Monday, 20 July 2020

மன இறுக்கத்தை (டென்சன்) போக்கும் அருந்தமிழ் பாடல்)

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

1️⃣ *தினமும் ஓர் பாராயண பாடல்*
         (பாடல் எண்-306)

🙏 *(மன இறுக்கத்தை (டென்சன்) போக்கும் அருந்தமிழ் பாடல்)* 🙏

🔅தலம்:- *திருவாவடுதுறை*
🔅இறைவர்:- *மாசிலாமணியீசர்*

       திருச்சிற்றம்பலம்

*"கோதிலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே...*
*பாதிமாதொரு கூறுடை யானே பசுபதி பரமா பரமேட்டி...*
*தீதிலா மலையே திருவருள்சேர் சேவகா திருவாவடு துறையுள்...*
*ஆதியே எனை அஞ்சல் என்றருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே."*
-சுந்தரமூர்த்தி சுவாமிகள்
 - தமிழ்வேதம் - 7.

 *(கோதிலா*- குற்றமில்லாத; *கோலம்* -அழகு தோற்றம்; *கோ*- தலைவர்; *இமையோர்* வானவர்; *பசுபதி* - ஆன்மாக்களின் தலைவர், *பரமா*- மேலானவரே; *ஆதி* = முழுமுதற்பொருள்)

🍁 *பாடலின் விளக்கம்:-*
குற்றமற்ற அமுதம் போன்றவரே, அருள் வடிவமானவரே, தேவர்களின் தலைவரே, உமையை இடப் பாகத்தில் உடையவரே, உயிர்களின் தலைவரே, நன்மைகளைச் செய்கின்ற பரம்பொருளே,
 *தங்களையன்றி வேறு உறவினர் யாருமில்லை. 'அஞ்சேல் என்று சொல்லி எனக்கு அருள் செய்வீராக!*

🍁குறிப்புரை :
 *பாதையில் மேடு பள்ளங்கள் வரும். உலக வாழ்வில் இன்ப துன்பங்கள் வரும். இது உலக இயற்கை.*

🍁 *துன்பங்கள் வரும் பொழுது நாம் துவண்டு விடாமலிருக்க இப்பாடல் பெரிதும் துணை செய்யும்.*

🍁 *மன இறுக்கம் (டென்சன்) வரும் பொழுதெல்லாம் இப்பாடலை வாய்விட்டுப் பாடுங்கள்.*

 🍁 *மறுநாள் ஒரு தெளிவு மனதில் தோன்றும். அந்த வலிமை இப்பாடலுக்கு உண்டு என்பதை அவரவர் அனுபவத்தால் அறியலாம்.*

🍁 *கவலையைப் போக்கும் அரிய மருந்து - இப்பாடல்.*

       திருச்சிற்றம்பலம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment