இன்று 25.04.2020 இரவு 10.30 மணிக்கு படுக்க செல்லும் போது, வாசி கலை நன்றாக ஓடி கொண்டு இருந்தது. அது என்னவோ தெரியவில்லை, எப்போதும் இரவு நேரத்தில் நன்றாக தாமாக வாசி கலை ஓட்டம் தெரிகிறது. சரி இப்போது தியானத்தில் அமர்ந்து ஏதாவது கேள்வியை சித்தார்களிடம் கேட்டு பார்ப்போம் என்று யோசித்து, தியானத்தில் அமர்ந்தேன். என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. யாரோ முகநூலில் கேட்டு இருந்தார்கள், போகர் ஜீவ நாடி எங்கு வாசிக்கப்படுகிறது என்று. சரி போக மகரிஷியை எண்ணி அந்த கேள்வியை கேட்போம் என்று கேட்டு பார்த்தேன். அதற்கு போக மகரிஷியானவர் உரைத்ததாவது, ஐங்கரன் தம்பியை வணங்கி , மகனே, நான் இந்த புவியை எப்போதும் சுற்றி சுற்றி வந்து கொண்டு சூட்சுமமாக பல காரியங்களை செய்து கொண்டு உள்ளோம். நாங்கள் சித்தர்கள் ஒரு குழுவாக பிரிந்து மனித குல மேம்பாட்டுக்காக பணி செய்து வந்துள்ளோம். அவ்வகையில் பல தர்ம அதர்ம நிகழ்வுகளை கவனித்து வருகிறோம். தண்டனை கொடுப்பது எங்கள் செயல் அல்ல. அதர்மத்துக்கான் தண்டனையை அவனவன் செய்த கருமமே விதியாய் மாறி அவனுக்கு அனுபவமாகும். அப்போது பொதுவான சில இயற்கை சீற்றங்கள் சில விதி மாற்றங்கள் ஒரு மொத்த சமூகத்தையே தாக்கும் போது அதில் எல்லோருக்கும் பங்கு உண்டு, தவறே செய்யாதவனுக்கும் கூட விதி தண்டனை அளிப்பது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சமூகத்தில் உள்ள அவலங்களை கண்டு எதுவும் செய்யாமல் இருப்பதே ஒரு குற்றம் தான். குற்றங்களை தாமே செய்ய வேண்டும் என்பதில்லை. குற்றங்களை கண்டும் காணாதது போல , நமக்கு என்ன என்று வாழ்வதும் குற்றமே. எவன் ஒருவன் சித்தர்கள் வழியில் வந்து தனக்கென்று எதுவும் வேண்டாமல் தான் வாழும் இந்த உலகம், இந்த சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செயயும் ஒருவனை தான் நாங்கள் உற்று நோக்குகிறோம். அவர்களை இந்த பொதுவான இயற்கை சீற்றங்கள் இன்னல்கள் தாக்குதல்களில் பாதிப்படையாமல் காப்பாக இருந்து வருகிறோம். இவர்களும் உலகில் பாதிக்கப்பட்டு மடிந்தால், மீதி இருக்கும் சிறு தருமமும் அழிந்து போய் பேரழிவுக்கு வித்திட்டு விடும். எனவே சித்தர்கள் அனைத்து இடங்களிலும் அமர்ந்து தியானம் செய்து மக்களை நல்வழிப்படுத்தி தருமத்தையும் சத்தியத்தையும் காக்க உறுதி பூண்டு உள்ளார்கள். எம் வழி வரும் சேய்கள் பலரும் மூலிகை ரகசியங்களை யாமே உள் உணர்வாய் இருந்து உணர்த்தி மருத்துவம் சம்மந்தப்பட்ட அனைத்து நிலைகளிலும் எம் சேய்கள் எம் ஆனைப்படி எம் வழி பணி செய்வதற்கு யாம் அருள் புரிந்து கொண்டே உள்ளோம். அணைவருக்கும் எமது ஆசி. சுபம்.
Trs..... 25.04.2020
Trs..... 25.04.2020
Nice Sir....
ReplyDelete