Saturday 25 April 2020

நீர் மேலாண்மை -ஆசிரம நிகழ்வுகள்

தற்போது உயர்திரு சதீஷ் அவர்கள் போர்வெல் அமைப்பதற்கு மேலும் ரூபாய் 25000 கொடுத்து உதவி உள்ளார். இவரிடம் உதவி கேட்டு 2 நாள் கூட ஆகவில்லை. இவ்வளவு பணம் கொடுங்கள் என்று கூட கேட்கவில்லை.  வெறுமனே போர்வெல் அமைக்க ஒரு குழு உருவாக்கி மாதாமாதம் ஒரு சிறு தொகையை சேமித்து வருகிறோம், இவ்வளவு பணம் இதுவரை சேர்ந்துள்ளது என்று மட்டும் தான் கூறினேன். அவர் பெரிய மனம் கொண்டு, மீதமுள்ள முழு தொகையும் தாமே கொடுத்து விடுவதாக கூறி லாக் டவுன் முடிந்தவுடன் ரூபாய் 45 ஆயிரம் அளிக்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் நேற்றே ரூபாய் 20000 கணக்கில் செலுத்தினார், மீதம் உள்ள பணம் இன்றே செலுத்தி விட்டார். பெரிய மனம் கொண்டவர். நல்ல காரியங்களை தள்ளி போட கூடாது என்று நினைத்து, தாம் அடுத்த மாதத்தில் ஏதாவது சூழ்நிலையால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று நினைத்து, இப்போதே கையில் இருந்து பணம் கொடுத்து விட்டால் எந்த ஐயமும் வராது. மேலும் அடுத்த மாதம் என்றால் வேறு யாரவது அதற்குள் பணம் கொடுத்து விட்டால் நமக்கு அந்த வாய்ப்பு குறைந்து விடும் என்று எண்ணி, இப்போதே கொடுத்து பெரும் புண்ணியம் தேடிக்கொண்டார். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தால் பெரும் புன்னியம்.  நீர் நிலைகளை உருவாக்கி வழிபாட்டுக்கான தண்ணீர், குடிக்க, சமைக்க தேவையான தண்ணீர் ஆகியவற்றுக்கு வித்திட்ட புண்ணியம் ஒவ்வொரு முறை அந்த நீரை எடுத்து அய்யனுக்கு அபிஷேகம் செய்யும் போதும், ஒவ்வொரு முறை வருபவர்களுக்கு தாகம் தணிக்கும் போதும், ஒவ்வொரு முறை அந்த நீரில் அன்னதானம் சமைக்கும் போதும், தல வ்ருக்ஷங்கள் பல வ்ருக்ஷங்கள் வளர  நீர் ஆதாரமாகவும் இருக்கும், அந்த வ்ருக்ஷங்கள் மூலம் பல நட்சத்திரகளுக்கு உரிய எளிய விருக்ஷ வழிபாடு மூலம் பலர் பயனடைவர். அப்போது அந்த புன்னியத்திலும் நீருக்கும் பங்கு உண்டு. ஆலயம் அமைவதற்கு முன் நிச்சயம் கோசாலை  வரும். அதற்கும் நீர் மிகவும் தேவைப்படும். கோசாலை யில் இருந்து கிடைக்கும் புண்ணியத்திலும் நீருக்கு பெரும் பங்கு உண்டு. மனிதன், விலங்குகள், தாவரங்கள் எல்லாவற்றிற்கும் வாழ்வாதாரம் நீர் தான். பழங்காலத்தில் இந்த ஆசிரமம் அருகே நீரோடை இருந்தது. இப்போதும்  வறண்டு இருக்கிறது. அங்கே பல முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள். வாணிபங்கள் நடந்தது. எனவே நீர் நிலைகள் இருக்கும் இடங்களில் செல்வம் செழிக்கும். இதனை உணரும் ஒரு சிலரே ... திரு சதீஷ் அவர்களை போல ஆர்வத்துடன் பணி செய்கிறார்கள். 

மேலும் கனகராஜ் அவர்கள் ஒரு தொகையை அளிக்க உள்ளார். அவர் அளித்த பின் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்று பார்த்து, லாக் டவுன் காலம் முடிந்ததும்  வேலை ஆரம்பிக்கலாம். ஒரே நாளில் போர்வெல் செய்து முடித்து விடுவார்கள். மற்ற வேலைகள் ஒரு வாரத்துக்குள் முடியும். 

மேலும் தொடர்ந்து போர்வெல் மாதா மாதம் அளிக்கும் தொகை வரவில் வைக்கப்படும். மேலும் குழாய்கள் அமைத்தல், சொட்டு நீர் பாசனம், மேல் நிலை தொட்டி ஆகியவற்றுக்கு போர்வெல் குழுவில் நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதி உபயோகப்படுத்தப்படும். பாவ புண்ணிய கணக்கில்,  நீர் நிலைகளை மாசு படுத்துதல், கிணற்றை மூடுதல், ஆற்றில் மணல் திருடுதல்,  நீரை வீணாக்குதல், நீர் கொடுக்காமல் தடுத்தால் ஆகிய நீர் சம்மந்தப்பட்ட குற்றங்கள் மகா பாதக செயல்கள் ஆகும். இதே அன்னூரில் கிணற்றை மூடியதால் பெரும் நிலப்பகுதி விற்க முடியாமல் தடைபட்டு இருந்தது. நம் குருஜி அவர்கள் ஞான த்ருஷ்டியால் அதை உணர்நது , அங்கே மூன்று கிணறுகள் இருந்ததாகவும், வயலுக்கு நீர் பாய்ச்சும் கிணறுகளை மூடியதால் சாபம் உள்ளது என்று கண்டு அறிந்து நிவர்த்தி செய்து பின்னர் நிலம் விற்று போனது. நீர் குற்றங்களால் துன்பம் அனுபவிப்பவர்களை கண்கூடாக கண்டு வருகிறோம். அதே போல தான் நீர் மேலாண்மை மூலம் புண்ணியமும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் வாழ்வும் உயரும் என்பதுவும் திண்ணம். ஐயனின் உமையொருபாகமாகிய உலோபமுத்திரை தாமிரபரணி நதி ஸ்வரூபம் ஆவார்கள். கங்கை நதியின் அக்கா ஸ்தானம் உடையவர்கள். அனைத்து ரிஷிகளும் நீரை கமண்டலத்தில் உடன் வைத்து கொள்வார்கள். எனவே நீர் என்பது மிக உயர்ந்த ஒரு தன்மையை குறிக்கும். 

உயர்திரு சதீஷ் அவர்களும், நீர் மேலாண்மைக்குக்கு உதவிய அனைவரும் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவித்துவம் கொண்டு வாழ்வர். அகத்தியர் பீடம் இருக்கும்மட்டும் பல நூறு ஆண்டுகள் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும். எல்லா ஆலயங்களிலும் இவ்விதம் வாய்ப்பு அமைவதில்லை. கல்லாறு அகத்தியர் ஆலயத்தில் அமைந்ததா தெரியவில்லை. சமீபத்தில் மதுரையில் அகத்தியர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் நீர் மேலாண்மை செய்யும் தொண்டு அமையவில்லை. அதே சமயம் சீலியூர் அகத்தியர் ஆலயத்தில் நீரை வரத்தை ஒருவன் கெடுத்து உள்ளான். அய்யன் கண் திறந்து அவர்களை நோக்கி கொண்டே உள்ளார்கள். சீலியூரில் ஒருபுறம் அய்யனும் மறுபுறம் சுவர்ண மலை முருகனும் நோக்கிய வண்ணம் உள்ளர்கள். மக்கள் ஆலயத்துக்கு கூடும் போது நாங்கள் செல்லும் போது காரிலும் பைக் இலும் கடினப்பட்டு அபிஷேக நீர் , குடிக்கும் நீர் ஆகியவை கொண்டு செல்கிறோம். அளந்து அளந்து குடிக்க வேண்டி இருக்கிறது. கண்முன்னால் பெரிய மருத்துவ குணம் கொண்ட தீர்த்தம் உண்டு. போர்வெல் உண்டு. மலை மேல் 300 அடி உயரத்தில் போர்வெல் 40 அடியில் தண்ணீர் என்பது உலக அதிசயம். நீரின் சுவையோ சதுரகிரி நாவல் ஊற்று நீரின் சுவையை ஒத்து இருக்கிறது. அங்கேயும் சந்தன மகாலிங்கம் உண்டு. கண் முன்னே நீர் இருந்தும், ஜெனீரேட்டர் கருவி பழுதாக்கிய குறுகிய எண்ணம் படைத்தவர்களை நினைக்கும் போது துன்பமாக உள்ளது. இருந்தும் வாய்க்கு எட்டாத நிலை. இந்த பதிவின் மூலம் என் மன ஆக்கினையை அய்யாவிடம் சமர்ப்பிக்கிறேன். ஒரு வழி பிறந்து நீர் நிலைகட்டும். அங்கே சீலியூரில் வனமும் உண்டு. சிறுத்தை புலிகள், மான்கள் உண்டு. நீர் இருக்கும் சமயத்தில் அவை ஆலயம் வந்து அங்கே தொட்டியில் தாகம் தீர்த்து செல்லும். அவைகளுக்கு கூட இப்போது ஏமாற்றம் தான். சீலியூரில் அகத்தியர், சுற்றிலும் 6 மகான்கள், இரண்டு விநாயகர், ஒரு முருகர், காமதேனு, ப்ரத்யங்கிரா, 18 சித்தர்கள், சந்தன மகாலிங்கம், இரண்டு நந்தி, 7 ரிஷிகள் ஆகிய சுமார் 50 சிலைகள் உண்டு. வெறும் நீரால் மட்டும் அபிஷேகம் செய்ய  வேண்டுமானால் எவ்வளவு நீரை கீழே இருந்து சுமந்து வர முடியும். பாவம் அந்த சிலைகள்..சரியான போதுமான நீர் இன்றி அரை குறை யாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பதிவின் மூலம் அய்யனுக்கு எனது வேண்டுகோளை சமர்பிக்கிறேம். இன்னும் 3 மாதத்துக்குள் வழி பிறந்து நல்ல நீர் நிலை சீலியூரில் அமைய அயன் அருள் புரிய வேண்டும். புரிவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தனது சேய்கள் மனக்குறை கொண்டால் தந்தை எவ்வாறு நிம்மதி கொள்ள முடியும். அவர் தீர்த்து வைப்பார். 

தென்னாடுடைய சிவமே போற்றி ..... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

ஹர ஹர நம பார்வதி பதியே ஹர ஹர மகாதேவா

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய

ஓம் அகத்தீசாய நமஹ

ஞால முதல்வனே போற்றி

ஞானபண்டிதனே போற்றி

ஓம் நமோ நாராயணாய

சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுத்து பிழை இருப்பின் பொறுத்தருள்க 🙏

ஹரிஹரன் அய்யா சீலியூர் போன் 9444492998


No comments:

Post a Comment