அகத்தியம் - நாள் - 31/07/2020 - இன்றைய தலைப்பு
நிதர்சனம்
ஓம் அற்புத நாயகனே போற்றி
ஓம் ஆதி சக்தி புதல்வனே போற்றி
ஓம் அகிலம் எல்லாம் ஆளும் ஈசனே போற்றி
ஓம் பரிபூரண ஜோதியே போற்றி
!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் மெதுவாக நடந்து கொண்டு இருந்தேன்
ஓம் அகத்துள்ள அகத்தியரே போற்றி
ஓம் ஆதி சக்தி புதல்வனே போற்றி
ஓம் அகிலம் எல்லாம் ஆளும் ஈசனே போற்றி
ஓம் பரிபூரண ஜோதியே போற்றி
!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் மெதுவாக நடந்து கொண்டு இருந்தேன்
ஓம் அகத்துள்ள அகத்தியரே போற்றி
பெரும்பாலானவர்கள்
எனக்கு எதிர் திசையில் நடந்து கொண்டு இருந்தனர்
வெகு
சிலர் நான் செல்லும் திசையில் சென்று கொண்டு இருந்தனர்
இரண்டு
திசைகளிலும் பலவேறு வழிகள் இருந்தன
நான்
செல்லும் திசையிலும் பலர் அதே திசையில் செல்லும் வேறு சில
வழிகளில் நடந்து கொண்டு இருந்தனர்
அவரவர்கள்
திசைக்கேற்ப சிவப்பு ஆடை, பச்சை ஆடை மஞ்சள் ஆடை வெள்ளை ஆடை போன்றவை அணிந்து கொண்டு தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இருந்தனர்
அவரவருக்கு
தாம் செல்லும் வழி தான் சிறந்த
வழி என்று நினைப்பு
சில
வழிகள் பளபள ப்பான் தரையுடன் வசதிகளுடன் இருந்தது
நான்
செல்லும் வழி கரடு முரடாக இருந்தது
சிலர்
செல்லும் வழியில் இளைப்பாற இடங்கள் உயர்ந்த வகை உணவு என்று இருந்தன
எம்
வழியில் வெறும் காலில் குத்தும் கல்லில் வெய்யிலில் நடக்க வேண்டும்
சிலர்
என்னை பார்க்கின்றனர். என்னை எடை போடுகின்றனர் எனக்கு முன் நான் செல்லும் பாதையில் யார் செல்கிறார்கள் என்று பார்க்கின்றனர். பின்னர் இவனை தொடர்ந்து சென்று பார்க்கலாம் என்று கூடவே வருகின்றனர்
என்னிடம்
முள் குத்தாமல் இருக்க செருப்பு உள்ளது, கரடு முரடில் ஏறி செல்ல ஊன்று கோல் உள்ளது. வழிப்பயணத்துக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. என்னை அறிந்தவர்கள் என்னை நம்புவார்கள் என்னிடம் இருட்டில் ஒளிர்விடும் ஒளி காட்டும் கருவி
உபகரணம் உள்ளது. என்னிடம் தொலை தூரத்தில்
உள்ளவர்கள்களை தொடர்பு கொண்டு பேசும் கருவி உள்ளது. வான்
வழியே உதவி அளிக்கும் ஆசான்கள் உள்ளனர்
இருட்டுவதற்குள்
இலக்கை அடைந்து விட வேண்டும். இலக்கை அடைந்து விட்டால் இருட்டில் கூட நம்மால் தெளிவாக பார்க்க முடியும். மற்றவர்களின்
நிலை உணர முடியும் உதவ முடியும். மீண்டும் பயணம் செய்து கஷ்டப்பட தேவையில்லை. இலக்கை அடைந்து விட்டால் என்றுமே இருளே இல்லை
இருளில்
வாழவும் பலர் பழகி கொண்டனர் கொண்டனர். அதுவே பெரிய திறமை என்று எண்ணி கொண்டனர். வெளியான வெளிச்சத்தில் வாழ்பவர்களை அவர்கள் சவால் விடுகின்றனர். ஒளி பொருந்தியோர் அவர்களை நெருங்கியவுடனே அந்த வெளிச்சத்தில் அவர்கள் தம் நிலை உணர்ந்து சரண் அடைகின்றனர்
எல்லோரும்
வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்து வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும்
எங்கோ
சென்றால் விரைவில் இருள் கவிழ்ந்து பயணம் முற்றுப்பெரும்
அதை
விடுத்து வெளிச்சத்தை நோக்கிய திசையில் பயணிக்காமல் ஒரு இலக்கே இல்லாமல் பயணித்தால் விரைவில் இருள் கவிழ்ந்து பயணம் முடிவுக்கு வரும்
அதிலும்
சிலர் வெளிச்சத்துக்கு எதிர் திசையில் விரைவாக ஓடி மிக விரைவாக இருளை அடைந்து தம் பயணத்தை முடித்து கொள்கின்றனர்
No comments:
Post a Comment