Saturday 11 April 2020

பொது நாடி வாக்கு 11/04/2020


அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்
பொகளூர் கிராமம்
மேட்டுப்பாளையம் தாலுகா
கோவை மாவட்டம்

பொது நாடி வாக்கு பலன்கள்

கேட்பவர்  -தி . இரா. சந்தானம்

நாடி வாசிப்பு - குருஜி இறைசித்தன் அவர்கள்

நாள் : 11/04/2020, சனிக்கிழமை காலை 11.45 மணி


அகத்தியரின் வரிகள் கீழ் வருமாறு



சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவா போற்றி

சீர்மிகு உலகை படைத்த பரனே போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி

சிரம் தாழ்ந்து அகத்தியன் யானே என் மகனுக்கு அருள் தனை உரைக்கிறேன் கேள் மகனே

இன்னவனே

பொதிகை வாழ் அகத்தியன் யானும் நான்முகனின் நல்  வாக்கு தனை பெற்று

அன்னை ஆதி பராசக்தியின் பாதம் பணிந்து உறைப்பேன் கேளடா

இப்பிரபஞ்சம் தன்னிலே பிணி பீடை எல்லாம் வரும் என்று

குரு பூசை தனிலே

"வெள்ளை தோல் பொருந்திய மானிட பிண்டங்கள் அழியும் "

என்று அன்றுரைத்தேன் , அறிவாய் நீ

இப்பிரபஞ்சம் தனிலே பிணி பீடை எல்லாம் வரும்

சித்திரை முதல் நாள் கொண்டு

படிப்படியே விலகும் அப்பா

நான் சுவாசித்த தமிழும்

என் மண் தனிலே இன்னல் ஏதும் நேராதே

வராது என் மகனே

விதியின் கோடுகளுக்கு எல்லாம் ஒன்றே

விதியும் சக்தியே வேதமும் என் அப்பனே

அடிக்கும் சூறை காற்று தனிலே பிஞ்சென்றும் , கனியென்றும் காயென்றும் பாராது என் மகனே

சிக்கென பிடியும் மழலைகளே என் அப்பன் சிவனை

தீருமே துர்க்கர்மங்கள்

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம் அப்பா

வாயில்லா ஜந்துக்களை வதைத்ததால் வந்த வினையே

வான் பைரவனின் சாபத்தால்

சிதைத்த பிண்டங்களின் துர் பீடையால் பட்டதே

விதியை மதியால் வெல்லலாம் - மருத்துவம்

அந்த விதியும் நானே வேதமும் நானே

சைவ சித்தாந்தம் தனை கையிலெடுத்து பூஜித்தாலே

வினைகள் அகலும் அப்பா

என் வாக்கு தனை ஏற்று

என் மழலைகளே மனம் தளராதே

உமை யாம் காப்போம்

உலக மக்களின் நிலை யாமறிவோம்

மண்ணில் இருக்கும் சித்தனெல்லாம்

விண்ணை நோக்கி வருவானே அப்பா

நிலை அதை பின்பற்று இன்னல் இல்லையே மகனே

விதியை வெல்லவே ஓர் நிலை வேண்டும் அப்பா

என் மகனே வாக்குரைத்தோம்

காலம் தனிலே எதிர்நோக்கு

கலி முற்றியதே

கலியும் மாறும் அப்பா கவலை கொள்ளாதே

கலி மாறி நிலை அகலுமே

ராஜ கனியாம்  ராஜ மூலிகையாம் கரும்சீரகத்தினை உள் பருகு

பீடைகள் விட்டொழியுமே

சித்திரை முதல் நாள் தினம் கொண்டு சீர் பெரும் அப்பா உலகம் அது

யாம் இருக்கிறோம் மக்களை காக்க

அஞ்சுவது ஏன் மகனே

யாம்  - நல்லதோர் கால நிலைதனிலே

உமக்கு வாக்கு உரைப்போம் என்று அன்றுரைத்தேனே

அறியவில்லையா என் மகனே

மாந்தரின் விதியால் வந்த வினையே அப்பா

உலகம் பிணி பீடையிலிருந்து விடுபடுமே

மனம் தளராதே

என் அப்பன் வேலவன் துணை கொண்டு

வேண்டுதனை யாம் தருவோம்

சீர் பெரும் அப்பா வாழ்வு

பைரவனை தொழுதாலே பகை எல்லாம் விலகுமப்பா

முற்றே

8 comments:

  1. வாக்கு படித்தேன் அருமை இந்த ஒரு வார்த்தை எனக்கு புரியவில்லை விளக்கவும். மணிமல்லர்கள் என்பவர் யார்? நன்றி

    ReplyDelete
    Replies
    1. பிரமனிடம் பல வரங்கள் பெற்று வெல்லமுடியாதோராகத் திகழ்ந்த அசுரர்கள் மல்லன், அவன் தம்பி மணி ஆகியோரின் தொல்லை தாங்காமல், ஏழுமுனிவர்கள் இந்திரன், திருமால் சகிதம் ஈசனிடம் முறையிடுகிறார்கள். மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு, ஹரித்ரன் என்ற பெயரில், மார்த்தாண்ட வைரவராக சிவன் நந்தி மீது எழுந்தருளுகிறார். மணியும் மல்லனும் மார்த்தாண்ட வைரவரால் கொல்லப்படும் போது, தன் வெண்பரியை அவருக்குப் பரிசளிக்கும் மணி, அவரது எல்லா ஆலயங்களிலும் கோயில் கொள்ளும் வரத்தையும் பெறுகிறான். அவனுக்கு அடியவர்கள் ஆட்டிறைச்சி படைத்து வழிபடுகிறார்கள். மல்லனுக்கு கண்டோபா வரமளிக்க முற்பட்ட போது, அவன் நரமாமிசமும் உலகின் அழிவும் விழைந்ததாகவும், சீற்றமுற்ற கண்டோபா அவன் தலையரிந்ததாகவும், ஆலயப்படிகளில் பக்தர்களின் கால்களால் அவன் இன்றும் மிதிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. தொன்மங்களின் படி, மணிமல்லர்களின் அழிவு பிரேம்புரி எனும் தலத்தில் நிகழ்ந்தது.[14][15]

      கண்டோபாவின் தேவியர் மாலசை, பானு ஆகிய இருவரும் சிவனின் தேவியரான பார்வதியும் கங்கையும் எனப்படுகிறது. மாலசையின் சகோதரரும் கண்டோபாவின் அமைச்சருமான கேகடி பிரதானன் திருமாலின் அம்சம்.[16], அசுரரைக் கொல்ல கண்டோபாக்கு உதவிய நாய், கண்ணனின் அம்சம். வெண்பரி நந்தியின் அம்சம். மணியும் மல்லனும் மது கைடபரின் மறுபிறவிகள் என்று கண்டோபா பற்றிய தொன்மங்கள் மேல்நிலையாக்கப்படுகின்றன.[17] சில மரபுரைகளில் மணியும் மல்லனும் மணிமல்லன் என்ற ஒரே அசுரன். சில மரபுரைகளில் மாலசை அல்லது பானு எனும் கண்டோபாவின் தேவியும், நாயும், மணியின் குருதியைச் சேகரித்து, அவனை அழிக்க உதவுகிறார்கள்.[18]

      Delete
  2. இதை எழுதியவர் யார் என்று கொள்வீர்களா ஐயா..? வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. நாடி வாசிப்பு - குருஜி இறைசித்தன் அவர்கள்

      Delete
  3. மிக்க நன்றி...ராஜ மூலிகை என்பது என்ன அய்யா ?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete