Sunday, 5 July 2020

திருபுளிஆழ்வார்


🙏 ஆனிதிங்கள் மூலம் "திருபுளிஆழ்வார்" திருநக்ஷத்ரம்.

🙏திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ( திருகுருகூர்) ஸ்ரீஆதிபிரான் சன்னதியில் ஆனி மூலம் நட்சத்திரத்தன்று 5000 வருடங்களுக்கு முன்பு, "திருபுளிஆழ்வார்" ஆதிசேஷன் அம்சமாக அவதரித்தார்.

🙏ஸ்வாமி நம்மாழ்வார் பிறந்தவுடன் கண்கள் திறவாமல்,பால் பருகாமல், அழாமல் உலக நியதிக்கு மாறாக இருந்ததினால்

🙏 அவரின் பெற்றோர் அவரை ஆதிபிரான் சன்னதியில் விட்டு மனமுருகி சேவித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அக்குழந்தை" மயர்வற மதிநலம் அருளப் பெற்ற" குழந்தை ஆதலால், தவழ்ந்து சன்னதியில் இருந்த புளிய மரத்தில் உட்கார்ந்து கொண்டு, 16 ஆண்டுகள் யோக நிலையிலேயே இருந்தது.

🙏இராமாவதாரத்தில் இளையாழ்வார் ஆகிய இலக்ஷ்மணன் ( ஆதிசேஷன்) ,பரதாழ்வார் ஆகிய பாகவதரை அபச்சாரம் செய்து விட்டத்தை எண்ணி அதற்கு பிராயச்சித்தம் காணும் நோக்கில் பின்னிட்டு இந்த லோகத்தில்

🙏ஆழ்வார்திருநகரியில் ஆதிபிரான் சன்னதியில் திருபுளிஆழ்வாராக( புளிய மரம்)
அவதரித்தார்.

🙏அதாவது இலக்ஷ்மணனே ஆதிசேஷன் அம்சமாக திருக்குருகூரில் திருபுளியமரமாக ( திருபுளிஆழ்வார்) அவதரித்து , பாகவதரான நம்மாழ்வாரை
இரக்ஷித்தார்.

🙏இந்த திருபுளியமரம் தாமிரபரணி தீர்த்ததாலும், ஆழ்வார் எம்பெருமானின் மேல் கொண்டிருந்த பக்தியால் ப்ரீதியால் வடிந்த கண்ணீர் தீர்த்ததாலும் வளர்ந்த சிறப்பு வாய்ந்த புனித மரமாகும்.

🙏இந்த மரத்தின் இலைகள் இரவில் உறங்காது மூடாது இருக்கும்.மற்ற புளிய மரங்களின் இலைகள் இரவானால் மூடி கொள்ளும். இதனால் இதற்கு" உறங்கா புளி" என்ற திருநாமமும் உண்டு.
மேலும் இந்த திருபுனித புளியமரம் பூக்கும்,
காய்க்கும் ஆனால் பழுக்காது.

🙏ஆதிசேஷனே திருபுளியமரமாக இந்நன்னாளில் அவதரித்து, ஆழங்கால் பட்டு என்பதாற்போலே , எப்படி ஆழ்வார்கள் எம்பெருமானை பகவத் நிஷ்டையிலிருந்து ஆழ்ந்த பக்தி கொண்டு "ஆழ்வார் "என்று அழைக்கப்பட்டார்களோ ,

🙏அதுபோலே ஆதிசேஷனும் பாகவ நிஷ்டையிலிருந்து ஆழ்வாரிடத்தில் ( நம்மாழ்வார்) மிகுந்த பக்தி ப்ரீதி இருந்ததினால் " திருபுளிஆழ்வார் "என அழைக்கப்பட்டார்.

🙏பரமபதத்தில் நித்யசூரிகளில் முதன்மையானவரான ஆதிசேஷனே திருபுளிஆழ்வாராக அவதரித்ததினால் இதற்கு இத்தகு விஷேச பிரபாவம் ஏற்றம் ஏற்பட்டது.

🙏இந்த ஆனி மூல நன்னாளில் திருபுளிஆழ்வாருக்கு திருமஞ்சனம் செய்வித்து,திருவாய்மொழி கோஷ்டி அருளி செயல் கண்டு சாற்றுமுறையும் சாதித்து அருளப்படும்.மேலும் சகஸ்ர பாராயணம் 48 நாட்கள் விசேஷமாக நடைபெறும்.

🙏இன்நன்னாளில் பாகவத அடியார்களாகிய நாம் திருபுளிஆழ்வார் திருவடிகளை வணங்கி அவர்தம அருளுக்கு பாத்திரபூதர்களாவோம்.

🙏திருபுளிஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

🙏 🙏 இங்கனம்
🙏🙏  இராமானுஜதாஸர்கள்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🍒 சுபமஸ்து 🙏 தீர்காயுஷ்யமஸ்து.

💥 ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே.
💥 ஶ்ரீமதே நாராயணயாய நம: 
✳️ ஶ்ரீமதே ராமானுஜாய நம:
🙏  ராமானுஜ தாஸர்கள்

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

No comments:

Post a Comment