Monday, 13 July 2020

ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.* *ஆனால் இந்த சார்வாரி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது



ஆடி மாத பிறப்பு - 16/07/2020, நமது குழுவின் தரும காரியங்கள் :


தருமம் 1 ஆதி சிவன் பௌண்டேஷன் - Rs .5001



சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஆதி சிவன் பவுண்டேஷன் என்பது திரு ஸ்ரீநிவாசன் என்ற ஒரு தனி நபரின் முயற்சியால் நடந்து வருகிறது. இவர் தினமும் 75 பேருக்கு சாப்பாடு சமைத்து எடுத்து கொண்டு போய் தெரு தெருவாக பசியால் வாடுபவர்களை கண்டறிந்து கொடுத்து கொண்டு வருகிறார். ஒரு மூட்டை அரிசி ஆயிரம் ரூபாய். ஐந்து மூட்டை அரிசி - 125 kg Rs .5000 விலை. நாம் இந்த மாதம் இவர்களுக்கு இந்த உதவியை செய்யலாம் என்று என்னுகிறேன்.



தருமம் 2 ஸ்மால் டிஃபரென்சஸ் டிரஸ்ட் – Rs.5001



 "கொண்டா" என்ற ஒரிசா பழங்குடியின மக்கள் கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா வினால் வேலை இழந்து தொழில் இழந்து உணவுஇல்லாத நிலையில் SMAAL DIFFERENCES டிரஸ்ட் அவர்களுக்கு உணவு பொருள் மளிகை சாமான்கள் வழங்கி உதவி வருகிறது. நாம் அந்த ட்ரஸ்ட் அக்கவுண்ட் க்கு நமது தருமத்தை செலுத்தினால் அது அவர்களுக்காக செலவிடப்படும். நமது குழுவை சேர்ந்த ஆர்த்தி அவர்கள் திரு சோபனா, டிரஸ்ட் மேனேஜர் இடம் பேசி உறுதி செய்து உள்ளார்



தருமம் 3 - சிவார்ப்பணம் ட்ரஸ்ட் – Rs.5001



இந்த ட்ரஸ்ட் 2 கோசாலைகளை நடத்தி கொண்டு வருகிறது. நமது குழுவில் உள்ள அடியவர் திரு முத்துராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் நேரில் சென்று இவர்கள் கோசாலையை பார்த்துள்ளார். அங்கே மாமிசத்துக்காக ஆதி மாடாக கேரளா விற்கு விற்கப்படும் கோ மாதாக்களை வாங்கி முறையாக பராமரித்து, அதன் சாணம் கோமியம் ஆகியவற்றில் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் கோசாலை பராமரிக்கப்படுகிறது - 100 கோமாதாக்கள் இருக்கும். நான் திரு கற்பகம், சிவார்ப்பணம் ட்ரஸ்ட் மேனேஜர் அவர்களிடம் பேசி உள்ளேன். நாம் அனுப்பும் பணம் அவர்களுக்கு நிச்சயம் மிகுந்த உதவியாக இருக்கும்.



தருமம் 4 - ஆல் தி சில்ட்ரன்ஸ் ட்ரஸ்ட், வியாசர்பாடி, சென்னை – Rs.5001



இங்கே அனாதை குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள் - சுமார் 20 குழந்தைகள். அவர்களுக்கு உணவு உடை படிப்பு செலவுகள் தினமும் தேவை உள்ளது. கொரோனா சமயத்தில் நன்கொடை இல்லாமல் உணவுக்கு தவிக்கிறார்கள். அவர்கள் ட்ரஸ்ட் திரு சுஹாசினி என்பவரால் நடத்த படிகிறது. நான் பரமேஸ்வரி என்ற ட்ரஸ்ட் பணியாளரிடம் உரையாடினேன். படங்கள் வீடியோ ஆகியவற்றை எல்லாம் அனுப்பி வைத்தார்கள். நாம் கொடுக்கும் பணம் இந்த குழந்தைகள் அனாதைகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருக்கும். உதவி செய்வோம் - உயர்வு பெறுவோம்





தருமம் 5 - ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஏழை பிராமணர்  - Rs. 2001



நமது குழுவை சேர்ந்த திரு குருப்ரசாத் அவர்களுக்கு தெரிந்தவர் - முதியவர் 80 வயது ஆகிறது. ஆதரவு எதுவும் இல்லை. இந்த வயதிலும் சமையல் வேலைக்கு சென்று சம்பாதித்து அதன்  வருமானம் மூலம் வாழ்கிறார். இப்போது கொரோனா வாழ் வேலை இல்ல. மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிக்கிறார். நாம் அனுப்பும் பணம் அவரது உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பயன்படும். அந்தணருக்கு செய்யும் தானத்துக்கு பெரும் பலன் நிச்சயம் உண்டு.



தருமம் 6 - பார்வை அற்றவர் - ரயிலில் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்துபவர் - Rs. 2001



நமது குழுவை சேர்ந்த சத்தி அய்யா அவர்கள் இவர்களை நன்கு அறிவார்கள். ஏற்கனவே சத்தி அய்யா இவர்களுக்கு பலமுறை மதிய உணவு வாங்கி கொடுத்து வருகிறார். இப்போது கொரோனவால் ரயில் பேருந்து  முடக்கம் - இவர்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. நாம் அளிக்கும் பணம் இவர்கள் வெளியே நடமாடாமல் வீட்டினுள் இருந்து இரு வேலை உண்டு பாதுகாப்பாக இருப்பார்கள். கண் தெரியாத நிலையில் கொரோனா தாக்கினால் என்ன ஆகும். நினைத்து பார்க்கவே முடியாது. பெரும் புண்ணியம் நமது குழுவிற்கு



தருமம் 7 - கோசாலை - கடையநல்லூர் - Rs .1001



திரு வெங்கடாசலம் என்ற சிவாச்சாரியார் நமது அம்பாள் நாடி உபாசக்கரை அணுகி தனது உணவிற்காகவும் தனது தம்பி திரு கண்ணன் அவர்கள் நடத்தும் கோசாலை பசுக்களின் தீவனத்துக்காகவும் உதவி கேட்டுள்ளார்கள்.  அது நமது செவிக்கு அம்பாள் நாடி உபாசகர் அய்யாவின் மூலம் எட்டியது. எனவே அவருக்கு இந்த மாதம் தருமம் அளிக்க முடிவு செய்து உதவி செய்கிறோம். திரு வெங்கடாசலம் அய்யாவிடம் நான் பேசி விவரங்களை தெரிந்து கொண்டேன்.



தருமம் 8 - ஹெல்பிங் ஹார்ட்ஸ் - Rs .2501



இது ஒரு முதியோர்கள் இல்லம் - திரு கணேஷ் என்பவரால் நிர்வாகம் செய்யப்படுகிறது - இந்த ட்ரஸ்ட் இந்த நிர்வாகத்தில் 2 முதியோர் இல்லங்கள் கோவையில் உள்ளது - கோவை GN Mills பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் 15 பேர் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு தேவை மருத்துவ உதவி, diaper, குளிர் காலத்தில் வாட்டர் ஹீட்டர் போன்றவை தேவை உள்ளது. அந்த ட்ரஸ்ட்டி இடம் நானும் நமது குழுவை சேர்ந்த பாரத் அய்யாவும் உரையாடினோம்

இந்த மாதம் தரும நன்கொடைகள் வாங்கி முடிந்தது, இனிமேல் வரும் நன்கொடைகள் அடுத்த மாதத்துக்கு.

இது தானாக சேர்ந்த குழு, யாரையும் நாமாக குழுவில் இணைப்பதில்லை, அவர்களாகவே வந்து குழுவில் இணையலாம். தருமம் கொடுத்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, கொடுக்கும் பணம் ஒரு ரூபாயாக கூட இருக்கலாம், தேவை இருப்பவர்களை கண்டறிந்து குழுவில் பகிர்ந்து கொள்ளலாம்.

நல்லதே நடக்கட்டும்

தி. இரா. சந்தானம்
கோவை


https://chat.whatsapp.com/IgwoxhNCWmY2SDIKExYBxE

No comments:

Post a Comment