தினம் ஒரு சித்தர் பாடல்
🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🌸
சிவவாக்கியம்-155
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆழம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.
அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும்.
பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்..

No comments:
Post a Comment