் கொண்டழைத்த திருமாளிகைத்தேவர் அவருக்கு சில ரகசியமான சாதக முறைகளை உபதேசித்து சமய தீட்சை, நிர்வாண தீட்சை முதலியன உபதேசித்தார்.
கொங்காணர் திருவேங்கடமலை சென்று தவம் செய்தார். அங்கு வலவேந்திரன் என்ற சிற்றரசன் கொங்கணரின் சீடரானான். திருவேங்கடமலையில் சமாதியடைந்தார்.
கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
கொங்கணசித்தர் தியானப்பூசைக்கு
“கொக்கை எரித்த கொங்கணரே அம்பிகை உபாசகரே
ஸ்ரீகௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதம் புரிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்,”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், சாமந்தி, அரளி ஆகிய மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அம்பிகைப் பிரியவரே போற்றி
அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி
கம்பீரமான தோற்றம் உடையவரே போற்றி
கருணா மூர்த்தியே போற்றி
காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி
குலம் விளங்கச் செய்பவரே போற்றி
கொங்கு தேசத்து இரசவாத சித்தரே போற்றி
செல்வங்களைத் தருபவரே போற்றி
தீய கனவுகளிலிருந்து காப்பவரே போற்றி
நோய்களை அழிப்பவரே போற்றி
மாயையை அகற்றுபவரே போற்றி
வறுமையை அழிப்பவரே போற்றி
நிவேதனமாக பழம், கல்கண்டு, தயிர்சாதம் இவற்றுடன் மஞ்சள் அல்லது சிகப்பு வஸ்திரம் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திற தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல் புகை பிடித்தல் குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும். உறவினர்களின் பலம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகமாகும். சகவாச தோஷம் நீங்கும். மன வளர்ச்சி அபிவிருத்தி அடையும்.
“ஓம் ஸ்ரீகொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி”
                                         ******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்


அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

Sunday, 29 October 2017

நாயன்மார்கள் விவரம்

ஓம் நமச்சிவாய. 63 நாயன்மார்கள் வரலாறு - முற்றுரை!

நாயன்மார் வரலாற்று சுருக்கம்!

1. திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்சை:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

* நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மாரின் பட்டியல்

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

* பக்தியே பிரதானம்:

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார்,
ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.

ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்; நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

முற்றும்.ஓம் நமச்சிவாய.!
நற்றுணையவது நமசிவாயவே.!!


திருவனந்தபுரம் ஆராட்டு விழா



Jai Sri Ananthapadmanaba Swami !

28/10/2017, Saturday

*News:*
No flights landed at or had taken off from Thiruvananthapuram Airport on 28/10/2017, Saturday from 4pm to 9pm !

*Reason :*

Once in Six months Lord Sri Ananthapadmanaba Swamy used to come out of His temple along with Sri Narasimma, Sri Krishna and with some other temple deities to take a holy dip in Shankumukham Beach.

So He used to pass through the Thiruvananthapuram Airport.

After taking holy bath with devotees, He used to return through the same Runway.

Till that time all the flights will be cancelled from Thiruvananthapuram Domestic and international airport !

*When :*

During Aippasi (Oct - Nov) & Panguni (Mar - Apr ).

So once in six months and twice in a year it happens.

*Wonder :*

In the whole world Thiruvananthapuram Airport is the one and only the airport which has been closing for Lord's procession !

In the whole world Lord Ananthapadmanaba Swamy is the only one Deity passing through the runway of an Airport.

Lord Ananthapadmanaba Swamy used to take a rest in a granite Mandapa inside the airport premises.

This once again proving that Kerala is "God's own country

Jai Ho Sri Ananthapadmanaba Swamy


அகத்தியர் சொன்ன திருமகள் துதி

அகத்தியர் சொன்ன திருமகள் துதி

கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுவதும் படித்து பயனடையுங்கள் 1564 முதல் 1604 ம் ஆண்டு வரை தென் பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டதாக தெரிகிறது.
இப்பாடல்களை தினந்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை அடைந்து அச்செல்வத்தை நல்ல முறையில் துய்ப்பர். அதனால் விளையும் பயனையும் துய்ப்பர். இப்பாடலானது வீட்டிலே இருந்தாலே செல்வம் கொழிக்கும். இது அனுபவப்பூர்வமான உண்மை. மேலும் அன்னை திருமகளே அறுதியிட்டு கூறியிருக்கிறாள். ஆகவே அடியவர்கள்
இந்த பாடலை கண்ணென போற்றி பாதுகாக்கக் வேண்டும்.
இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பாடலை தனியாக பிரிண்ட் அவுட் எடுத்து, அதை லேமினேட் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து வணங்கி வாருங்கள்.
உங்கள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
ஒரு ஊரில் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பிரார்த்தனை செய்ய ஊரே திரண்டு நின்றபோது ஒரு சிறுமி மட்டும் கையில் குடையோடு வந்தாளாம்.
“ஏன்?” என்று கேட்டதற்கு, “சாமிகிட்டே மழை வேணும்னு பூஜை பண்றோம். அப்ப மழை வந்துட்டா, நனைஞ்சுட மாட்டோமா? அதான்!’ என்று அந்தச் சிறுமி சொன்னாளாம். சிறுமியின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டி இறைவன் மழை பொழிவித்தானாம்.
அந்தச் சிறுமியின் நம்பிக்கை போல உங்கள் நம்பிக்கை இருக்கவேண்டும். பிறகென்ன…? அருள்மழை நிச்சயம்!
சிறப்பு மிக்க அந்த பாடல் வருமாறு :
அகத்திய மாமுனி இயற்றிய திருமகள் துதி!
1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்
பொருள் : மூன்று உலகங்களுக்கும் துன்பத்தைச்செய்த வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்.
2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்…
பொருள் : “வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே! எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும் தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!”
3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள் அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..
பொருள் : “திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே! தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!” என்று வணக்கம் செய்யலானான்.
4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ…..
பொருள் : இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?
5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்….
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே…..
பொருள் : அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!
6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா…..
பொருள் : செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!
7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
“நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவன் மருவல் செய்யாள்….”
பொருள் : என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) “நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் கெடாத பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் வறுமையைக் கொடுக்கின்ற மூதேவி அவ்விடத்தில் பொருந்துதலைச் செய்யமாட்டாள்”.

பண்ருட்டி சீவ சமாதி - தகவல்

பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.

கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்றுவருகிறது. திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது. அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்துவருகின்றனர். இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது: இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பெருமைக்குரியதாககும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது.

ராம நாமம் பற்றி அகத்தியர்

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

ராம நாமம் ஜெபித்தார்கள், சம்பாதிக்கு சிறகு முளைத்தது, என்றெல்லாம் படிக்கும் பொழுது, இது சாத்தியமா என்று கேட்கத் தோன்றும். அப்படியானால், ஒரு பறவையை பிடித்து, சிறகுகளை அரிந்துவிட்டு, ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால், ராம நாமம் சக்தியுடையது. சிறகென்ன, கரங்கள், கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால், ராம நாமத்தை சொல்கிறவர்கள், பக்குவமடைந்து, ஆத்ம சுத்தியோடு, பற்றற்ற தன்மையோடு, பல காலம் ராம நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, ஸித்தி பெற்று இருந்தால், உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும், வழிபாடுகளும் ஒன்றுதானப்பா. அதை கையாளும் மனிதனை பொறுத்துதான், உடனடி முடிவும், தாமதமான முடிவும். எனவே, விளைவு எப்படி இருந்தாலும் பாதகமில்லை என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்யச் செய்ய, பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும். 

திருச்சூர் வடக்குநாதர் கோவில் வழிபாட்டு முறை


தென் கைலாயம்" திருச்சூர் கேரளாவில் தோன்றிய முதல் கோயில் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்தான். வடக்குநாதர் என்பது விடைகுன்றுநாதர் என்ற தமிழ்ப்பெயரிலிருந்து மருவியது என்று சொன்னது வியப்பாயிருந்தது. அக்கோயில் விடைபோன்றதொரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது.
திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்" என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்" என அழைக்கிறார்கள்.
திருக்கோயிலின் முகப்பில் உள்ள ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரத்தை 7 முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் கழுவி திருக்கோயிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில்குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும்..
வடக்கே உள்ள சிவபகவானை வேண்டி விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை 3 தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும்.
எந்தக்கோவிலிலும் முதலில் தரிசனம் செய்யும் கணபதியிடம் போகாமல் முதல் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்க வேண்டும்..
மூலவரையும் பிரதட்சிணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்று சென்று விட்டு பின்திரும்பி வர வேண்டும்.
கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்க வேண்டும்.
திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசித்து திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் ஆதிசங்கரரின் அதிஷ்டானம் அடைந்து வழிபடலாம்.
சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும். வடக்கு நாதரின் கர்ப்பக்கிரகம் வட்ட வடிவில் அமைந்திருக்கிறது. கிழ்க்குமுகமாக பார்வதி தேவி சன்னதியும் மேற்குமுகமாக வடக்கு நாதர் சன்னதி அமைந்துள்ளது.  இங்கு மின் விளக்கு ஏற்றப்படாமல் பல எண்ணைவிளக்குகள் ஏற்றப்பட்டு, அதன் புனித ஒளியில் இறைவனைத் தரிசிக்கிறோம்.
மணம் மிக்க சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அர்ச்சுனன் பாசுபதம் பெற்ற பின் சிவ பெருமானைத் தரிசிக்க கயிலை சென்ற பொழுது சிவனைக் காணாமல் இந்த வடக்கு நாதர் கோவிலுக்கு வந்து சுற்றிவரும்போது பரசுராமர் கோவிலைக்கண்டு, ஷத்திரியன் ஆன தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணி, தன் அம்பை ஊன்றி வெளிப்பககமாகக் குதித்துவிட்டான்.
அவன் அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு சுனை உண்டாகி சுனை வில்குழி தீர்த்தம் எனப்படுகிறது.
[Gal1] கோயிலை சுற்றி தேக்கு மரக்காடு அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுக்க்வே இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது.  சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டதால் தான் அதன் பிறகு கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை என்பது மக்கள் நம்பிக்கை..
சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது.  இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது. பிரகாரத்தில் இருக்கும் கூத்தம்பலத்தில் ஆயிரம்பேர் வரை அமரலாம். ஆளுயரக் குத்து விளக்கு ஏற்றப்பட்டு விடியவிடிய எரிந்து கொண்டிருக்கும்.
மேற்கு திசையில் கோபுரத்திற்கு அருகில் இருக்கும் சதுர வடிவ கல்லின் பெயர் கலிக்கல். அதை நான்கு புறமும் மேடைகட்டி காத்து வருகிறார்கள். கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் சிறிது எறிந்து கலி முற்ற முற்ற இந்தக்கல், கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடாமல் தடுக்கிறார்கள் என்பது ஐதீகம்.
ஆதிசங்கரரின் அதிஷ்டான இடமும் அதற்கான் ஆலயமும் இருக்கும் இடத்திற்கு சங்கு சக்கரம் என்று பெயர். அனுமன் சஞ்சீவிமலையை எடுத்துவரும்போது சில மூலிகைகள் வெளிப்பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம்.
இந்த இடத்திலிருந்து சிறு புல்லாவது பிடுங்கி கொண்டு போய் பத்திரப் படுத்துகிறார்கள். ஒரு மேடையின் மேல் இருக்கும் பெயர் தெரியாத பல சிலைகளைப் பூதங்கள் என்கிறார்கள்.
ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி "வடக்குநாதர்" என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.
வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். இதை "தென் கைலாயம்" என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்து பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் .
பரசுராம ஷேத்திரமாகத் திகழ்கிறது.
பரசுராமர் பிதுர் வாக்கியப் பரிபாலனத்திற்காக பல ஷத்திரியர்களைக் கொன்ற பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய பல சிவாலயங்களை எழுப்ப எண்ணம் கொண்டு சமுத்திர ராஜனிடம் விண்ணப்பித்து, ஹோம அகப்பையை வீசி எறிந்த இடம் வரை சமுத்திரம் பின்வாங்கி நிலம் அளித்தது.
வடக்கு நாதரை கொஞ்சம் மேடான இடத்திற்குக் கொண்டு செல்ல ஆவல் கொண்டு நிலத்தைக் குன்று போல் உயர்த்தினாராம்.
கோவில் தயாராவதற்குள் பார்வதியுடன் பரமேஸ்வரன் வந்து நின்றுவிட்டார். உள்ளே வேலை நிலவரத்தைப் பார்க்க அனுப்பிய சிவ கணமான சிம்மோதரன் இடத்தைப்பார்த்துவிட்டு அங்கேயே அமர, காத்து நின்ற சிவபிரான் உள்ளே சென்று கோபத்தினால் காலால் எட்டி உதைத்த இடத்தில் சிம்மோதரனுக்குக் கோவில் இருக்கிறது.  பரமேஸ்வரன் அங்கிருந்த ஸ்தம்பத்தில் ஜோதி வடிவமாக ஐக்கியமான இடமே வடக்கு நாதர் மூலஸ்தானம்.
இவரது கோபத்தைத் தணிக்கவே நெய்யினாலேயே அபிஷேகம் செய்கிறார்கள். சலவைக்கல் போல் காணப்படும் லிங்கம் எத்தன டிகிரி வெப்பமானாலும் உருகுவதில்லை.
வட குன்று நாதர் என்ற பெயர் மறுவி வடக்கு நாதர் ஆயிற்று.லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை.
மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.
இரவு பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும். வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத சக்தி படைத்த ஆலயம் !
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது.
எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
நெய் கட்டியாக உறைந்து வரும்.
கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
பூச்சிகள் மூலவரை தாக்காது.
மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய தன்வந்திரி பகவான் நெய் தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்த சிறிது நேரத்திலேயே உருக ஆரம்பித்துவிடும் வெண்ணையும் நெய்யும் மகத்துவம் மிக்க திருச்சூர் வடக்கு நாதர் கோவிலின் கடும் வெய்யில் காலங்களிலும் கூட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யாப்பட்ட பிறகு உருகாமல் நிலைத்து இருக்கிறது.
இத்தலத்தில் உள்ள வியாசமலை-யில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள் ஹரி ஸ்ரீகணபதியே நமஹ என்று தனது கைகளால் கற்சிலை - வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல).
அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம்.உலகம் உய்ய அவதரித்த மகான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார். Trichur Elephant March, Kerala தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு மார்ச் மாதம் நடைபெறும்.  இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்புரம் .
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், "யானையூட்டு விழா'வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யானைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்வார்கள்.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் தேதியன்று யானையூட்டு விழா நடந்து வருகிறது.
அதிகாலை 4 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி , யானைகள் பங்கேற்கும் கஜபூஜை நடைபெறும். கஜபூஜையுடன் , தெற்கு கோபுரவாசல் முன் யானைகள் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
சித்திரை முதல் நாள் விஷூக்கனி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அகத்தியர் வழிப்பட்ட காமேஸ்வரர் கோயில்

அகத்தியர் வழிப்பட்ட காமேஸ்வரர் கோயில்
(வேளாங்கண்ணி அருகில்) சகஸ்ரநாமம் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர்(காமதேனீஸ்வரர்) ஆலயம்
பெயர் பெயர்: அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர்(காமதேனீஸ்வரர்) ஆலயம் அமைவிடம் ஊர்: காமேஸ்வரம் (நாகை - வேதாரண்யம் சாலையில், வேளாங்கண்ணி யிலிருந்து 8 கி.மி) மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம்(திருப்பூண்டி கிழக்கு) அஞ்சல் கீழ்வேளுர் வட்டம் மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: ஸ்ரீ காமேஸ்வரர், ஸ்ரீகாமதேனீஸ்வரர் தாயார்: ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீகாமாட்சி தல விருட்சம்: கொன்றை மற்றும் வில்வம் தீர்த்தம்: சந்திரநதி(அந்தரியாமியாக உள்ளது), வங்கக்கடல் - சந்திரநதி முழுக்குத்துறை, திருக்குளம், கீரனேரி தீர்த்தவாரி. சிறப்பு திருவிழாக்கள்: சிவராத்திரி, சூரிய பூஜை(பங்குனி 16 முதல் 23 முடிய), பிரதோஷங்கள், மற்ற உற்சவங்கள் அனைத்தும் பாடல் பாடல் வகை: சகஸ்ரநாமம் பாடியவர்கள்: அகத்திய முனிவர்(ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்) கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை வரலாறு கட்டப்பட்ட நாள்: கி.மு.235-கி.பி.220 அமைத்தவர்: (கடைச்சங்க காலச் சோழ மன்னர்) கலைஞான கல்வியும் நிறைவான வயதும்நல் கருத்துளோர் அன்பு நட்பும் களிப்பூட்டும் வளமையும் இனிப்பூட்டும் இளமையும் கருதுநல மான உடலும் நிலையான மனமும் அன்பான மனைவியும்(கணவரும்) நேரிய சந்தானமும் நீர்மையுறு கீர்த்தியும் சீர்மையுறு வார்த்தையும் நிம்மதி கொடுக்கும் கொடையும் மலைபோலும் நிதியமும் உனதன்பர் செங்கோலும் உவப்பான நல்ல வாழ்வும் மலரும்நின் பாதத்தில் பேரன்பும் ஈந்துதவி மாத்தொண்டர் கூட்டும் தாராய்! கலைஞானக் கண்ணனின் கனிவான தங்கையே காமேசு வரத்தின் வாழ்வே! காமேசு வரரது இடப்பாகம் நிலைபெற்ற காமாட்சி அன்னை உமையே!! -- கவிஞர் கோவி. குப்புசாமி,காமேஸ்வரம் ” காமேஸ்வரமாகிய இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறந்த ஊர். சந்திரநதி கடலொடு சங்கமிக்கும் புனித தலம்.
அரிச்சந்திரன் ஸ்தாபித்தல் தொகு இராமபிரானுக்கு 32ம் பாட்டனான அரிச்சந்திரன் வசிட்டர், விஸ்வாமித்திரர் ஆகிய பிரம ரிஷிகளின் அறவுரைகளின்படி இங்கு வந்து கடல்நீராடி சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்டுத் தான் புலைத்தொழில் செய்த பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
விநாயகர் அவதரித்தல் தொகு விநாயகரின் தோற்றம் பற்றிய புராணச் செய்திகளில் கீழ்கண்ட வரலாறும் ஒன்று. சிவபிரான் நெற்றிக்கண் பட்டு மன்மதன் எரியும் போது அவன் உடம்பிலிருந்து பண்டாசுரன் தோன்றுகிறான். அவன் அட்டகாசம் தாங்க முடியாத தேவர்கள் இறைவியிடம் முறையிட, அம்பிகை லலிதாம்பிகையாக மாறி அவனை அழிக்க முயல்கின்றாள். பண்டாசுரன் தனக்குக் கவசமாக விக்னயந்திரத்தை வைத்திருந்ததால் அழிக்க முடியவில்லை. அன்னை இங்கு வந்து தன் பர்த்தாவான ஸ்ரீகாமேஸ்வரரை அன்புடன் பார்த்தார். அத்திருநோக்கால் வினாயகர் தோன்றி விக்னயந்திரத்தை அழித்து அன்னையின் பேரன்புக்குப் பாத்திரமானார். இதனை அகத்திய மாமுனிவர் தனது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில்  காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேச்வரா” (77ஆம் திருநாமம்) என்றும் மஹாகணேச நிர்பின்ன விக்னயந்திரப்ரஹர்ஷசிதா”(78ஆம் திருநாமம்) என்றும் அம்பிகையைப் போற்றுவதால் அறியலாம். இதன் மூலம் வினாயகர் இத்தலத்தில்தான் அவதரித்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
காசிக்கு வீசம் பெரியது மகாபாரத யுத்தத்தில் அம்பு பட்டுச் சரப்படுக்கையிலிருந்த பிதாமகர் பீஷ்மர் தன் உயிர் போன பின், தனது அஸ்தியைக் கரைக்கச் சென்றால், இந்தப் பாரத பூமியில் எங்கு அது மலர்களாகத் தோன்றுகிறதோ அங்கே கரையுங்கள். அந்த ஷேத்திரம் காசியை விட மேன்மையான ஊர் என்கிறார். அவரது அஸ்தியைப் பண்டவர்கள் காசி முதற்கொண்டு தேசம் முழுதும் கொண்டு செல்லும் போது,சந்திர நதி கடலில் சங்கமிக்கும் இந்தத் தலத்தில் மலர்களாக மாறியது. எனவே இங்கே கடலில் கரைத்துஇறைவனை மீண்டும் வழிபட்டு, அஸ்தினாபுரம் சென்று முடி சூட்டிக் கொண்டனர். அதனால்தான் காசிக்கு வீசம் (1/16) கூட காமேஸ்வரம் எனப்படுகிறது.
கட்டிடத் தொன்மை தொகு வடநாட்டுச் சாதவாகனர்கள் காலத்தில்(கி.மு.235-கி.பி.220) வைதிக சமயம் புத்துயிர் பெற்றது. அப்போது கடைச்சங்க காலச் சோழ மன்னர்களால் முழுவதும் செங்கற்களால் கலை வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட கோயில். கட்டிட வேலைபாடு மிகவும் தேர்ந்த செங்கல் சிற்பியால் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வளவு காலம் ஆகியும் வேலைபாடுகள் அப்படியே இருப்பது மிக மிக அற்புதம்.
வழிபட்டோர் தொகு
கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்கள் தொகு துர்வாச முனிவரிடமிருந்து கோவில்பத்து என்னும் ஊரில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் தப்பித்த பாண்டவர்கள், பிதுர்கடன் செலுத்த இத்தலத்திற்கு வரும்போது இத்தலத்தில் வாசம் செய்த அமித்திர முனிவரின் உணவான நெல்லிக்காயை(ஆம்லகம்) விழுந்தமாவடியில் பறித்த சாபத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் மறுபடியும் மீண்டு, அம்முனிவரின் ஆசியும் இங்கே பெற்றனர். பின்பு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் ஸ்ரீ காமேஸ்வரரை வணங்கி, கடற்கரையில் தர்ப்பணம் செய்து பிதுர்கடன்செலுத்தியுள்ளனர்.
இராமபிரான்
இராமபிரான் அகத்திய முனிவருடன் வழிபட்ட சதுரேஸ்வரங்கள் இராமேஸ்வரம்,காமேஸ்வரம், தர்ப்பேஸ்வரம்(திருப்புல்லாணி) மற்றும் (திருவாரூர் கேக்கரை) குருவி இராமேஸ்வரம் நான்கினுள் இத்தலமும் ஒன்று. இங்கு அகத்தியர் மறுபடியும் இராமருடன் வந்து ஆலய வழிபாடு செய்துள்ளார். இராமபிரான் லிங்கம் அமைத்து வழிபட்டுத் தர்ப்பணம் செய்துள்ளார். வழிபாடு செய்த இடம் இன்றும் லிங்கத்தடி(இராமன் குட்டை) என்று அழைக்கப்படுகிறது.
மன்மதன்  மன்மதன் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவபெருமான் மீது மலரம்பு எய்தான். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீயால் மன்மதன் எரிந்து போனான். அவனது மனைவி இரதிதேவியின் வேண்டுதலால் மகேஸ்வரன் மீண்டும் காமனை உயிர்ப்பித்தார். காமன் தான் செய்த பாவத்தைப் போக்க வேண்டுகிறான். சிவபெருமான் இத்தலத் திருக்குளத்தில் நீராடித் தன்னை வழிபட்டால் பாவம் நீங்கும் எனக் கூறுகின்றார். அதன்படி காமன் வந்து இங்கு வழிபட்டுத் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டான். காமன் வழிபட்டதால் இறைவன் ஸ்ரீ காமேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். இறைவி ஸ்ரீ காமேஸ்வரி என்றும் ஸ்ரீ காமாட்சி என்றும் பெயர் பெற்றார். ஊரின் பெயரும் காமேஸ்வரம் ஆயிற்று.
காமதேனு  அகத்தியர் இங்கு இறைவனை வழிபட்ட போது தெய்வப்பசு காமதேனுவும் இறைவனை வணங்கி அகத்தியருக்கு உணவு படைத்துள்ளது. காமதேனு வழிபட்டதால் இறைவன் ஸ்ரீ காமதேனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
அகத்தியர்  அகத்தியர் வேதாரண்யம் செல்லும் வழியில் இங்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இயற்றிப் போற்றியுள்ளார். அதில் ‘காமேச்வர’ என்கிற பதம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 5 இடங்களிலும், ஸ்ரீ லலிதா த்ரிசதீ நாமாவளியில் 14 இடங்களிலும் வருகின்றது. காமாட்சி என்கிற பதம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு இடத்திலும், ஸ்ரீ லலிதா த்ரிசதீ நாமாவளியில் ‘காமேச்வரி’ என்கிற பதம் ஒரு இடத்திலும் வருகின்றது.
நக்கீரர்  “ நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என இறைவனுடன் வாதிட்ட நக்கீரர் நெற்றிக்கண்ணால் பாதிக்கப்பட்ட காமன் இங்கு வந்து வழிபட்டுத் தன் பாவம் போக்கியதை அறிந்து கொண்டு,தானும் வணங்கிப் பேரருள் பெற்றார். அதன் காரணமாக இத்தல மக்கள் என்றும் நலம் பெறச் சந்திரநதியின் குறுக்கே தடுப்பணையாக ஏரியை வெட்டி, ஆற்றுநீர் வீணாகக் கடலில் சென்று கலக்காதவாறு தடுத்துப் பயிர்வளம் பெருக உதவிச் சாதனை செய்துள்ளார். ஏரி இன்றும் கீரனேரி என அழைக்கப்படுகிறது. மேலும் தைப்பூசத்தில் சந்திரநதி – கீரனேரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.