பொதிகை அனுபவங்கள்
2016 இல் பொதிகை சென்று இருந்த போது வெள்ளை கரடி வடிவில் ஒருவருக்கு கட்சி அளிப்பேன் என்று அகத்தியர் முன்னரே நாடியில் உரைத்தார்.
நாங்கள் அனைவரும் முதல் முறை பொதிகை மலைக்கு செல்கிறோம் . அந்த மலையை பற்றி கேள்வி பட்டது உண்டு. வனச்சரக கைடு விடம் விசாரித்த வரையில் வெள்ளை கரடி என்ற ஒன்று கிடையவே கிடையாது. வெள்ளை கரடி பனிக்கரடி , பனி பிரதேசங்களில் தான் வாழும். பொதிகை மலையில் வருவதற்கு சாத்தியமே இல்லை.
நாங்கள் இரு குழுவாக பிரிந்து நடந்து சென்றோம். மெதுவாக நடப்பவர்கள் பின்னல் வர நான் மற்றும் சிலர் வேகமாக நடக்க முன்னாள் சென்றோம். வெள்ளை கரடி தரிசனம் வாங்க போகிற நபர் பின்னல் வருகிறார். அவர்களுக்கும் எங்களுக்கு வெகு தூரம், அரை மணி நேர நடை பயண வித்தியாசம்.
அப்போது அவர்கள் வெள்ளை கரடி மரத்தில் தொங்கி கொண்டு அவர்களுக்கு காட்சி அளித்ததாக கைடு மற்றும் அந்த அன்பர், மற்றும் அவோருடன் வந்தவர்கள் பின்னர் தெரிவித்தனர். அனைவருக்கும் அதிசயமாக இருந்தது. கைடு தான் கூப்பிட்டு காட்டினார். கரடி இருக்கிறது சத்தம் போடாமல் மெதுவாக வாருங்கள் என்றார். அவர் சுட்டி காட்டிய இடத்தில பார்த்த போது தான் தொலைவில் வெள்ளை கரடி மரத்தில் தொங்கி ஆடி கொண்டு இருந்தது. அது எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களுக்கு தான் பயம். நடுங்கியவாறு ஒருவழியாக அந்த இடத்தை கடந்து வந்தோம் என்றார்.
மேலும் கைடு க்கு ஒரே ஆச்சரியம், இதுவரை தாம் பணியாற்றியதில் பல வருடங்களில் இது ஓலா வெள்ளை கரடியை பார்த்ததே இல்லை. இந்த மாதிரி ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. எண்களில் யாருமே இந்த வகை கரடியை பார்த்ததாக சொன்னதில்லை என்றார்.
சித்தர் தரிசனம் சர்வ பாப விமோசனம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
No comments:
Post a Comment