Thursday 30 July 2020

அகத்தியம் சிந்தனை தேனமுது சார்வரி வருடம் ஆடி மாதம் 15ஆம் தேதி கேட்டை நட்சத்திரம் ஏகாதசி திதி குருவாரம்


அகத்தியம் சிந்தனை தேனமுது

சார்வரி வருடம் ஆடி மாதம் 15ஆம் தேதி கேட்டை நட்சத்திரம் ஏகாதசி திதி குருவாரம்

போற்றி வழிபாடு

அருட்பேராற்றலே போற்றி
அருள் ஞான ஜோதியே போற்றி
அருள் இசை அமுதே போற்றி
அருள் ஞான சித்தரே போற்றி
அருட் பேரரரசரே  போற்றி
அகண்ட ஜோதி வடிவே போற்றி
அகத்தியம் தந்த அகத்தீசா போற்றி
ஆழி பேரலையே போற்றி

குருநாதா போற்றி போற்றி போற்றி

தியானம் - பாமாலை

உன்னை போற்றி இந்த நாளும் துவங்கிட
தன்னையே போற்றி வாழும் மாந்தர்களையெல்லாம்
கருணையுடன் கண்டு காருண்யம் புரிந்து
அவருள்ளே மலர்ந்து அறிவுஜோதி அகலை ஏற்றி
இருளகற்றி அருள் புரிவீர்காளாக என் குருநாதரே

தத்துவ மணிகள்

வாழ்க்கை விவசாயம் - விவசாயமே வாழ்க்கை வாழ்க்கையே ஒரு விவசாயம்

மண்ணில் விதை விதைத்தல்
மண் என்பது நீ. விதை என்பது உன் பிறவி காரணம். விதைப்பவன் உன் குருநாதன் சித்தன். குருநாதன் நல்ல மண்ணாகி தேடி தேடி விதைக்கிறான். என்ன விதை விதைக்க வேண்டும் என்பது அவன் முடிவு. குருநாதரின் விதை அல்லவா. தன அணைத்து ஆற்றல்களையும் சகல குணாதிசியங்களையும் உள்ளடக்கி ஒரு சிறிய விதையாக்கி மண்ணில் விதைக்கிறான். அதுவே பிறவி விதை முளை விடும் பொது மண்ணில் மனிதனாய் அல்லது விலங்காய் அல்லது பறவையாய் அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப வளரும். அகத்திய மரத்தின் விதை வீரியம் வாய்ந்தது. அது முளைத்து விட்டால் அற்புத சக்திகளுடன் விளங்கும். அகத்திய விதையை வளர்ப்பதற்கு மண்ணாகிய நீ முதல் தயாராக இருக்க வேண்டும்.

மண்ணின் தன்மையை அதிக வல்லமையுடன் பெருக்கி கொள்ள வேண்டும். வேண்டாத பயிர்களை களைய வேண்டும் நீர் ஓட்டம் அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் அமைய வேண்டும் நல்ல இயற்கை  உரங்கள் இட வேண்டும்.
உரங்கள் என்பது மனித வாழ்க்கையில் அறநெறிகள் தருமம் சத்தியம் கருணை ஈகை குணம் அன்பு கடமை ஆகியவை. நல்ல குணங்கள் இல்லாத இடத்தில் அகத்தியம் விதை வளராது.

மண்ணில் நீர் பாய்ச்சி பயிர் செய்ய வேண்டும், மழை நீர் வேண்டும், குளம் வேண்டும், ஆறு வேண்டும் கிணறு வேண்டும். இவை தான் கோவில் ஜீவ சமாதி சக்தி பீடங்கள் சமுத்திர க்ஷேத்ரங்கள் மலை க்ஷேத்ரங்கள் புனித யாத்திரை க்ஷேத்ரங்கள் ஆகியவை. அருள் சக்தி ஆசி தான் அந்த நீர். நீர் இல்லாவிட்டால் பயிர் வாடி விடும். அருள் இல்லாவிட்டால் உயிர் வாடி விடும்




No comments:

Post a Comment