Tuesday, 28 July 2020

சிந்தை ஆசி நூல் – 3 29/07/2020, புதன்கிழமை, சார்வரி வருடம் ஆடி மாதம் 14 ஆம் திகதி, விசாகமும் அனுஷமும் கூடி நின்ற நேரம் தசமி திதி


சிந்தை ஆசி நூல் – 3

29/07/2020, புதன்கிழமை,
சார்வரி வருடம் ஆடி மாதம் 14 ஆம் திகதி, விசாகமும் அனுஷமும் கூடி நின்ற நேரம் தசமி திதி

அகத்தியன் விளக்கம்

அகத்தில் இருப்பவன்

அகத்தில் தீயாக இருப்பவன்

உடலில் உயிராக இருப்பவன்

ஈசனின் சிற்றம்பல இயக்கம்

அகத்தில் தீயாக இருந்து உயிரை இயக்குபவன்

உயிர் சூட்சுமத்துக்கு காரணகர்த்தா

உயிர் உடலில் புக வகை செய்பவன்

பாப புண்ணிய கணக்குகளை உயிரில் பதிவு செய்பவன்

விதியை செய்பவன்

உயிரை உடலில் இருந்து பிரிக்கும் காலத்தை நிர்ணயிப்பவன்

கால சக்கரத்தை சுழல செய்பவன்

ஓம்காரத்தில் ஒடுங்குபவன்

அணைத்து அண்டங்களையும் ஓம்காரத்தால் இயக்குபவண்

சீவனில் உள்ள சிவன்

உருவத்தில் அவனே சிவன்



பரமன் விளக்கம்

பர - பரவெளி பரமசிவன் பரமேஸ்வரன் ஆகிய தன்மைகளை கொண்டிருப்பவன்
ரம - ராமன் என்று பொருள் கொள்ள வேண்டும் - ராமனின் தன்மைகளை கொண்டிருப்பவன் - பெருமாள் ஸ்வரூபம்
பரம - பிரமன் என்று பொருள் கொள்ள வேண்டும்

இவ்வாறு முமூர்த்திகளின் ஒருங்கிணைந்த ஸ்வரூபமாக விளங்கும் சித்தன் - பரம சித்தன்

பரமன் என்றால் பராக்ரமம் உடையவன் என்று பொருள்படும்

பொருள்படும்படி அவனது பராக்ரமங்கள் எண்ணற்றவை

பர + = பரம்பொருள் மனித நிலையில் மண்ணில் வந்து அவதரித்த நிலை

பரம் +   = பரம்பொருள் அகத்தியன் வடிவம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்

பரம = ப்ரேம என்றும் கொள்ள வேண்டும் - அணைத்து ஜீவா ராசிகளின் மீதும் ப்ரேமம் கொண்டவன்


தேன் விளக்கம்


மிகவும் உயர்ந்தது தேன்
- மிக சிறந்தது அமிழ்தம் தமிழ் மங்களம்  இறவா நிலை சிரஞ்சீவித்துவம்


அதனால் தான் உயர்வான இடத்தில் தேனீ கூட்டில் தேன் இருக்கும்
- நமது உடலில் தலை உயர்வான இடத்தில் இருக்கும். அதன் மத்தியில் தேன்கூடு ஒன்று இருக்கும்.

தேன் சிறுக சிறுக சேர்க்கப்படும்
- நமது புண்ணியங்கள் பல பிறவிகளாக சிறுக சிறுக சேர்க்கப்பட்டு சுழுமுனையில் இருப்பு வைக்கப்படும்

தேன் அருமருந்தாகும்
- சுழுமுனையில் உள்ள அமிழ்தமானது அணைத்து நோய்களையும் தீர்க்கும் - அணைத்து வரங்களையும் அளிக்கவல்ல கற்பக தரு ஆகும்

தேன் கெடாமல் அப்படியே இருக்கும்
- நமது புண்ணிய பலம் அழிவற்றது, சுழிமுனை ஆற்றல் பெருந்தன்மையுடையது. எந்நாளும் வற்றாது.

தேனில்  பொருட்கள் இட்டு வைத்தால் கெடாமல் அதே தன்மையுடன் பல காலம் இருக்கும்
- நமது வீடாகிய கூட்டில் - அதாவது உடலில் தென் அமிழ்தம் சுரந்தால் அது பரந்து உடலெங்கும் கலந்தால் உடலுக்கு அழிவென்பதே இல்லாது போகும்

நல்ல தேனை எறும்புகள் உண்ணாது
- இத்தகைய சிறப்பு வாய்ந்த நமக்குள்ளேயே இருக்கும் ஆற்றல்களை மனம் விரும்பாமல் போலி மாயா மாயை யிலேயே சிக்கி நல்ல சக்திகளை நாடாமல் மாயையில் இருக்கும்

நல்ல தேன் சிறிது கசப்பாகவும் இருக்கும்
போலிகளை போல மாயை இல்லாமல், உண்மை சத்தியம் என்பது கவர்ச்சி விளம்பரம் இல்லாமல் நிலையாக நிலைத்து நிற்கும். மாயை போல ஆடம்பரம் பகட்டு இருக்காது

தேன் தங்க நிறத்தில் ஜொலிக்கும்
ஆற்றல் வெளிப்படும் பொது ஜோதி உள்ளிருந்து சுடர் விட்டு பிரகாசிக்கும்


எச்சில் விளக்கம்


நூல் ஓதுபவன் பற்றற்று அசைவற்று இன்பம் துன்பம் கடந்த நிலையில் தன்னிலையில் நின்று சமநிலையில் நடுவு நிலையில் எந்த பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும். ஒரு பொருள் கசக்கினால் கசக்கும் நிலையில் உள்ள பொருளை கையில் வாங்கி எப்படி வாங்கப்பட்டதோ அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்க வேண்டும். வாங்குபவர் கைகள் சுத்தமாக இருந்தால் தான் அது சாத்தியம். கைகள் சுத்தமாக இல்லாமல் கறையாக இருந்தால் அந்த கறை கொடுக்கும் பொருளில் ஒட்டிக்கொண்டால் இறைவனை குறை கூறுவது ஏனோ? சுவடி ஓதும் இடங்களில் நித்தமும் பூஜை புனஸ்காரங்கள் செய்து மனம் அகத்தியதில் லயிக்க லயிக்க அசுத்தங்கள் களையப்பட்டுக்கொண்டே இருக்கும். அசுத்தங்களே சேராத நிலையில் மீண்டும் மீண்டும் பூஜை தொடர தொடர சுத்தமான செப்பு பாத்திரத்தை மேலும் துலக்க துலக்க அது ஜொலிப்பதை போல நூல் வாசிப்பவனும் ஜொலிப்பான். முதலில் அசுத்தத்தை களைய வேண்டும், பிறகு தான் ஜொலிப்பு என்பது வரும். இதை புரிந்து கொள். ஒரு வாக்கை பெரும் போது அதன் சுத்த தன்மையை தீர்மானிப்பது இதழ் ஓதுபவனின் மனத்தூய்மையே. அகத்தியனை தொழும் இடத்தில அகத்தியனை குருவாக இருந்து நடத்தும் இடத்தில் மனத்தூய்மை என்பது எள்ளளவும் என்றுமே குறையாது. இதழ் ஓதுபவனுக்கு யோகம் என்பது முக்கியம். பக்குவம் என்பது அதி முக்கியம். மனம் அடங்கிய பெரும் பக்குவப்பட்ட நிலையில் ஒருவன் இதழ் ஓத வேண்டும். இல்லையேல் அவனுள் இறைவனால் சுரக்கும் தேன் அவன் வாய் வழியாக எச்சில் படமால் வர வேண்டுமானால் மனதிடம் வேண்டும் நாவில் ஒருபொருளை வைத்தால் கூட எச்சில் சுரக்காத நிலை போல அருள் கேட்பவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் அவன் பொருட்டு இதழ் ஓதுபவன் தன மனதை கொண்டு ஆராயாமல் அவனுக்குண்டதான தேனினை அப்படியே நிறம் சுவை மாறாமல் அளவு குறையாமல் கொடுக்க வேண்டும். தேனில் மேலும் சுவைக்காக ஏலக்காய் சேர்க்கலாம் நெல்லிக்கனி சேர்க்கலாம், அதில் தவறேதும் இல்லை என்று இவன் எண்ணி விட கூடாது. தபால் காரர் உள்ளே என்ன இருக்கும் என்று  வேண்டிய அவசியமில்லை. தபாலை நல்ல முறையில் கொண்டு சேர்த்தால் அதுவே போதுமானது. செய்து வாசிப்பவன் தானும் ஒரு வரியை சேர்த்து சுவைபட கூறுவதாக எண்ணி செய்திகளை மாற்றம் செய்து கூற கூடாது. ஒருவன் ஆசானை நம்பி வரும் போது அவன் எதுவும் ஆராயாமல் வருவது அனைத்துமே பரம்பொருள் வாக்கியம் என்று நல்ல நம்பிக்கையுடன் வருவான். அதனால் அந்த நம்பிக்கையை யாரும் குலைக்க கூடாது. பரம்பொருள் வாசகம் என்பது உண்மை. அந்த உண்மை நிலைக்க எம் வழி வரும் அணைத்து ஆசான்களும் பாடுபடவேண்டும் என்பதே எனது வாக்கியமாகும். மேலே உள்ள இந்த வாக்கு என் மகனின் மனதில் இருந்து உதித்தாலும் இதில் எந்த கலப்படமும் இல்லாத அகத்தியம் என்பது உண்மை. இதுவே அதற்க்கு உதாரணம். ஆசிகள் சுபம்.

உள் எழுக்களை கொணர்ந்தவன் இவண்

அகத்தியன் சந்தானம்
இருப்பிடம் - அகத்தியததில் இருந்து.



No comments:

Post a Comment