*மகரிஷி அருளுரை*
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்....
ஏப்ரல்,09....
துன்பம் இல்லாத நிலை :
.
"ஆறாவது அறிவு முழுமை பெறுகிறது என்றால், விரிந்து விரிந்து பரம் பொருளோடு இணைந்து இதற்கும் மேலே விரிய முடியாத அளவு அந்த முழுமுதற் பொருளோடு இணைந்துவிட்ட பிறகு இனி எங்கே விரியும்? அதற்கு மேல் விரிவு இல்லை. அந்த வகையிலே இந்த மனம் அசையாப் பொருளை அறிந்து அதோடு நிலைத்துவிட்டால் அங்குதான் மனம் என்பது நிலைக்க முடியும் மற்ற பொருட்கள் எல்லாம் அசைந்து கொண்டே இருக்கக் கூடிய தன்மையுடையவை; மாறிக் கொண்டே இருக்ககூடிய தன்மையுடையவை. அதே போல மனமும் அசைந்து கொண்டு மாறிக் கொண்டுதான் இருக்கும். அதிக வேகமாக அசைந்து கொண்டு இருக்கின்ற பொருளோடு மனதை வைக்கின்ற வரைக்கும் மனம் அந்த அளவுக்கு ஆடிக்கொண்டு அசைந்துகொண்டு தான் இருக்கும்.
இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில் இந்த உடலைப் பாதுகாக்க, வாழ்க்கையை நடத்திட, அசையும் பொருட்களோடு தொடர்பு கொள்வது அவசியம் தான். ஆனால் அதே நேரத்தில் எப்பொழுதும் அசைந்து கொண்டே ஆடிக்கொண்டே இருக்கின்ற நிலையில் இருக்கின்றதைவிட நிலைத்து இருப்பதும் அவசியம் தான். ஆகவேதான் மனிதனுக்கு நிலைத்த பொருளாகிய கடவுளை, தெய்வத்தை, வழிபடுவது, வணங்குவது, அதை உணர்ந்து கொள்வது, அதோடு லயித்து இருப்பது என்பது அவசியமாயிற்று. மனிதனின் அறிவு எட்டிய நிலையில் அந்த பூரணத்துவம் வந்துவிட்டதானால், அப்பொழுதுதான் அடிக்கடி உணர்ச்சிவயப்படக் கூடிய தன்மையும், பேராசை, சினம், கடும்பற்று, இன்னும் முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று ஆறு குணங்களாக தான் மாறாதிருக்கக்கூடிய ஒரு நிலைத்த பேறு உண்டாகும்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"மனதை அடக்க நினைத்தால் அலையும்,
மனதை அறிய நினைத்தால் அடங்கும்".
"அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி".
மனதின் அடித்தளம் இறை நிலை:
"அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும் உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".

No comments:
Post a Comment