எனது பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி வாசிப்பு 11/07/2020 - சந்தானம்
வாசிப்பு - குருஜி இறைசித்தர்
அருளுரை :
அருவாய் உருவாய் திருவாய் போற்றி
திருவாய் மலரடி பணிந்தேன் போற்றி
வருவாய் குகனே அருள்வாய் போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே - போற்றி போற்றி போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கும் அடியாரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து அகத்தியன் யானே என் மழலை செல்வத்திற்கு அருள் தனை உரைப்பேன்
கேளடா என் மழலையே
கேள்வி - ராமர் போர் புரியும் பொது வானர கூடாரங்கள் குஞ்சரா வகை குரங்குகளால் ஆளக்கப்பட்டு அமைக்கப்பட்டன . அவை எந்த மந்திர மாயை இயற்கை சீற்றங்களை தாங்கும் வல்லமை பெற்று இருந்தது. ராவணனால் அதை அழிக்க முடியவில்லை. பஞ்ச பூதங்களும் அழிக்க தோற்றன - அவ்வகை மாதிரியில் நாம் ஆசிரமம் அமைக்க வேண்டும் - அதனை எங்களுக்கு விளக்கமாக கூறவும்
இன்னவனே
இக்கலியுகம் தன்னிலே
ஆலய பணியதை யாம் உனக்கு அமையப்பெற்று தரவே
நித்திரையில் வந்து புலன் உணர்த்துவோம்
நாடி வழியில் யாம் உனக்கு உரைப்போம்
யாம் சேனை அதை கட்டும் நிலை எல்லாம் இப்பொழுது இல்லை அப்பா
கலியுகம் தன்னிலே நீ ஆலய பணியதை மேற்கொள்ளவே யாம் உம்முடன் இருந்து
உன்னை உணர்த்துவோம்
உனக்கு யாம் பணி தனிலே மேன்மைபட அமைய செய்வோம்
************************************************************************
இன்னவன் தேகத்தில் இருக்கும் இன்னலது படிப்படியே விட்டு விலகுமடா
உன் மனைதனிலே கொண்டவளை மனம் கலங்க செய்யாதே - மனதுடன் நடத்து
அவள் நாவினில் நான் நின்று நல்லதொரு நிகழ்வினை யாம் செய்வோம்
பிறவி கருமம் அதை தீர்த்து விட்டு என்னிடம் நீ வா சித்தத்துக்கு
யாம் உம்மை முழு நிலைக்கு யாம் அழைப்போம்
எண்ணிக்கையில் நூறு நாள் யோக நிலையை கடைபிடிக்கிறாயே
?
பதில் - ஆம் அய்யா
அந்த யோகம் அது வேண்டாம் அய்யா
விட்டொழி என் மகனே
யாம் இருக்கிறோம் கோரக்கனுடன் உனை ஆசீர்வதிக்க
ஏனடா பித்து நிலை சென்றாய் நீ
உனை யாம் உணர்த்துவோம் என்று அன்று உரைத்தோமே
செவிகளிலே வீண் சொல்லை அதை கேட்காதே
அகத்தியன் காப்பான் சக்திவடிவேலவன் அருள் புரிவான் உமக்கு
வீண் ஏன் உனக்கு எண்ணங்கள்
யோகம் அதை செய் த்யானம் செய் தானம் செய் என் மகனே
*************************************
கேள்வி - அய்யனே பீடத்தை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க மருந்தினை அனுப்பி வைத்துள்ளோம் - அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க உங்கள் அருளாசி வேண்டும்
பதில் - யாம் மழலைகளுக்கு கொடுத்த மருத்துவம் அது சித்தி பெரும் அய்யா. அவள் கர்ம நிலைக்கு தெளிந்து அடுத்தடுத்து மழலை செல்வங்களை ஈன்று எடுப்பார்கள். நல்லதோர் நிலை பெரும்.
*************************************
கேள்வி - ஒரு யோக அன்பரின் வாசி யோக நிலை ஒரு கட்டுக்குள் அடங்காமல் செல்வதால் குழப்பங்களும் சிரமங்களும் இருப்பதாக தெரிவித்து உள்ளார் -
அவரது சிக்கலுக்கு தீர்வு வேண்டி கேட்கிறோம்
பதில் - யோக நிலை காணும் என் மழலைக்கு - அவன்
முற்பிறவியால் செய்த கர்மத்தால் நிலை கெட்டு நிலை மாறி நிற்கிறானே. புலத்தியனை பிடிக்க சொல். கோரக்கனை முன் நிறுத்த சொல். யோகமது சித்தி பெரும். பிறவி கடன் அதை முடித்து என்னிடமே வருவான் அவன். அடிமுடி சித்தனவன் ஆட்டி வைக்கிறான். ஆட்டம் முடிந்து நிலை பெறுவான், என் மகனே, மனம் தளராதே.
*************************************
கேள்வி - முருகர் ஏன் எப்போதுமே உயரமான இடத்தில் குடி கொள்ளுவதை வழக்கமாக கொண்டுள்ளார்
பதில் - குன்றின் மேல் இருப்பதாலே என்னை குமரன் என்று அழைப்பார்கள். வேலவனுக்கு மேல் நோக்கி செவ்வாய் ஆதிக்கத்துடன் நின்று செய்வானே. அதையே குமரனாக திகழ்வானே.
*************************************
உன் நிலை மாறுமப்பா. ஆலய பணியதை மேற்கொள்
******************************************
கொரோனா நோய் பற்றி :
சில கிரக நிலைகளில் மாற்றம் பெற்று இனி அந்த பிரதோஷ நன்னாளில் இப்பீடைகள் துர்பீடைகள் அப்படியே விலகுமப்பா
************************
கொண்டவளுடன் ஒரு நல் உறவை காண் மகனே
நீ ஈன்ற மழலைகளின் வாழ்வு சீர் பெரும்
துர் பேச்சு துர் எண்ணம் அதை விட்டொழி
**************************
யோக நிலையில் சிரஞ்சந்தத்தில் எனை நாடு
குண்டலி அது மேல் நோக்கி வரும் அப்பா
யோக நிலை காண்பாய்
தேகத்தை சீர்படுத்து
எண்ணிக்கையில் நான்கு நாள் அருகம்புல் சாறெடுத்து
விடிகாலை பருகி வா ப்ரம்ம முகூர்த்தம் தன்னிலே
தேகம் சீர் பெரும்
மனச்சுமை அதை விட்டொழி மான்மகனே
கொண்டவளுடன் நல்லுறவாய் இரு மகனே
உன்னை ஈன்றவள் அவள் தேகம் சீர் பெரும் அப்பா
ஈன்றவளுடன் நல்லுறவாய் இரு மகனே
வீண் சாப நிலைகளை இடாதே
உனது வாக்கு சித்தி என்று மூடனே அன்றுரைத்தேன் அறியவில்லையா உனக்கு
******************************************
எண்ணிக்கையில் மூன்று நாள் யோகம் அது ஏதடா
யாமிருக்கிறோமே யோக நிலையில் உமை காக்க
யோகம் அது ஏதடா
காற்று அது ஏதடா
யோகமும் நானே காற்றும் நானே
அஷ்டசித்து பாலகனும் நானே
உமை ஆட்கொள்ளும் சக்தியும் நானே
அகத்தியனும் நானே
உன்னுள் இருக்கும் உனை இயக்கும் உனது ஆத்மாவும் நானே
யாம் இருக்கிறோம்
வாழ்வில் நிலை பெறுவாய்
முற்றே
கேள்வி - நவம்பர் 2017 இல் அய்யன் வாக்குப்படி பெருமாள் நாமம் கொண்ட ஒருவன் வேதங்கள் ஓதும் ஒருவன் உனக்கு சில ப்ரணய மந்திரங்களை உபதேசம் செய்வான் - பெற்று கொள் என்று வந்தது - அதனால் தான் நானும் மந்திரங்களை பெற்று ஜெபித்து வந்தேன் - இப்போது அதை நிறுத்து என்று நீங்கள் ஏன் கூற வேண்டும் ?
பதில் - அன்றுரைத்தேன் அறியவில்லையா மூடனே. பெருமாள் நாமம் கொண்ட ஒருவனால் நீ சாஸ்திரங்கள் பயில்வாய் என்று. உனக்கு யாம் உரைத்தோம் - உண்மையே. சாஸ்திரங்களை நிலை நிறுத்து , பயிலு , மந்திரங்களை உள் ஜெபி , வாய் விட்டு சொல்லும் மந்திரம் வான் நோக்கி செல்லுமடா மூடனே. உன்னை யாம் எண்ணிக்கையில்
100 நாளில் சித்தி பெற வேண்டும் என்று ஓர் நிலையும் இல்லையப்பா. எண்ணிக்கையில் 11 திங்களுக்குள் நீ சித்தி செய்தால் அதுவே ஒரு பெரும் புண்ணிய நிலை ஆகுமப்பா.உன் தேகமதிலே சிறு சிறு இன்னல்கள் தொற்றியது அதுவே. வேத மந்திரத்தை யாம் உரைத்த பெருமாளின் நாமம் கொண்ட ஒருவன் அவனே. நல்லதொரு நவகோடி சித்தனின் நல்லாசி பெற்றவன் அவனே. அவன் மீண்டும் ஓர் உயர் சித்து நிலைக்கு செல்வானே. உமை யாம் அகத்தியனின் பாதம் தொழ யாம் இங்கு அழைப்போம். எனக்கு இங்கு பணிகள் உள்ளதப்பா. அவன் வடக்கு திசை நோக்கி செல்லட்டும். நீ இப்பீடத்தில் நின்று இங்கு ஆலய பணிகள் செய்து ஆசிரமம் அதை மேற்கொண்டு பதினெட்டு சித்தர்களையும் நிலை நிறுத்தி பூசை தனை மேற்கொள்.
யாம் உன்னுள் இருந்து உனை உணர்த்துவோம்
தேகமது சீர் பெரும் என்னவனே
வாழ்வில் நிலை பெறுவாய்
கொண்டவளுடன் ஒரு நல்லுறவாய் இரு மகனே
உமக்கு மந்திரமது உன்உள் சித்தி பெறுமே
குருஜி யிடம் கேள்வி - மந்திரத்தை சொல்லவா அல்லது வேண்டாமா ?
சொல்.
ஒரு நாளில் 108 சொல் . 11 மாதங்கள் கால நிலை
இருக்கும்போது அதிகமாக சொல்லி உடல் உஷ்ணத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை
----------------------------------------
வாழ்வில்
நிலை பெறுவாய்
கஜமுகனை
மனதில் நிறுத்து
பின்பு
மந்திரம் அதை பிரகடனம் செய்
உனக்கு
வேலவன் துணை நிற்பான்
அகத்தியனும்
உமையவளும் யாம் உன் மனை தனிலே நிலை கொண்டோம்
சுகப்பிரம்ம
சித்தனவன் வட நோக்கு திசையில் அமர செய்
நிலை
பெறுவான் என் மகனே
தினம்
சிவ மந்திரம் அதை ஜெபி
வாழ்வில்
உயர் நிலை அடைவாய் முற்றே
--------------------------------------------------------
கேள்வி - சுப்ரமண்யர்
மூல மந்திரம் ஜெபிக்கலாமா
பதில்
:
முன்
உரைத்தேன் ,மூடனே உனக்கு அறியவில்லையா
கஜமுகனின்
திருநாமம் அதை செப்பு
வேலவனின்
நாமம் அதை செப்பு
அகத்தியன்
என் நாமம் அதை செப்பு
உமக்கு
யாமிருப்போம்
நவகோடி
சித்தனின் நல்லாசி பெற்றவனே
ஏன்
மனச்சலனம் காண்கிறாய்
யாம்
உன் அருகில் அல்ல - உன் உள் இருந்து உமை காப்பேன்
நீ
சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மந்திரமே
நீ
இடும் ஒவ்வொரு புஷ்பங்களும் எனக்கு பன்னீர் புஷ்பங்களே
நீ
இடும் ஒவ்வொரு தீபமும் எமக்கு பெரும் தீபமே
உமை,
நீ பூசை நிலையில் நீ எப்படி செய்தாலும் யாம் மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்வோம்
நீ
என் பாலகன் அல்லவா
உமை
யாம் விழியாக காப்போம் என் மகனே
வீண்
மனச்சலனம் காணாதே
மகிழ்ச்சியுடன்
வாழ் மகனே
முடிவில்
என்னிடம் தஞ்சம் புகுவாய்
முற்றே
----------------------------------------------------------------
கேள்விகள்
தவத்தில் ஆழ்ந்து செல்லும் முறை
யாது
ஆகாரம் மூலமாக இல்லாமல் நேரிடையாக உடலுக்கு ஆற்றலை பெற்று தந்து மல ஜலம் இல்லாமல் வாழ்ந்து உடல் அழியாமல் பாதுகாக்கும் வழிமுறை யாது.
சித்தர்களுடன்
பேசும்
கலை
வருவதற்கு
நாம்
எப்படி
தகுதி
பெற
முடியும்
தமிழ்
அன்னையை
எவ்விதம்
எங்கே
வழிபட
வேண்டும்.
முன்
உரைத்தேனே என் மகனே
யாம்
உன் அருகில் அல்ல உன்னுள் இருந்து உமை காப்பேன் என்று
நீ
என்னிடம் தஞ்சம் புகுவாய் என்று உரைத்தேனே
யோக
நிலையை முழுவதுவும் மேற்கொள்
யோக
நிலை பெற்ற உடனே சித்தி பெறுவாய்
குண்டலிகளின்
சக்ரமது ஏழு சக்ரமும் உந்தனுக்கு ஆற்றல் தருமே
ஆற்றலை
பெற்று விட்டாலே என்னிடம் நீ தஞ்சம் புகுவாய்
உமை
யாம், உன் மனதில் தோன்றி யாமே நவகோடி சித்தனும்
உனக்கு
நல்லாசி புரிவானே
வெறும்
கர்ம நிலை அது செல்லாது
தருமத்தை
நிலை நிறுத்த தினம் த்யானம் செய் தானம் செய்
ஆலய
பனி அதை செய்
உமக்கு
யாம் நாடி வழி நற்பலன்களை பின் உரைப்பேனே
நான்
ஆலயம் செல்கிறேன்
அருள்தனை
பின் உரைப்பேன் முற்றே
No comments:
Post a Comment