Saturday 11 July 2020

எனது அனுபவ பதிவு 11.07.2020

நேற்று எனது வீட்டில் இருக்கும் செடிகளில் நாமே வளர்த்த முல்லை பூ, செவ்வரளி, கொடி சம்பங்கி, அடுக்கு நந்தியாவட்டை, செம்பருத்தி, செண்பகம் ஆகிய மலர்களின் தொகுப்பை அகத்தியர் பீடத்தில் கொண்டு போய் கொடுத்தேன். சென்ற முறை வீட்டில் காய்த்த நெல்லிகனிகளை கொண்டு போய் கொடுத்தேன்.

இதற்கு முன் ராமர் சீதா பழம் வீட்டில் காய்த்த போது கொண்டு போய் கொடுத்துள்ளேன்.

 சீதா பழம் வீட்டில் காய்த்த போது கொண்டு போய் கொடுத்துள்ளேன்.

அந்த வகையில் நேற்று சுண்டைக்காய் நன்றாக காய்த்து குலுங்கியது, அதை பார்த்தவுடன் அதை அகத்தியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் கசப்பான ஒரு பொருளை எங்கனம் அகத்தியருக்கு கொடுப்பது நான் இனிப்பான சுவையான பொருள்களை அகத்தியருக்கு அளித்தால் நமக்கு நன்மை நடக்கும்

கசப்பான பொருள்களை அளித்தால் அதேபோல கசப்பான விஷயங்கள் நமக்கு நடந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து கசப்பான பொருள்களை கொடுத்தால் அவரும் நமக்கு கசப்பான ஆசியை திரும்பி வழங்கி விடுவார்

நாம் கொடுத்ததை தானே அவர் திருப்பி அளிப்பார் என்றெல்லாம் எண்ணி சுண்டைக்காயை பறிக்காமல் விட்டு விட்டேன்.

நேற்று மாலையே கனமழை பொழிந்தது அப்போது அனைத்து செடிகளும் நன்றாக இருந்தன ஆனால் மழை முடிந்தவுடன் அந்த ஒரு சுண்டைக்காய் செடி மட்டும் யாரோ கையால் ஓடித்தது போல் ஒடிந்து விழுந்து இருந்தது.

 இது தற்செயலா தெரியவில்லை ஒரு அனுபவ பதிவாக இதை இடுகிறேன்




No comments:

Post a Comment