Saturday 18 April 2020

திருக்குறள் திருவருட்பா

🔵 திருக்குறள். 1049.🔵
~~~~~~~~~~~~~~~~~~

🔵 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது. 🔵

🔵 மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலேயே நெருப்பில் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது ,எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை. 🔵

🔵 வள்ளுவர். 🔵
~~~~~~~~~~~~~~

🔴 திருவருட்பா. 🔴
••••••••••••••••••••••••••••

🔴 சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை நல்ல சோமன் இல்லை
பாடில்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை
வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை
விவாகமது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே. 🔴

🔴  கூழுக் கழுவேனோ கோத்தணிகைக் கோவே என்
ஊழுக் கழுவேனோ ஓயாத் துயர்ப்பிறவி
ஏழுக் கழுவேனோ என் செய்கேன் என்செய்கேன்
பாழுக் கிறைத்தேன்
ஈது உன் செயலோ  பார்க்கும் இடம். 🔴

🔴  நேற்று இராப் பகல் முழுவதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசி என்கின்ற பாவி இன்று வருமே இதற்கு என்ன செய்வோம் என்று ஏக்கம் கொள்கின்ற ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான்  - ஜீவகாருண்யம்.

🔴 வள்ளலார். 🔴
•••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment