நேற்று
29.04.2020 இரவு சுமார் 11 மணி அளவில் உறங்க செல்லும் போது த்யானம் செய்தேன். அப்போது அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மனக்கண் முன் வந்து நின்றன. சரி , ஆகட்டும் , இப்போது இன்று நடந்த நிகழ்வுகளில் ஏதேனும் உனக்கு கேட்க வேண்டி உள்ளதா என்று உள்ளே இருந்து ஒரு குரல். சரி கேட்போமே என்று சிறிதும் யோசிக்காமல் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்று வந்து கொண்டே இருந்தது. அடடா கேட்பது யார் என்று கூட புரியவில்லை. சரி கேள்வியும் நீயே பதிலும் நீயே என்று விட்டு விட்டேன்.
1. சுகப்ரம்மத்துக்கு
கேள்வி - தங்களை இப்போது எப்படி சந்திப்பது, தரிசனம் பெறுவது
சுகப்ரம்மம்
பதில் - நீ, வட இந்தியாவில்
நான் பாகவதம் உரைத்த அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்து பாகவதம் கையில் வைத்து கொண்டு படி. அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பரவாயில்லை. அப்போது 7 நாள் அங்கே தங்கி தினமும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து பாகவதம் படி. அப்போது நானும் நீ படிப்பதை எல்லாம்
கேட்பேன். யார் யார் பாகவதம் படிக்கிறார்களோ, எங்கெல்லாம் படிக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் சூட்சுமமாக வந்து ஆசி புரிவேன், காட்சி கொடுப்பேன்.
2. அஸ்வத்தாமன்
இப்போது எங்கே உள்ளார்
அஸ்வத்தாமன்
பதில் - எங்கெங்கெல்லாம் வஞ்சம் இருக்குமோ, எங்கெங்கெல்லாம் போர் நடக்குமோ, எங்கெங்கெல்லாம் ஆயுதங்கள் பிரயோகம் செய்யப்படுமோ, அங்கெங்கெல்லாம் அந்த ஆயுதத்தின் முனையில் நான் இருப்பேன். வஞ்சம் கொண்டவர்கள் மனதில் நான் இருந்து வஞ்சம் தீர்ப்பேன். இவர்களது முகங்களின் மூலமாக தான் என்னை காண
முடியும்.
3. வேல்
தத்துவம் யாது, இளையனார் வேலூரில் சிறப்பு என்ன
பதில்
- முருகப்பெருமான் - வேலாயுதம் நிறுவிய இடமே இளையனார் வேலூர். அதனை தாண்டி யாரும் அதன் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. மூவுலகிலும் எம்மையும் எம் தந்தையும் தவிர யாராலும் அதனை எதிர்க்க முடியாது. சூக்ஷுமமாக நான் சிவசக்தி ஸ்வரூபமாக வேல் இல் உள்ளேன். அதனை புரிந்து கொள். முற்காலங்களில் வேல் வழிபாடு மிகவும் உண்டு. வேல் இருக்கும் இடத்தில கந்தன் இருப்பான், அன்னை இருப்பாள், சிவமும் இருக்கும். எனவே வேல் வெறும் ஆயுதமன்று, அதையே சகல சொரூபமாக பார்த்தால் அதுவே எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும். வேல் வடிவத்தை நோக்கினால் கீழே ஒரு புள்ளியில் ஆரம்பம், பின்னர் நெடித்து வளர்ந்த தண்டு பகுதி, பின்னர் இதுவே இரண்டாக பிரிந்து இடப்புறமும் வலப்புறமும் வளைந்து, பின்னர் நடுப்புறம் நோக்கி பாய்ந்து சென்று, பின்னர் ஒரு புள்ளியில் இருபுறமும் இனைந்து கூர்மையாக இருப்பதே வேல். அதன் ஆரம்பத்தில் சிவம் உண்டு இரண்டாக பிரியவது இடகலை பிங்கலை நாடிகள், வள்ளி, தெய்வானை தத்துவம் ஆகியவை, கூர்மையான நடுவு பகுதி உச்சி மற்றும் தண்டு எமக்குரியதாகும். இதுவே முருக வழிபாட்டு தத்துவம். இந்த வேல் போன்ற ஒரு அமைப்பே உன் உள் சூட்சுமமாக இருக்கிறது. அதனை கண்டு உணரவே வேல் வழிபாடு. வேலுண்டு வினையில்லை.
ஆசிகள்.
4. அகத்திய
முனி என்று ஒரு ஊர் இமய மலை சாரலில் உள்ளது - அதன் பெருமையை பற்றி உரைக்கவும் அய்யனே
பதில்
- அகத்திய முனிவர் - மகனே, அகத்தியன் இவ்விடத்தில் இருந்தது உண்மையே. அவ்விடத்திலேயே அமர்ந்து இருந்திருந்தால் அகத்தியனுக்கு தமிழ் கிடைத்து இருக்குமா, தமிழ் மூலம் அகத்தியனை வானுலகம் போற்றுவதற்கு வழி செய்ததே எமது தந்தை மகேசுவரன் ஆயிற்றே. அகத்தியன் கிளம்பிய இடத்துக்கு சிறப்பு என்றால் அதை விட அகத்தியன் என்றென்றும் வாழும் தமிழ் தாய் மடிகள் தான் எமக்கு என்றுமே சிறப்பு. நாம் அனைவரும் தமிழ் அன்னையின் மடிகளில் தவழும் பிள்ளைகள். குறையேதும் வராது. நிறைவு நிறைவு நிறைவு.
5. அய்யனே
ஒளவை பிராட்டியார் பற்றி உரைக்கவும்
பதில்
- அகத்திய முனிவர் - அவள் ஒரு தெய்வ பிறவி, தமிழ் தாயின் பூரண அனுக்கிரகம் பெற்றவள். அவளது பெயரிலேயே நீ தெரிந்து கொள்ளலாம்.
கோடியில் ஒருவரே ஒள என்ற எழுத்தை
தனது நாமத்தின் முதல் எழுத்தாக அமைத்து கொள்வார்கள்.அந்த எழுத்தின் சக்தி விநாயகரை சாரும். மேலும் சக்தி ஸ்வரூபமான என் குருநாதன் முருகனை சாரும். தமிழ் அன்னையின் தவப்புதல்விக்கு நிகராக இன்று வரை வேறு யாரும் தோன்றவில்லை என்பதே அவளது பெருமை.
6. ரகோத்தமர்
பிருந்தாவனம் பற்றி சில வார்த்தைகள் கூறவும்
பதில்
- ரகோத்தமரிடம் இருந்து - மிக்க மகிழ்ச்சி பிள்ளாய், எம்மை பற்றி கூறும் போது யாம் வாழ்ந்த காலங்களில் யாம் இந்த இடங்களில் கையில் தண்டத்துடன் எமது ஆடை என் தலை உச்சியை மூடிய வண்ணம் உடை அனிந்து எமது சீடர்களுக்கு அருள் பாலித்து வந்த இடம் அது. நீ என்ன இப்போது
நான் உள்ளே இருப்பேனா அருள் புரிவேனா என்றெல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறாயா....... (நடுவில் ராகவேந்திரர் வந்து பேச்சை தொடர்கிறார் ) - மகனே எம் போன்ற மகான்கள் எல்லாம் எமது காலம் முடிந்த வுடன் சூட்சுமமாக தத்தமது பீடங்களில் அமர்ந்து இந்த உலகம் முழுவதுக்கும் எமது அருள் அலைகளை பரப்பி கொண்டே இருப்போம். அப்போது எம் சந்நிதியில் ஒருவன் வந்து நின்று வணங்கினால் அவனது மனதின் எண்ண அலை பீடத்தினுள்ளே அமர்ந்து இருக்கும் எம்மை வந்து அடையும். அதனால் தான் எண்ணங்களை சிதற விடாமல் எம் நாமத்தை ஜெபி, என்னை துதி, எமது பீடத்துக்கு அபிஷேகம் அலங்காரம் தீப ஆராதனை ஆகியவை செய்யும் பொது எமது எண்ணமே உம்முள் மிகும். அப்போது எனது அருள் அலைகள் உம்மை எளிதில் வந்து அடையும். இதற்காக தான் எனது குரு ரகோத்தமர், மற்றும் எமக்கும் பீடங்கள் அமைக்கப்பட்டு
வழிபட்டு வரப்பெறுகின்றன. இங்கே எமது பீடத்துக்கு உள்ளே வந்து தான் தொழ வேண்டும் என்பது இல்லை. அவரவர் இடங்களிலேயே எம்மை நினைத்து மனம் உருகி உமது பிரார்த்தனைகளை வைத்தாலே போதுமானது. இன்னும் ஒரு படி மேலே சென்றால், எமது சேய்களுக்கு ஒரு கவலை என்றாலும் ஒரு மகிழ்ச்சி என்றாலும் எந்த ஒரு உணர்வாக இருந்தாலும், எமது சீடர்களுடன் யாம் எப்போதும் இனைந்து இருப்பதால் உடனுக்குடன் எனக்கு நேரிடையாக அவர்களின் உணர்வுகள் வந்து சேர்ந்து விடும், எம்மை அழைக்காமலேயே, இது பல பிறவிகளாக தொடர்ந்து
வரும். அவர்கள் என்னை நினைத்தாலும் நினைக்காமல் விட்டாலும் யாம் அவர்களுடன் ஏற்படுத்திய இணைப்பை மாற்ற இயலாது. என் சித்தப்படியே அவர்களது வாழ்வு அமையும்.
7. நரேந்திர
மோடி விவேகானந்தரின் மறு பிறவி
என்று கூறுகிறார்களே - அதை பற்றி ....
பதில்
அகத்தியரிடம் இருந்து - ஆம் குழந்தையே. அவனை இயக்குவது ஆட்கொண்டு உள்ளது விவேகானந்தனே. விவேகானந்தனுக்கும் தமது எண்ணத்தை பூர்த்தி செய்து கொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பாக மோடி என்பவர் உள்ளார். அவரே தான் இவர் என்று கூற இயலாது.
அவர் வேறு பிறவி , இவர் வேறு பிறவி நிலை. மோடி என்பவர் சிறுவயதிலேயே விவேகானந்தனை படித்து அவரது ஆன்மாவால் ஈர்க்கப்பட்டு பின்னர் விவேகானந்தனின் ஆன்மாவில் ஆட்கொள்ளப்பட்டு செயல்பட்டு கொண்டு உள்ளார் என்பதே உண்மை.
8. ஒரு மோர் விற்பவள் தஞ்சை பெரிய கோவிலுக்கு கூரை அமைக்க கல் கொடுத்தாள் என்பது பற்றி
அகத்தியர்
- இது எல்லாம் இறைவனின் திருவிளையாடல் மகனே, அந்த மோர் விற்பவரின் மனதில் சேவை செய்ய எண்ணங்கள் தூண்டியது, அவள் ஆலயத்தின் பணியில் பங்கு கொள்ள ஏங்கியது, எல்லாமே இறைவனின் திருவிளையாடல் செயல். தமக்காக ஏங்கும் தமது குழந்தைகளுக்கு இறைவன் என்றுமே இறங்கி வந்து அருள் புரிய கடமை பட்டு உள்ளார். இவ்விஷயத்தில் அப்படியே, தனது தூய அன்பின் மூலம் அந்த பெண் இறைவனின் கருணைக்கும் பார்வைக்கும் பாத்திரமானார்.
Nanri aiya...innum niraya kelvigalai appan Ahthiyaridam kelungal..perantham
ReplyDeleteநல்லது அய்யா
DeleteNo words great ...இது போன்று அற்புதமான பதிவுகள் மாதம் ஒரு முறை அல்லது வரம்ஒரு முறை பதிவு இடுங்கள்..
ReplyDeleteநல்லடபு அய்யா, அப்படியே ஆகட்டும்
Deleteஅருமையான பதிவு... அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி அய்யா
Delete