Monday, 6 April 2020

திங்களூர் - பங்குனி உத்திர நட்சத்திரம் பொர்ணமி தினம்மாலையில் சந்திரன் உதயமாகும் போது , சந்திரனுடைய ஒளிக்கதிர்களும் சிவலிங்கத்தின் மீது படரும்

🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

சந்திர பகவான் சிவனை வழங்கிய ஸ்தலம்

திங்கள் – திங்களூர்

இத்தலம் திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு கயிலை காட்சி தந்தருளிய திருவையாற்றுக்கு கிழக்கில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் கீழுர் என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரை சந்திரன் வழிபாடுகள் செய்து தன் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டமையால் , திங்களூர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

இத்தலத்திலுள்ள கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் அருள்மிகு கைலாசநாதர் ஆகும். அம்பாள் பெயர் பெரியநாயகி அம்மன் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீபெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.

பங்குனி உத்திர நட்சத்திரம் பொர்ணமி தினம் இத்தினத்திற்கு முதல் நாள் , இத்தினத்திற்கு மறுநாள் ஆக மூன்று நாட்களும் , சூரியன் உதயமாகும் போது சூரியனுடைய ஒளிக்கதிர்களும் , மேற்கண்ட மூன்று நாட்களிலும் , மாலையில் சந்திரன் உதயமாகும் போது , சந்திரனுடைய ஒளிக்கதிர்களும் சிவலிங்கத்தின் மீது படரும்.

அது சமயம் தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஒரே நாளில் , இரெண்டு கிரகங்களின் பூசனைகள் காலையிலும் , மாலையிலும் நடைபெற்று வருவது அதிசயத்தக்கதாகும் . இச்சிறப்பு வேறு எங்கும் கிடையாது. கைலாசநாதருக்கு எதிரில் வடகிழக்கு மூலையில் சந்திர பகவான் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

திங்களூர் சந்திர புஸ்கரணியில் நீராடி , வெள்ளரளி , பச்சை அரிசி , பொங்கல் செய்து மூலவர் சிவபெருமானுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் , சந்திரனுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் அணிவித்து , முத்து பதித்த ஆபரணமோ, வெள்ளை மோதிரமோ அணிந்தும் , சந்திர தோஷ காலத்தில் விரதம் இருந்தும் சந்திர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

 திங்கட்கிழமை வரும் பௌர்ணமியன்று திங்களூர் இறைவனை வழிபடுவது சிறப்பு மிகுந்தது. கார்த்திகை மாத சோமவார விரதம், சித்திரை மாத பௌர்ணமி விரதம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் , அபிராமி அந்தாதி பாராயணம், சந்திர காயத்திரி மந்திரம், சந்திர கவசம் , அஷ்டோத்ர சதநாமாவளி பாராயணம் ஆகியவை மூலம் நமக்கு வளம் பெருகும் ; வற்றாத செல்வம் சேரும் என்பர்.

நமது மனதினைச் செலுத்தும் கிரகம் சந்திரன் என்பதால் , 27 நட்சத்திரங்களையும் 27 பெண்களாக உருவகப்படுத்தி , அவர்களின் கணவனாக சந்திரனைக் கூறுகிறார்கள் . எனவே எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராயிருந்தாலும் இங்குள்ள சந்திரனை வணங்கி , சந்திரன் வணங்கி அருள்பெற்ற அம்மை அப்பனை நாமும் வழிபட்டு வரலாம்

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment