Monday, 27 July 2020

எம் இல்லத்தில் இன்று 28/07/2020 நடந்த குரு பூஜை


இன்று சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான சுந்தரர்  வெள்ளை யானை மூலம் கயிலாயம் அடைந்த நாள். 

அவருடன் சேரமான் பெருமான் நாயனார் தானும் தமது குதிரையை பூட்டி அதன் காதில் பஞ்சாட்சரத்தை ஓதி கயிலாயம் அடைந்த நாள் . 

இவர்களுடன் அவ்வை பிராட்டியார் விநாயகரை துதித்து விநாயகர் அகவல் இயற்றி விநாயகர் அருளால் அனைவருக்கும் முன் கயிலாயம் அடைந்த நாள். 

நமது இல்லத்தில் ஒரு சிறு நினைவாக இன்று பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி சுந்தரருக்கு நெய் விளக்கு ஏற்றி சேரமான் பெருமான் நாயனாருக்கு நெய் விளக்கேற்றி அவ்வை பிராட்டியார் அவர்களுக்கு பஞ்ச முக நெய் விளக்கேற்றி சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் ஆத்ம லிங்க வடிவம் செய்து அவ்வை பிராட்டியாருக்கு கணபதி வடிவம் செய்து வைத்து மலர் வைத்து சிவபுராணம் படித்து விநாயகர் அகவல் படித்து அவர்களை போற்றி விளக்கொளியில் எழுந்தருளி அருளுமாறு கேட்டுக்கொண்டேன். 

நெய்வேத்தியம் படைத்தேன், வாசனை புகை இட்டேன். கற்பூர தீபம் காட்டி வணங்கினேன். 

அலுவலகம் செல்லும் நிலையில் ஒரு சிறிய முயற்சி. அகத்தியர் அருள் ஆசி உத்தரவு உள்ளுணர்வு செயலாக்கப்பட்டது - உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

ஓம் நம சிவாய நமஹ .சுந்தரர் போற்றி மாணிக்க வாசகர் போற்றி அப்பர் போற்றி ஞான சம்பந்த பெருமான் போற்றி அகத்தியர் போற்றி ஆதி மூல கண நாதரே போற்றி அவ்வைபிராட்டியாரே போற்றி போற்றி அருள் ஞான ஜோதி வடிவே போற்றி.

இவண் 

சந்தானம் 
கோவை 





No comments:

Post a Comment